துயில்
எனது புதிய நாவல் துயில் ஜனவரி 1 2011 அன்று (1.1.11) மாலை 6 மணி அளவில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவணர் நூலக அரங்கில் வெளியிடப்பட உள்ளது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்
எனது புதிய நாவல் துயில் ஜனவரி 1 2011 அன்று (1.1.11) மாலை 6 மணி அளவில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவணர் நூலக அரங்கில் வெளியிடப்பட உள்ளது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வியட்நாம் யுத்த நினைவகத்தை வடிவமைத்தவர் மாயா லின் . இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் சிறந்த பத்து கட்டிடக் கலைஞர்களில் ஒருவர் என்று கொண்டாடப்படுகிறார். அமெரிக்கர் அல்லாத ஒருவர் அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற ஒரு நினைவுச்சின்னத்தை வடிவமைத்தது மிகவும் வியப்பானது. எப்படி இந்தப்பணி சாத்தியமானது என மாயா லின்னைப் பற்றி Maya Lin: A Strong Clear Vision. ஆவணப்படத்தைப் பார்த்தேன். கட்டிடக்கலைஞரான லின் வியட்நாம் யுத்த நினைவுச்சின்னத்தை வடிவமைப்பதற்கான வரைபடம் தீட்டுவதில் துவங்கி அது …
கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்வை விவரிக்கும் இந்தப் பாடல் அற்புதமான இசையோடு அமைக்கப்பட்டுள்ளது, கேட்கையில் மிகுந்த உணர்ச்சிவசமாகிறது, இப்பாடலை டவுன்லோடு செய்து கேட்கலாம் ஆன்லைனில் கேட்க இணையப்பக்கத்தில் உள்ள ஆடியோ பிளேரை அழுத்தவும், பள்ளி. கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய முக்கிய பாடல் இது. https://www.archive.org/details/Ramanujan
ந.முருகேச பாண்டியன் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய விமர்சகர். தேர்ந்த படிப்பாளி. தமிழில் மொழிபெயர்ப்பாகியுள்ள புத்தகங்களைப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர், புதுக்கோட்டையில் வசிக்கும் அவர் நாடகம். சிறுபத்திரிக்கை. கல்வி. நூலகத்துறை என்று விரிந்த தளங்களில் இயங்குபவர். உயிரோசை இணைய இதழில் அவர் தொடர்ச்சியாக எழுதி வந்த கிராமத்து தெருக்களின் வழியே என்ற கட்டுரைகளின் தொகுப்பை வாசித்தேன், தனது கிராம வாழ்வின் நினைவுகளை துல்லியமாக, அதே நேரம் மிகை உணர்ச்சியின்றி அழகாக சித்தரித்திருக்கிறார் வாசிக்கும் …
சமீபமாக புதிய படங்களை விடவும் பழைய படங்களை மறுபடி காண்பதில் தான் அதிக ஈடுபாடு கொண்டிருக்கிறேன், முக்கியமான 50 உலகப்படங்களைத் தேர்வு செய்து ஒவ்வொன்றாக மீண்டும் பார்த்துவருகிறேன் அதில் இரண்டு நாட்களுக்கு முன்பாக ழான் காக்தூவின் (Jean Cocteau) Beauty and the Beast பார்த்தேன், 1946ம் ஆண்டு பிரெஞ்சில் வெளியாகி இன்றும் கறுப்புவெள்ளை காவியமாகவே இருக்கிறது, அழகியும் அரக்கனும் என்ற தேவதை கதையை மையமாக்க் கொண்டே படம் உருவாக்கப்பட்டிருக்கிறது, இது பதினெட்டாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட ஒரு …
எனது புதிய நாவலான துயில் வெளியீட்டு விழா புத்தாண்டு தினத்தின் மாலையில் (1.1.11 மாலை 5.30 மணி) நடைபெறுகிறது. உயிர்மை பதிப்பகம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக வளாகத்தில் நடைபெற உள்ளது நாவலின் வெளியீட்டு விழா நான்கு பகுதிகளைக் கொண்டதாக வடிவமைக்கபட்டிருக்கிறது முதல் பகுதி நாவலின் உள்ளடக்கம் மற்றும் அது எந்த விதமான நாவல் என்பதைப் பற்றிய செறிவான அறிமுக உரை, அதைத் தொடர்ந்து நாவல் வெளியீடு. இரண்டாம் …
தில்லித் தமிழ்ச்சங்கம் சம கால இலக்கிய வளர்ச்சிப் போக்குகளை மதிப்பீடு செய்ய தமிழ் 2010 என்னும் இலக்கியக் கருத்தரங்கை டிச.10,11,12 ஆகிய நாட்களில் புதுடில்லியில் மிகச்சிறப்பாக நிகழ்த்த திட்டமிட்டுள்ளது. நான் அதில் கலந்து கொண்டு சிறுகதைகள் பற்றி உரையாற்ற இருக்கிறேன் 11.12.10 அன்றுகாலை பனிரெண்டு மணிக்கு எனது உரை நிகழ்த்தப்பட உள்ளது இந்த கருத்தரங்கில் நாஞ்சில்நாடன். கவிஞர் சிற்பி , ரவி சுப்பிரமணியன், பத்ரி சேஷாத்திரி , கவிஞர் கலாப்ரியா , பேராசிரியர் ப்ரேம், வெளி ரங்கராஜன், …
ஆங்கில இதழான WISDOM (international monthly digest) இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் இருந்து வெளியாகி வருகிறது , இவர்கள் ஆண்டுதோறும் சமூக மேம்பாட்டிற்கு உதவிய பல்வேறு துறைகளைச் சார்ந்து சிறந்து விளங்குபவர்களை பாராட்டும் விதமாக WISDOM AWARD என்ற விருதினை வழங்கிச் சிறப்பிக்கிறார்கள். இலக்கியம், இசை, கல்வி, மருத்துவம், பொதுசேவை என்று பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கபடுகிறது, இந்த ஆண்டிற்கான விஸ்டம் இன்டர்நேஷனல் விருது எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கான விருது வழங்கும் விழா …
எனது செகாவின் மீதுபனி பெய்கிறது நூல் பற்றி மிக அருமையான விமர்சனம் ஒன்றினை தமிழகத்தின் முக்கிய மார்க்சிய அறிஞரும், படைப்பாளியுமான தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் எழுதியிருக்கிறார், இது புத்தகம் பேசுது டிசம்பர் இதழில் வெளியாகி உள்ளது, வாசகர்களின் கவனத்திற்கான அந்தக் கட்டுரையைத் தந்திருக்கிறேன் •• உலக இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தும் நூல் –எஸ்.ஏ. பெருமாள் இலக்கியங்களை வாசிப்பதும், அவற்றைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும் ஒரு அற்புதக்கலை. அதுவும் கூட மிகச்சிறந்த படைப்பாளிகளுக்கே அது சாத்தியமும் ஆகும். தமிழில் ஒரு …
இந்த ஆண்டிற்கான தமிழ் சங்கம் விருது எனக்கு வழங்கப்பட உள்ளதாக சேலம் தமிழ் சங்கம் அறிவித்துள்ளது. இவ்விருது பதினைந்தாயிரம் ரொக்கமும் நினைவுப்பரிசும் உள்ளடக்கியது நவீன தமிழ் இலக்கியத்திற்கு முக்கியப் பங்களிப்பு செய்துள்ளதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 26ம் தேதி ஞாயிறு காலை 10 மணி அளவில் சேலத்தில் உள்ள தமிழ் சங்க கட்டிடத்தில் நடைபெற உள்ளது. விருப்பமான நண்பர்கள் வாசகர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி …