சஞ்சாரம் / திறனாய்வுக் கூட்டம்
நாளை ( 04.05.24) இரவு ஏழு மணிக்கு இணைய வழியாக சஞ்சாரம் நாவலுக்கான திறனாய்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் சஞ்சாரம் குறித்து முனைவர் சு.விநோத் உரையாற்றுகிறார்.
நாளை ( 04.05.24) இரவு ஏழு மணிக்கு இணைய வழியாக சஞ்சாரம் நாவலுக்கான திறனாய்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் சஞ்சாரம் குறித்து முனைவர் சு.விநோத் உரையாற்றுகிறார்.
நாளை (04.04.24 )காலை இந்து தமிழ் திசை சார்பில் அண்ணா பல்கலைகழக வளாகத்தில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.
தேசாந்திரி யூடியூப் சேனல் சார்பாக வெளியாகும் எஸ்.ராவிடம் கேளுங்கள் பகுதி- 3
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவல் நெட்பிளிக்ஸில் தொடராக வெளிவரவுள்ளது. அதற்கான முன்னோட்டம் வெளியாகியுள்ளது. நாவலின் மறக்க முடியாத துவக்க வரிகள் திரையில் காட்சியாக விரிவது அற்புதமாகவுள்ளது.
இம்மாத Frontline இதழில் எனது சிறுகதையின் மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது நன்றி : மினி கிருஷ்ணன் பிரபா ஸ்ரீதேவன் Frontline இதழ்.
புதிய குறுங்கதை சிம்பன்சிக் குரங்கு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தது மிருகக்காட்சி சாலையில் இருந்த அந்தச் சிம்பன்சிக் குரங்கிற்குச் சிகரெட் பிடிக்கும் பழக்கம் எப்படி உருவானது என்று தெரியவில்லை. ஆனால் அது கடந்த சில வாரங்களாகச் சிகரெட் பிடிக்கத் துவங்கியிருந்தது. சிகரெட் புகையை ஊதியபடியிருக்கும் சிம்பன்சியின் புகைப்படம் நியூஸ்பேப்பரில் வெளியான பிறகு அதைக் காணுவதற்காக ஏராளமானவர்கள் மிருகக் காட்சிசாலைக்கு வரத் துவங்கினார்கள். சிகரெட்டினை பற்ற வைத்து குரங்கின் முன்னால் நீட்டினார்கள். சிம்பன்சி ஸ்டைலாகச் சிகரெட் பிடித்துக் காட்டியது. மனிதர்களின் …
மே 3 வெள்ளிக்கிழமை மாலை கவிக்கோ மன்றத்தில் நடைபெறும் எனது புத்தக அறிமுகவிழாவிற்கான அழைப்பிதழ்.
ஓரியண்ட் பிளாக்ஸ்வான் எனது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கத்தை The Man Who Walked Backwards and Other Stories என வெளியிட்டுள்ளது. இந்த நூலை நீதிபதி பிரபாஸ்ரீதேவன் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். இதற்கான அறிமுக விழா மே 3 வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது. ஆங்கில எழுத்தாளர் அபர்ணா கார்த்திகேயன் அறிமுகவுரை நிகழ்த்துகிறார். நீதிபதி பிரபாஸ்ரீதேவன் தனது மொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். கதையாகும் நினைவுகள் என்ற தலைப்பில் நான் சிறப்புரை ஆற்றுகிறேன். இந்த விழாவோடு தேசாந்திரி பதிப்பகத்தின் …
நூல் அறிமுக விழா மற்றும் சிறப்புப் புத்தக விற்பனை Read More »
கியோமிசு கோவிலில் பெய்யும் மழை என்ற ஹசுய் கவாஸின் (Hasui Kawase) ஓவியத்தைக் கண்ட போது ரஷோமான் திரைப்படத்தின் முதற்காட்சி நினைவில் எழுந்தது . ரஷோமான் நுழைவாயிலில் மழை பெய்வதில் தான் படம் துவங்குகிறது. கற்படிக்கட்டுகளில் வழிந்தோடும் மழையைக் காணுகிறோம். மழைக்கு ஒதுங்கிய இருவரைக் காணுகிறோம். மழைக்குள்ளாக நினைவு கதையாக மாறுகிறது. அவர்களில் ஒருவர் எனக்குப் புரியவில்லை என்று சொல்வதில் தான் படம் துவங்குகிறது. புரியவில்லை என்று அவர் சொல்வது மனிதர்களின் செயலை, கண்முன்னே நடந்தேறிய நிகழ்வுகளை. …