மலேசியப் பயணம்
செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை மலேசியப் பயணம் மேற்கொள்கிறேன். பினாங்கு, கடா மற்றும் கோலாலம்பூர் என மூன்று நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விரிவான தகவல்களை விரைவில் பகிருகிறேன்.
செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை மலேசியப் பயணம் மேற்கொள்கிறேன். பினாங்கு, கடா மற்றும் கோலாலம்பூர் என மூன்று நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விரிவான தகவல்களை விரைவில் பகிருகிறேன்.
அகிரா குரோசாவா இயக்கிய “டெர்சு உசாலா” திரைப்படத்தில் டெர்சுவாக நடித்திருப்பவர் சோவியத் யூனியனைச் சேர்ந்த நடிகர் மாக்சிம் முன்சுக். இவர் 1975 மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றிருக்கிறார் டெர்சு உசாலா குரோசாவாவின் 25 வது படம். ஜப்பானுக்கு வெளியே அவர் எடுத்த முதல் படம். விளாடிமிர் அர்செனியேவ் எழுதிய இந்த நாவலை ரஷ்யாவில் 1961ம் ஆண்டு இயக்குனர் அகாசி பாபயன் படமாக்ககியிருக்கிறார். ஆனாலும் குரோசாவா இதனைப் படமாக்க விரும்பினார். ரஷ்ய ஜப்பானிய …
Jean-Baptiste-Siméon Chardin. வரைந்த Soap Bubbles ஓவியத்தில் முதலில் நம்மைக் கவர்வது சோப்புக் குமிழே. மிக அழகாக அக் குமிழ் வரையப்பட்டிருக்கிறது. சோப்புக்குமிழின் வசீகரம் அது உருவாகும் நிறஜாலம். எடையற்றுப் பறக்கும் விதம். கண்ணாடி போன்ற மினுமினுப்பு. இந்த ஓவியத்தில் சோப்புக் குமிழை ஊதுகிறவன் பதின்வயது பையன். அவனருகே ஒரு கண்ணாடி டம்ளரில் சோப்புத் தண்ணீர் காணப்படுகிறது. அவன் சோப்புத்தண்ணீரை ஊதி ஒரு குமிழியை உருவாக்குகிறான், குமிழி இன்னும் தனித்துப் பறக்கவில்லை. அது ஊது குழலின் முனையில் …
எனது சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு செப்டம்பர் மாத Indian Literature இதழில் வெளியாகியுள்ளது. இக்கதையை மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் டாக்டர் சந்திரமௌலி.
செப்டம்பர் 13 மற்றும் 14 நாட்களில் மதுரை வருவதாகத் திட்டமிட்டிருந்தேன். முக்கியப்பணி ஒன்றின் காரணமாக சென்னையில் இருக்க வேண்டியதால் மதுரை புத்தகக் கண்காட்சிக்கு வர இயலவில்லை. அக்டோபர் 4 வெள்ளிக்கிழமை மாலை திருச்சி புத்தகத் திருவிழாவில் பேசுகிறேன்.
கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் பேனா மருத்துவமனை பற்றிய செய்தி ஒன்றை இணையத்தில் கண்டேன். பேனா மருத்துவமனை என்ற கடையின் பெயர் எனக்குப் பிடித்திருந்தது. மைப்பேனாக்களைச் சரி செய்து தரும் இந்தக் கடை 75 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது என்கிறார்கள் முகம்மது இம்தியாஸ் தன்னைப் பேனா மருத்துவர் என்றே அழைத்துக் கொள்கிறார். சிறிய மருத்துவமனையை நடத்தும் மூன்றாம் தலைமுறை மருத்துவர் என்றே தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். அமெரிக்காவின் லூயிஸ் வாட்டர்மேன் தான் பவுண்டன் பேனாவைக் கண்டுபிடித்தவர். …
பிரெஞ்சு ஓவியர் ஹென்றி ஷெல்சிங்கரின் Girl with dead bird ஓவியத்தில் ஒரு இளம்பெண் தனது மடியில் இறந்து போன பறவை ஒன்றை வைத்திருக்கிறாள். சோகமான அவளது முகம். பிரார்த்தனை செய்வது போலக் கைவிரல்களைக் கோர்த்துள்ள விதம். உதிர்ந்த இலை ஒன்றைப் போல மடியில் கிடக்கும் பறவை. அதுவும் தலைகீழாக உள்ள அதன் தோற்றம். பெண்ணின் சாய்ந்த கழுத்து. பறவையை நோக்கும் கண்கள். சிறிய பறவைக்கூண்டு ஒன்றும் ஓவியத்தில் காணப்படுகிறது இறந்த பறவை என்பது காதலின் பிரிவைத்தான் …
போர்ஹெஸின் வாழ்க்கையை விவரிக்கும் புதிய கிராஃபிக் நாவல் “Borges: The Infinite Labyrinth,” ஸ்பானிஷ் மொழியில் வெளியாகியுள்ளது. இதற்கான ஓவியங்களை வரைந்திருப்பவர் நிக்கோலஸ் காஸ்டெல். கதைவடிவத்தை எழுதியிருப்பவர் ஆஸ்கார் பாண்டோஜோ. போர்ஹெஸின் வாழ்வைப் பத்து சிறிய அத்தியாயங்களில் விவரிக்கிறது இந்தக் கிராபிக் நாவல். இதன் ஆங்கில வடிவம் இன்னமும் வெளியாகவில்லை. இணையத்தில் இதன் சில பக்கங்கள் காணக் கிடைக்கிறது. போர்ஹெஸ் நூற்றாண்டு விழாவின் போது அவரைப் பற்றிய சிறிய அறிமுக நூலை எழுதினேன். அதற்கான புத்தகங்களைத் தேடி …
மதுரை தமுக்கம் மைதானத்தின் உள் அரங்கில் வருகின்ற 06.09.2024 முதல் 16.09.2024 வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது இதில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. எண் 155. எனது அனைத்து நூல்களும் அங்கே கிடைக்கும் செப்டம்பர் 14 சனிக்கிழமை மற்றும் 15 ஞாயிறு இரண்டு நாட்களும் மதுரையில் இருப்பேன். விருப்பமான நண்பர்கள். வாசகர்கள் தேசாந்திரி அரங்கில் என்னைச் சந்திக்கலாம்
எனது அரவான் நாடகத்தை இந்தியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார் தீபக் குமார். இளம் நாடக நடிகரான இவர் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். டிசம்பரில் மும்பையில் நடைபெறவுள்ள நாடகவிழாவில் இதனை நிகழ்த்த இருக்கிறார். அரவான் நாடகம் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. அதனை ஒரியண்ட் லாங்மேன் வெளியிட்டிருக்கிறார்கள்.