admin

குற்றமுகங்கள்- 2 தங்கப்பல் மோனி

தங்கப்பல் மோனியின் பூர்வீகம் எதுவெனத் தெரியவில்லை. ஆனால் அவன் சீனத்தகப்பனுக்கும் தெலுங்குப் பெண்ணிற்கும் பிறந்தவன் என்றார்கள். சப்பை மூக்கும் சீனப் புருவமும் கொண்டிருந்தான். தொங்கு மீசை வைத்துவிட்டால் சீனனே தான். மசூலிப்பட்டினத்தின் துறைமுகத்தில் மோனி வளர்ந்தான். அந்த நாட்களில் சுவரின் வெடிப்பில் வளரும் செடியைப் போலிருந்தான். யார் யாரோ வீசி எறிந்த எச்சில் உணவுகளைச் சாப்பிட்டான். ஒரு கப்பலை விழுங்கி விடுமளவிற்கு அவனுக்குப் பசியிருந்தது. உணவு கிடைக்காத இரவுகளில் நட்சத்திரங்களைப் பறித்து உண்ண முயற்சித்தான். கோபம் தான் …

குற்றமுகங்கள்- 2 தங்கப்பல் மோனி Read More »

நிதானத்தின் பிரபஞ்சம்

கவிஞர் மணி சண்முகம் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளின் மீது மிகுந்த விருப்பம் கொண்டவர் ஹைக்கூவின் நால்வராக அறியப்படும் பாஷோ, பூசான், கோபயாஷி இஸ்ஸா, மசோகா ஷிகி ஆகியோரின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். ஜப்பானிய ஹைக்கூ வரிசை என எட்டு நூல்களாக விஜயா பதிப்பகம் அழகிய வடிவில் வெளியிட்டுள்ளார்கள். ஹைக்கூ கவிதைகள் கூழாங்கற்கள் போன்றவை. அவற்றின் அழகும் தனித்துவமும் முழுமையும் வியப்பூட்டக்கூடியது, எளிய கவிதைகளைப் போலத் தோற்றம் தந்தாலும் இவற்றை மொழியாக்கம் செய்வது சவாலானது. …

நிதானத்தின் பிரபஞ்சம் Read More »

போரும் வாழ்வும் – கூட்டு வாசிப்பு

சீன எழுத்தாளரான யியுன் லி டால்ஸ்டாயுடன் எண்பத்தைந்து நாட்கள் என்றொரு நூலினை எழுதியிருக்கிறார். இது போரும் வாழ்வும் நாவலை வாசித்த கூட்டு அனுபவத்தைப் பற்றியது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நண்பர்கள் பலரும் ‘ஒன்றாக ஒரு நாவலைப் படிக்க வேண்டும்’ என்ற எண்ணத்தினை உருவாக்கினார்கள். அதற்காக 1200 பக்கங்களுக்கும் மேலாக உள்ள போரும் வாழ்வும் நாவலை தேர்வு செய்தார்கள். இந்தத் தொடர்வாசிப்பு ஒரு புதிய நிலத்திற்குப் பயணம் செய்வது போன்ற அனுபவத்தை உருவாக்கியது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் …

போரும் வாழ்வும் – கூட்டு வாசிப்பு Read More »

ஒற்றைக்குரல்.

எலியா கசானின் வைல்ட் ரிவர் 1960ல் வெளியான திரைப்படம். ஹாலிவுட்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இன்றும் கொண்டாடப்படுகிறது. ஆவணப்படம் போல நிஜமான காட்சிகளுடன் வைல்ட் ரிவர் துவங்குகிறது. டென்னஸி ஆற்றில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்குக் காரணமாக நிறையப் பொருட்சேதங்கள் மற்றும் உயிர் இழப்பு ஏற்படுகிறது. அப்படி வெள்ளப்பெருக்கில் தனது குடும்பத்தை இழந்த ஒருவர் திரையில் தோன்றி உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுகிறார். இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றத் தடுப்பணைகள் கட்டுவதோடு நீர்மின்சாரம் தயாரிக்கவும் அரசு திட்டமிடுகிறது. இதற்காக டென்னஸி பள்ளத்தாக்கு …

ஒற்றைக்குரல். Read More »

குற்றமுகங்கள்- 1 லான்சர் கீச்சான்.

(காலனிய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற குற்றங்கள், குற்றவாளிகள், காவலர்களின் உலகம் பற்றிய விசித்திரப் புனைவுகளை எழுத வேண்டும் என்பது எனது நெடுநாளைய விருப்பம். குற்றமுகங்களைப் பற்றிய புனைகதைகளாக சிலவற்றை எழுதியிருக்கிறேன். இதில் புனைவும் உண்மையும் கலந்திருக்கின்றன. ) பிரிட்டிஷ் இம்பீரியல் போலீஸின் ஆவணக்குறிப்பு 1863 வி.12ல் இரண்டு முறையும் குறிப்பேடு எம்.16ல் நான்கு முறையும் குறிப்பிடப்பட்டுள்ள லான்சர் கீச்சான் என்ற மதராஸில் வாழ்ந்த பிக்பாக்கெட் உண்மையில் ஒரு ஆண் இல்லை. அவன் பகலில் பெண்ணாகவும் இரவில் ஆணாகவும் இருந்த …

குற்றமுகங்கள்- 1 லான்சர் கீச்சான். Read More »

