admin

சிறகுள்ள புலி

புதிய நெடுங்கதை. அந்த வழக்கில் தீர்ப்பு வருவதற்குப் பதினாறு ஆண்டுகள் ஆகியிருந்தது. இன்று அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்போகிறார்கள் என்று தெரிவித்தார்கள். பூமாலை கொல்லப்பட்ட போது வெயிலானுக்கு வயது ஆறு. அந்த வழக்கில் எதிரிகளில் ஒருவராகக் குற்றம் சாட்டப்பட்ட தனுக்கோடி நாலு ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து போய்விட்டார். முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட தங்கமாரியப்பன் இப்போது நகராட்சி துணைத் தலைவராகிவிட்டார். அவரது இரண்டாவது மகன் ஆனந்த் உள்ளூரிலே வக்கீல் , அடுத்தவன் பிரபு பைபாஸ் ரோட்டில் பெரிய ஹோட்டல் …

சிறகுள்ள புலி Read More »

கவனிக்க மறந்த மனிதர்கள்

 (கிதார் இசைக்கும் துறவி சிறுகதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவம்) டாக்டர் இரா.மௌலிதரன் கிதார் இசைக்கும் துறவி இந்த வருடம் வெளியான பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சிறுகதைத் தொகுப்பு , அதற்குக் காரணம் அதன் ஆசிரியர் . எஸ் ரா அவர்கள் சிறுகதையில் ஒரு மாஸ்டர் என்றுதான் சொல்ல வேண்டும் . இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இத்தனை கதைகளுக்குப் பிறகும் அவருக்கு எழுதுவதற்கு ஒரு சிறுகதையாக என்ன மிஞ்சியிருக்கிறது என்ற கேள்வியே என்னை இந்தப் புத்தகத்தை நோக்கிய பெரும் …

கவனிக்க மறந்த மனிதர்கள் Read More »

துப்பாக்கி ஏந்திய துறவி

2006 இல் பூட்டான் ஜனநாயக நாடாக மாற விரும்பியது. அதுவரை நடைபெற்று வந்த மன்னராட்சி முடிவுக்கு வரவே பொதுத்தேர்தலை நடத்த முடிவு செய்தார்கள். தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாதிரி தேர்தல் ஒன்று ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தப் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட படமே The Monk and the Gun. 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தைப் பாவோ சோய்னிங் டோர்ஜி இயக்கியுள்ளார். இப்படம் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதிற்குப் போட்டியிட்டது கதை மூன்று சரடுகளைக் கொண்டிருக்கிறது. …

துப்பாக்கி ஏந்திய துறவி Read More »

தமிழக ஓவிய மரபுகள்

நாளை செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் நடைபெறவுள்ள தமிழக ஓவிய மரபுகள் குறித்த பயிலரங்கில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறேன்.

உலகப் புத்தக தினம்

நாளை ஏப்ரல் 23 உலகப் புத்தக தினம். யுனெஸ்கோ 1995 ம் ஆண்டு முதல் ஏப்ரல் 23 ம் தேதியை உலக புத்தக மற்றும் காப்புரிமை தினமாக கொண்டாடி வருகிறது. இந்த தினம் ஷேக்ஸ்பியர் மற்றும் செர்வாண்டஸின் நினைவுநாளாகும். உலகம் முழுவதும் புத்தக தினக் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. வாசகர்கள். சக படைப்பாளிகள் , பதிப்பாளர்கள். புத்தக விற்பனையாளர்கள். நூலகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உலகப் புத்தக தின வாழ்த்துகள். தேசாந்திரி பதிப்பகம் இதனைக் கொண்டாடும் விதமாக எனது …

உலகப் புத்தக தினம் Read More »

நீலச்சக்கரம் / கடிதம்

எனது சிறார் நூலான நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்தினை வாசித்து தங்ககோபி என்ற பள்ளிச்சிறுவன் எழுதிய கடிதம். மாணவர்கள் மத்தியில் புத்தக வாசிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். இன்று பல்வேறு பள்ளிகளில் அதற்கான முயற்சிகளை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்

வளைந்து செல்லும் வாக்கியங்கள்

சொல்வனம் இதழில் நம்பி கிருஷ்ணன் மாடலென்களும் டீயும் அல்லது ப்ரூஸ்டின் “In Search of Lost Time” என்றொரு கட்டுரையை எழுதியிருக்கிறார். பிரெஞ்சு எழுத்தாளர் மார்சல் ப்ரூஸ்டினை இதைவிடச் சிறப்பாக எவராலும் அறிமுகம் செய்துவிட முடியாது. அபாரமான கட்டுரை. தலைசிறந்த பேராசிரியர் வகுப்பில் உரையாற்றுவதைப் போலத் தனது வாசிப்பின் ஆழத்தை, ஞானத்தைக் கட்டுரையில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். நம்பி கிருஷ்ணனின் கட்டுரைகள் தமிழுக்குக் கிடைத்த கொடை என்றே சொல்வேன். மார்சல் ப்ரூஸ்டின் பெயரை எனது ஆங்கிலப் பேராசிரியர் ஜோசப் …

வளைந்து செல்லும் வாக்கியங்கள் Read More »

கவிதையினுள் மறைந்த கதை.

இந்திய ஆங்கிலக் கவிஞர் மீனா அலெக்சாண்டர் (Meena Alexander) ஒரு நேர்காணலில் தான் கதைகள் எழுத விரும்புகிறேன். ஆனால் அதைக் கவிதையாக எழுதிவிடுகிறேன் என்கிறார். அதே நேர்காணலின் இன்னொரு பதிலில் எனது கவிதையில் உப்புத் தண்ணீரில் கரைந்திருப்பது போலக் கதை கலந்திருக்கிறது என்றொரு விளக்கத்தையும் சொல்கிறார். கதை எனச் சிறுகதையாசிரியர்கள் சொல்வதும் மீனா அலெக்சாண்டர் சொல்வதும் ஒன்று தானா. கதை என்று சொல்லப்படுவது நிகழ்வுகளா. அல்லது அனுபவங்களின் திரட்சியா. இது தான் கதை என்று  எவராலும் வரையறை …

கவிதையினுள் மறைந்த கதை. Read More »

அரசனின் தனிமை

நிக்கோலஸ் அண்ட் அலெக்ஸாண்ட்ரா திரைப்படம் மூன்று சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது. ஒன்று ரஷ்யாவின் கடைசி ஜார் மன்னர் நிக்கோலஸ் II ன் திருமணம் மற்றும் அரசாட்சியைப் பற்றியது. இரண்டாவது லெனின் ரஷ்யப்புரட்சியை உருவாக்கிய நிகழ்வுகளை விவரிக்கிறது. மூன்றாவது இளவரசனின் நோயை குணப்படுத்துவதாக அரண்மனைக்கு வந்து அலெக்சாண்ட்ராவின் அன்பை பெற்று ரஷ்ய அரசை ஆட்டுவைத்த மதகுரு ரஸ்புடின் பற்றியது. இந்த மூன்று ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்ட சரடுகள். இவை இணைந்து கதைப்பின்னலை உருவாக்குகின்றன. பிரிட்டிஷ் தயாரிப்பில் உருவான படம் …

அரசனின் தனிமை Read More »