admin

அன்னை வயல்

விகடன் எம்.டி. திரு. பாலசுப்ரமணியம், இயக்குனர் கே.பாலசந்தர் என இரண்டு நிகரற்ற ஆளுமைகளின் மறைவு என்னைத் தாளாத மனத்துயரில் ஆழ்த்தியிருக்கிறது. இருவருடன் நெருங்கிப்பழகியவன் நான். என் மீதான அவர்களின் அன்பும் அக்கறையும் தீராத நன்றிக் கடனுக்குரியது. விகடன் எம்டியான திரு.பாலசுப்ரமணியம் அவர்களை மாணவ நிருபர் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட நாளில் முதன்முறையாகச் சந்தித்தேன். அன்று நான் ஒரு கல்லூரி மாணவன், புதிதாக எழுதத் துவங்கியவன். நேர்காணலின் போது எதற்காக பத்திரிக்கையாளராக விரும்புகிறீர்கள் என அவர் கேட்டதற்கு நான் …

அன்னை வயல் Read More »

சஞ்சாரம் நாவல்

இன்றைய ஆங்கில ஹிந்து நாளிதழில் எனது புதிய நாவல் சஞ்சாரம் குறித்து நண்பர் கோலப்பன் எழுதியிருக்கும் பதிவு. Thanks : The Hindu. 27.12.2014

பூவுலகின் நண்பர்கள்

பூவுலகின் நண்பர்கள் சார்பாக நாளை நடைபெறும் எனது புத்தக வெளியீடு •• இடம் :  தெய்வநாயகம் பள்ளி.  வெங்கட் நாராயணா சாலை, தி. நகர் ( திருப்பதி தேவஸ்தானத்திற்கு நேர் எதிரில்) நேரம்  : மாலை 5 மணி நாள் : 27 டிசம்பர் 2014 அனைவரும் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்

அந்நிய நிலத்தின் பெண்

நாளை நடைபெறும் நண்பர் மனுஷ்யபுத்திரனின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவிற்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள் *** எனக்குப் பிடித்த மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் உன் பிறந்த தினத்தில் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாம் சந்தித்துக்கொண்ட ஆண்டின் உன் முதல் பிறந்த தினத்தில் எவ்வளவு இளமையாக இருந்தாயோ அப்படித்தான் இன்றும் இருக்கிறாய் அன்று முத்தமிட்டபோது எப்படிக் கண்ணீர் சிந்தினாயோ அப்படித்தான் இன்றும் கண்ணீர் சிந்துகிறாய் அன்று உனக்கு என்ன பிரார்த்தனை இருந்ததோ அதேதான் இன்றும் உனக்கு அன்று அந்த …

அந்நிய நிலத்தின் பெண் Read More »

ஜெயமோகனுக்கு இயல் விருது

2014 ஆம் வருடத்திற்கான இயல் விருது பெறும் நண்பர் ஜெயமோகனுக்கு மனம் நிரம்பிய வாழ்த்துகள். 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து தனது படைப்புகளின் வழியே தமிழ் இலக்கியத்திற்கு வளமை சேர்த்து வரும் மகத்தான படைப்பாளி விருது பெறுவது சந்தோஷம் தருகிறது. ***

எச்சரிக்கை

எனது ஈமெயில் ஐடியை இன்று மாலை ஐந்துமணிக்கு மும்பையைச் சேர்ந்த ஒரு ஐபி முகவரியிலிருந்து ஹேக் செய்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்குப் போலியான மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். Pay attention to this news or Read this article என மருத்துவத் தகவல் மற்றும் நலம் விசாரிப்பு சார்ந்த செய்தி கொண்ட ஆங்கில மின்னஞ்சல் எனது மெயில்ஐடியிலிருந்து வந்திருந்தால் அதை உடனே நீக்கிவிடவும். அது ஒரு வைரஸ். தற்போது எனது மின்னஞ்சலை மீட்டுவிட்டேன் ***

பூமணிக்கு விருது

பூமணி எழுதிய ‘அஞ்ஞாடி’-நாவலுக்கு 2014-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள். நவீனத் தமிழ் இலக்கியத்தில் தனித்துவமிக்க படைப்பாளியாக கொண்டாடப்படும் பூமணி வெக்கை,பிறகு , நைவேத்தியம்,  ஆகிய முக்கிய நாவல்களையும் வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். கருவேலம் பூக்கள் திரைப்படத்தை என்எப்டிசிக்காக இயக்கியிருக்கிறார். இவரது அஞ்ஞாடி நாவல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் துவங்கி 1984 வரை நீள்கிறது. சிவகாசிக்கலவரம் குறித்த விரிவான களஆய்வினை மேற்கொண்டு பூமணி இந்நாவலை …

பூமணிக்கு விருது Read More »

சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்

புத்தகம் படிப்பதில் விருப்பமில்லாமல் நாள் முழுவதும் வீடியோ கேம்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் நந்து என்ற சிறுவனைக் கோடை விடுமுறையில் அவனது அம்மா பொதுநூலகம் ஒன்றிற்கு அழைத்துப் போகிறாள். அங்கே முதன்முறையாகக் காமிக்ஸ் புத்தகம் ஒன்றினை வாசிக்கத் துவங்குகிறான் நந்து. அந்த நூலகத்தில் பெனி என்ற சிறுவன் அறிமுகமாகிறான். அவன் நூலகத்தின் அடியிலுள்ள ரகசிய நூலகம் ஒன்றினைப் பற்றிக் கூறி அதனுள் அழைத்துப் போகிறான் அந்த ரகசிய நூலகம் விசித்திரமானது. உலகில் எங்கே புத்தகம் தூக்கி எறியப்பட்டாலும் அது …

சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் Read More »