admin

இரவிற்கு எல்லாம் தெரியும்

இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாஜிப்படையால் படுகொலை செய்யப்பட்ட யூதர்கள் குறித்து நிறைய ஆவணங்கள், புனைகதைகள், நாடகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன, அதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ஆனி பிராங்கின் நாட்குறிப்புகள், (The Diary of Anne Frank) பதிமூன்று வயதான யூதச்சிறுமி எழுதிய இந்த நாட்குறிப்புகள் வரலாற்றின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, ஆனி பிராங்க் டச்சு மொழியில் இந்த டயரியை எழுதியிருக்கிறாள் ஜுன் 14 1942ல் டயரி துவங்குகிறது, முதல் 22 நாட்கள் அவர்களின் இயல்பு வாழ்க்கையை …

இரவிற்கு எல்லாம் தெரியும் Read More »

வானெங்கும் பறவைகள்

கடந்த ஐந்து நாட்களாக திருச்சி எஸ்ஆர்வி பள்ளி நடத்திய மாணவர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொணடேன். இந்த முகாமில் எழுத்தாளர் வண்ணதாசன், எழுத்தாளர் தமிழ்செல்வன், பத்திரிக்கையாளர் ஞாநி, எழுத்தாளர் பவா.செல்லத்துரை, எழுத்தாளர் முத்துகிருஷ்ணன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், சரஸ்வதி மகால் நூலகர் பெருமாள், புகைப்படக்கலைஞர் வைட் ஆங்கிள் ரவிசங்கர், நாடக கலைஞர் பார்த்திபராஜா, ஒவியர் டிராட்ஸ்கி மருது, நடிகை ரோகிணி, பத்திரிக்கையாளர் கவின்மலர், கவிதா முரளிதரன், பெண்ணியசிந்தனையாளர் பத்மாவதி, விஜயா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். பெரிய இலக்கியவிழா …

வானெங்கும் பறவைகள் Read More »

ஜேகே

நேற்று ஜெயகாந்தனின் 78வது பிறந்த நாள், காலையில் அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தேன், வாசகர்கள், நண்பர்கள், இடதுசாரித்தோழர்கள், பத்திரிக்கையாளர்கள் என்று பிறந்த நாள் வாழ்த்து சொல்ல பலரும் வந்து கொண்டேயிருந்தார்கள். எப்போதுமே ஜெயகாந்தனோடு பேசிக் கொண்டிருப்பது மிகுந்த உத்வேகம் தரக்கூடியது, நேற்றும் அப்படியே இருந்தது, முதுமையின் தளர்ச்சியிருந்த போதும் அவரது தீர்க்கமான பதில்களும், கேலியும் அனைவரையும் உற்சாகமூட்டியது, ஜேகேயின் வீட்டில் அவரது இளையமகள் தீபாவைச் சந்தித்து பேசியது சந்தோஷம் தருவதாக இருந்தது, அவர் வலைப்பதிவுகளில் …

ஜேகே Read More »

சொன்ன கதை

குழந்தைகளுக்குக் கதை சொல்வது ஒரு அற்புதமான கலை, சமீபத்தில் சுட்டிவிகடன் இதழ் சார்பில் சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் பள்ளி மாணவர்களுக்கு கதை சொன்னேன், பெரும்பான்மைச் சிறுவர்கள் வீட்டில் யாரும் கதை சொல்லி கேட்டதேயில்லை என்றார்கள், ஒணான், மண்புழு, ரயில்பூச்சி, ஆந்தை, மீன்கொத்தி,  என எதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை, அதைவிடவும் மாணவர்களில் பலருக்கு விலங்குகளின் பெயர்கள் தமிழில் தெரியவில்லை, இனிப்பு என்று சொன்னால் என்னவென்று ஒரு சிறுமி கேட்டாள்,  ஸ்வீட் என்று சொன்னால் தான் அவளுக்குப் புரிகிறது, …

சொன்ன கதை Read More »

