நிழல் உண்பதில்லை
புதிய சிறுகதை. காலம் இதழில் வெளியானது. 2025 விமான நிலையத்திலிருந்த புத்தகக் கடைப்பெண் சலிப்பான குரலில் சொன்னாள். “கவிதைப் புத்தகங்களை யாரும் வாங்குவதில்லை. இரண்டு வருஷங்களாக இந்தக் கடையில் வேலைபார்க்கிறேன். நீங்கள் தான் கவிதைப் புத்தகம் கேட்ட முதல் ஆள்“. “எனக்கு வானத்தில் கவிதைகள் வாசிக்கப் பிடிக்கும்“ என்றான் மதன்குமார். “நீங்கள் கவிஞரா“ என்று கேட்டாள் அப்பெண் “இல்லை. கவிதை வாசகன். உங்களுக்குச் சாக்லேட் பிடிக்குமா. “ “ஆமாம்“ என்று தலையாட்டினாள். “நான் சாக்லேட்டிற்குப் பதிலாகக் கவிதைகளைச் …









