கண்டிக்கிறேன்
நண்பர் பெருமாள்முருகனின் மீது தொடர்ந்து நடத்தப்படும் ஒடுக்குமுறைகளை வன்மையாக கண்டிக்கிறேன். அவரது எழுத்துரிமையை காக்க ,கருத்துரிமைக்கு ஆதரவாக படைப்பாளிகள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டுகிறேன் Thanks : The New Indian Express-Vellore
நண்பர் பெருமாள்முருகனின் மீது தொடர்ந்து நடத்தப்படும் ஒடுக்குமுறைகளை வன்மையாக கண்டிக்கிறேன். அவரது எழுத்துரிமையை காக்க ,கருத்துரிமைக்கு ஆதரவாக படைப்பாளிகள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டுகிறேன் Thanks : The New Indian Express-Vellore
நேற்றும் இன்றும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன், நேற்று மிக அதிகமான கூட்டம், புத்தகங்களைத் தேடிப்பார்க்க முடியவில்லை, ஆகவே இன்று மதியம் இரண்டு மணிக்குச் சென்று இரவு வரை சுற்றிக் கொண்டிருந்தேன். இன்று நான் வாங்கிய சில புத்தகங்கள் 1. புதுமைப்பித்தனின் சம்சாரப் பந்தம் – கமலா புதுமைப்பித்தன்– பரிசல் வெளியீடு 2. ஃ பாரென்ஹீட் 451 –ரே பிராட்பரி –தமிழில் வெ.ஸ்ரீராம் –க்ரியா பதிப்பகம். 3. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி– சுயசரிதை –அவ்வை இல்லம் 4. குழந்தைகளின் …
சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு சன் நியூஸ் தொலைக்காட்சி தினமும் மதியம் 3 மணிமுதல் 4 மணி வரை ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சி ஒன்றினைத் தயாரித்து வழங்குகிறது இதில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. டிவி சேனலில் புத்தக வெளியீட்டு நிகழ்வு நடைபெறுவது இதுவே முதல்முறை நாளை சனிக்கிழமை 10. 1. 2015 மதியம் 3 மணிக்கு உயிர்மையின் சார்பில் எனது சஞ்சாரம் நாவல் வெளியீட்டு நிகழ்வு ஒளிபரப்பாகிறது இந்நிகழ்வில் நண்பர் மனுஷ்யபுத்திரன் …
கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் படைப்புலகம் குறித்து விரிவான உரை ஒன்றினை நாளை நிகழ்த்துகிறேன் நோபல் பரிசு பெறத் தகுதியான அந்த மகத்தான எழுத்தாளரைக் கொண்டாடும் விதமாக அவரது பன்முக ஆளுமை குறித்தும், படைப்புகள் குறித்தும் பேச இருக்கிறேன் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்
2013 வரை நான் எழுதிய 230 சிறுகதைகளைத் தொகுத்து உயிர்மை பதிப்பகம் மூன்று பெரும் தொகுதிகளாக வெளியிட்டுள்ளது நாளை இதன் வெளியீட்டு விழா மாலை ஆறுமணி அளவில் ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது. 1656 பக்கங்கள் கொண்ட இந்த மூன்று தொகுதிகளும் ஒன்று சேர்ந்து விலை ரூ 1550 . இதனை ரூ 1000 ற்கு சலுகை விலையில் தருவதற்கு உயிர்மை முன்வந்துள்ளது ஜனவரி 12 வரை சலுகை விலையில் புத்தகங்கள் கிடைக்கும்.
2013 வரை வெளியாகியுள்ள எனது சிறுகதைகள் யாவும் ஒன்றாகத் தொகுக்கபட்டு மூன்று தனித்தொகுதிகளாக வெளியாக உள்ளன. அத்துடன் சிறார்களுக்காக எழுதியுள்ள நாவல், உலகசினிமா குறித்த கட்டுரைத் தொகுதி உள்ளிட்ட புத்தகங்கள் ஜனவரி 8ம் தேதி வியாழன் மாலை சென்னை, ரஷ்யக்கலாச்சார மையத்தில் வெளியிடப்பட உள்ளன. நிகழ்வில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறேன்
திரைப்பட இணை இயக்குனரும் இலக்கிய வாசகருமான ஹரிகோபி எனது நாவல் சஞ்சாரம் குறித்து இரண்டு நிமிஷம் ஒடக்கூடிய ப்ரோமோ பிலிம் ஒன்றினைச் சிறப்பாக உருவாக்கியுள்ளார். இலக்கியத்தை நேசிக்கும் திரைக்கலைஞர்கள், குறும்பட இயக்குனர்கள் தாங்களாக முன்வந்து இது போன்ற உதவிகளை மேற்கொள்வதன் வழியே வாசிப்புப் பரவலாகும். அதற்கான முன்முயற்சியாகவே இதைக் கருதுகிறேன். ஹரிகோபிக்கும், அவரது குழுவினர்களுக்கும் எனது அன்பும் பாராட்டுகளும். நண்பர்கள் இந்த வீடியோ இணைப்பை பகிரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் https://www.youtube.com/watch?v=6NBkunT8Eik&feature=youtu.be
டாக்டர். இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் நாவலின் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார் நண்பர் குறிஞ்சில் பிரபா நாவலின் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார் நண்பர் பிரபாகர் நாவலின் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார் தோழர் டி. லட்சுமணன் நாவலின் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார் தஞ்சை பல்கலை கழக மேனாள் துணைவேந்தர் திரு. ராஜேந்திரன் நாவலின் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார் போலீஸ் டெபுடி கமிஷனர் திரு. செந்தில்குமார் நாவலின் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார் பேராசிரியர் அருணன் சிறப்புரை ஆற்றுகிறார் Photo credits: Prabhu …
நேற்று எனது சஞ்சாரம் நாவல் வெளியீட்டுவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது, அரங்கு நிரம்பிய கூட்டம். கவிஞர் ரவி சுப்ரமணியம் ஔவையாரில் துவங்கி கல்யாண்ஜி வரை தேர்வு செய்யப்பட்ட கவிதைகளைப் பாடலாகப் பாடினார் அற்புதமான குரல். அருமையாகப் பாடினார். அவருக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றி டாக்டர் கே.எஸ்.சுப்ரமணியம் நாவலை வெளியிட ஜென் ராம் பெற்றுக் கொண்டார். அதை அடுத்து பேராசிரியர் அருணன் சஞ்சாரம் நாவல் குறித்து அறிமுகவுரையை வழங்கினார், நாவலை முழுமையாகப் படித்து உள்வாங்கிக் கொண்டிருந்த அருணன் இந்த …
எனது புதிய நாவல் சஞ்சாரம் வெளியீட்டு விழா ஜனவரி 4 மாலை அண்ணாசாலையில் உள்ள புக் பாயிண்ட் அரங்கில் நடைபெற உள்ளது அவசியம் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்