ஆக்காட்டி ஆக்காட்டி

சேரனின் தவமாய் தவமிருந்து படத்திற்காக படமாக்கபட்ட ஆக்காட்டி ஆக்காட்டி என்ற இப்பாடல் படத்தில் இடம் பெறவில்லை, இப்பாடல் நாட்டுபுறப் பாடலை அடிப்படையாகக் கொண்டது, வலையென்ன பெரும் கனமா அதை அறுக்க வழிகளும் இருக்குதம்மா என நம்பிக்கையூட்டும் விதமாக இதை மாற்றி எழுதியவர் தோழர் எஸ்ஏபெருமாள், பாடலை மேடைகளில் பாடி புகழ்பெறச் செய்தவர் டாக்டர் கே. ஏ.குணசேகரன் படத்திற்காக இந்தப் பாடலை நாடக இயக்குனர் பிரளயன் மிகச் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார், பாடலும் படமாக்கபட்ட விதமும் அற்புதமாக உள்ளது இதை …

ஆக்காட்டி ஆக்காட்டி Read More »

வெறும்கால்வாசிகள்

மின்தட்டுபாடு தமிழகத்தை இருட்டிற்குள் தள்ளியுள்ள சூழலில் ராஜஸ்தானில் ஒரு கிராமம் முழுமையாகச் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து பயன்படுத்திக் கொள்கிறது, இதற்கான உபகரணங்களைத் தயாரிப்பவர்களும், பயன்படுத்துவர்களும் கிராமத்துப் பெண்கள், அவர்களில் எவரும் முறையான கல்வியறிவு பெற்றவர்களில்லை, ஆனால் அவர்களால் எளிதாக சோலார் உபகரணங்களைத் தயாரிக்க முடிகிறது, கூடுதலாக இந்த தொழில்நுட்பத்தை அவர்கள் ஆப்ரிக்காவில் உள்ள கிராமப்புற பெண்களுக்குப் பயிற்சி அளித்து வந்திருக்கிறார்கள் என்ற தகவலை ஒரு மின்னஞ்சல் வழியாக அறிந்த போது வியப்பாக இருந்தது, எப்படி …

வெறும்கால்வாசிகள் Read More »

பிறந்த நாள்

இன்று எனது பிறந்த நாள், இதற்காக மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்த நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ***

அருவிகளின் லீலை

நடந்தாய் வாழி காவேரி என்று தி.ஜானகிராமன் காவேரி ஆற்றின் பாதையெங்கும் நதியின் புகழ்பாடியபடியே பயணித்த அனுபவ நூல் ஒன்றை வாசித்திருக்கிறேன் அது  தந்த உத்வேகத்தில் தமிழ்நாட்டில் ஓடக் கூடிய ஏழு நதிகளையும் அதன் வழியெங்கும் பயணம் செய்து பார்த்திருக்கிறேன்.  ஏரி, குளம், கண்மாய், அணைகள் என்று தமிழக நீர்நிலைகளை நேரடியாக அறிந்து கொள்வதற்காக நான்கு ஆண்டுகள் அலைந்து திரிந்திருக்கிறேன், இந்தப் பயணத்திற்குப் பின்னால் தமிழ்நாட்டைப் பற்றி நான் கொண்டிருந்த மனச்சித்திரமே மாறிவிட்டது. தமிழ்நாடு வறுமையானது என்ற எண்ணம் அடியோடு …

அருவிகளின் லீலை Read More »

சமணச் சிற்பங்கள்

இரா.பானுகுமார், சென்னை இரா. பானுகுமார், சமணச் சிற்பங்கள் குறித்து அருமையான விளக்க கட்டுரையை எழுதியிருக்கிறார்,அவரது வலைத்தளத்தில் சமணம் குறித்து விரிவான கட்டுரைகள் உள்ளன, கட்டுரையின் முக்கியத்துவம் கருதி அதை மீள்பிரசுரம் செய்கிறேன். ••• பல சொற்கள் உணர்த்தாததை ஒரு படம் உணர்த்தும் என்பார்கள். சிற்பங்களும் அவ்வாறே. சமயச் சிற்பங்களும், சித்திரங்களும் அந்தந்த சமயங்களின் பிரதிபலிப்பு என்றால் அதுமிகையாகாது. இந்திய சமய வரலாறும் உணர்த்துவதும் அதுவேயாம். இந்திய வரலாற்றை ஆராயும்போது உருவ வழிபாடு என்பது சிரமண மதங்களிலிருந்தே தொடங்குகிறது. …

சமணச் சிற்பங்கள் Read More »

புன்னகை விற்பனைக்கு

எனது காதல்மேஜை என்ற குறுங்கதையை மையமாகக் கொண்டு உருவாக்கபட்ட குறும்படமிது, நித்திலன் இயக்கிய இப்படம் கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது *** புன்னகை விற்பனைக்கு — https://www.youtube.com/watch?v=rfpG8YlhHEE