சாய்ந்து கிடக்கும் டம்ளர்

வீட்டில் உள்ளவர்கள் பகலில் உறங்கும் போது சிறுவர்கள் உறங்குவதில்லை. பெரியவர்கள் உறங்குகிற நேரத்தில் சிறார்கள் மிகுந்த சுதந்திரமாக உணருகிறார்கள். கையில் கிடைத்த துணியைப் போலப் பகலைச் சுருட்டி எறிந்து விளையாடுகிறார்கள். நிழலைப் போல வீட்டிற்குள் சப்தமில்லாமல் நடக்கிறார்கள். பிரிட்ஜை சப்தமில்லாமல் திறந்து குளிர்ந்திருந்த கேக்கை எடுத்து ஒரு கையால் வாயைப் பொத்திக் கொண்டு சாப்பிடுகிறார்கள். உறங்குகிறவர்களை ஏமாற்றுவது எவ்வளவு பெரிய சந்தோஷம். உறங்கும் போது பெரியவர்கள் சிறுவர்களாகி விடுகிறார்கள். குறிப்பாக அவர்களின் திறந்த வாய் பசித்த சிறுவர்களின் …

சாய்ந்து கிடக்கும் டம்ளர் Read More »

தூத்துக்குடியில் ஒரு விழா

எனது தபால் பெட்டி எழுதிய கடிதம் நூலிற்கான அறிமுகவிழா இன்று தூத்துக்குடியில் நடைபெற்றது தூய மரியன்னை கல்லூரியின் தமிழ்துறையும் புத்தக வாசிப்பு நற்பணி மன்றமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தார்கள். வாசிப்பு மன்ற பொறுப்பாளர் ரவி இதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். சலூன் நூலகம் மாரியப்பன், ஆசிரியர் ஜெயபால், ஆ. மாரிமுத்து, ப.சக்திவேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இந்த நிகழ்வில் ஆரோக்கியபுரம் தபால்காரர் காளிமுத்து கௌரவிக்கபட்டிருக்கிறார். நிகழ்வில் இருபது மாணவர்கள் தபால் பெட்டி எழுதிய கடிதம் …

தூத்துக்குடியில் ஒரு விழா Read More »

சென்னை இலக்கியத் திருவிழா 2025

சென்னை இலக்கியத் திருவிழா 2025 காஞ்சிபுரத்தில் மார்ச் 7 மற்றும் 8 தேதிகளில் நடைபெறுகிறது இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மார்ச் 8 மதியம் 12.30 மணிக்கு கல்வியாளர் நெ.து. சுந்தரவடிவேலு குறித்து உரையாற்றுகிறேன் காஞ்சிபுரம் அருகிலுள்ள நெய்யாடுபாக்கம் கிராமத்தில் பிறந்த நெ.து.சுந்தரவடிவேலு காஞ்சிபுரத்தில் ஆரம்பக் கல்வி பயின்றவர். தமிழக அரசின் கல்வித்துறை இயக்குநராகவும் பொது நூலக இயக்குராகவும் பதவி வகித்தவர். காமராஜர் ஆட்சியின் போது மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டதிற்கு முக்கிய காரணமாக விளங்கியவர். பெரியாரின் …

சென்னை இலக்கியத் திருவிழா 2025 Read More »

அன்றாடம் – 3 திரும்பக் கேட்டவர்

நகைச்சுவையே முழு உண்மை என்கிறார் ஹங்கேரிய எழுத்தாளர் ஃபிரிட்ஸ் கரிந்தி, இதே கருத்தையே மிலன் குந்தேராவும் கொண்டிருந்தார். இவர்கள் நகைச்சுவை என்பதை அசட்டுத்தனமான ஒன்றாகக் கருதவில்லை. உயர்ந்த கலைவெளிப்பாடாகக் கருதினார்கள். நகைச்சுவை தனது வெளிப்பாடு முறையால் சிரிக்க வைத்தாலும் அதனுள் உண்மை புதைந்திருக்கிறது என்கிறார் கரிந்தி. இவரது The Refund என்ற ஒரங்க நாடகத்தில் தனது பள்ளிபடிப்பு வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் பயன்படவில்லை என உணரும் வாஸர்கோஃப் தான் படித்த பள்ளியிடம் கல்விக் கட்டணத்தைத் திரும்பத் தர …

அன்றாடம் – 3 திரும்பக் கேட்டவர் Read More »

மகிழ்ச்சியின் அடையாளம்

டெட்சுகோ குரோயநாகி எழுதிய டோட்டோ சான் ஜன்னலில் ஒரு சிறுமி 1981ல் வெளியான புத்தகம் ஜப்பானில் இந்த புத்தகம் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. ரயில் பெட்டிகளை வகுப்பறையாகக் கொண்ட டோமாயி பள்ளியில் படித்த டோட்டோ சானின் நினைவுகளை விவரிக்கும் இந்நூல் தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. வள்ளிநாயகம். பிரபாகரன் இணைந்து மொழிபெயர்த்துள்ளார்கள். இப்போது டோட்டோ சானை அனிமேஷன் படமாக உருவாக்கியிருக்கிறார்கள். ஷின்னோசுகே யாகுவா இயக்கியுள்ளார். பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் அவசியம் காண வேண்டிய படம். டோட்டோ சான் …

மகிழ்ச்சியின் அடையாளம் Read More »