எனக்குப் பிடித்த கதைகள் 17
மேசை என்றால் மேசை ஜெர்மன்மூலம் : பீட்டர் பிக்ஃசெல் (Peter Bichsel) தமிழில்: ந.சுசீந்திரன் நான் ஒரு முதியவனைப் பற்றிச் சொல்லப் போகிறேன். இனி எந்த வார்த்தையுமே பேச மாட்டாத, சிரிக்கவும் கோபப் படவும் கூட சோம்பற் படும் தூங்கிப்போன முகங்கொண்ட ஒரு முதியவனைப் பற்றி. அந்தச் சிறு நகரின் ஒரு தெரு முனைச் சந்திக்கருகில் அவன் வீடு. அவனைப் பற்றி இன்னும் மேலதிகமாகச் சொல்லிக் கொண்டு போவதால் ஆகப்போவது எதுவுமில்லை. மற்றவர்களை விட அவனொன்றும் வித்தியாசமான …