லூரே கேவன்ஸ்
இந்தியாவில் எத்தனையோ குகைகளைக் கண்டிருக்கிறேன், ஆனால் வர்ஜினியாவின் லூரேபகுதியில் அபேலேசியன் மலைத்தொடரில் பூமிக்கு அடியில் அமைந்துள்ள குகைதளம் போல ஒன்றை என் வாழ்நாளில் கண்டதில்லை, அதை லூரே கேவன்ஸ் (Luray Caverns )என்று அழைக்கிறார்கள் நானும் நிர்மலும் பாலாஜியும் அதைக்காண்பதற்காக சென்றிருந்தோம், பூமி மட்டத்திற்கு 134 அடி கீழே உள்ளது இக்குகைத்தளம், . ஒரு பரந்த தெரு ஒன்றினுள் நடந்து சுற்றுவது போல மேலும் கீழுமாக அகன்று விரிந்திருக்கிறது குகை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மழையில் …