ஆங்கில மொழியாக்கம்
எனது சிறுகதையான பிழைதிருத்துபவனின் மனைவி Muse India (Issue 30, Mar-Apr 2010) என்ற ஆங்கிலத்தில் வெளியாகும் இணைய இதழில் வெளியாகி உள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் ஆங்கில பேராசிரியர் சித்ரா. இந்த இதழை கவிஞர் பிரம்மராஜன் சிறப்பு எடிட்டராக இருந்து தயாரித்திருக்கிறார். இது போல எனது சிறுகதைகள், கட்டுரைகள் அல்லது நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விருப்பம் உள்ள வாசகர்கள் , ஆர்வலர்கள் முன்வந்தால் அதை தனித்த நூலாகவோ அல்லது எனது இணையதளத்திலோ வெளியிட உதவியாக இருக்கும். …