admin

இரண்டாவது நிழல்

புதிய சிறுகதை என் பெயர் ராமசேஷன். இதே தலைப்பில் எழுத்தாளர் ஆதவன் நாவல் எழுதியிருப்பதை அறிவேன். எனது கல்லூரி நாட்களில் நான் ஆதவனை விரும்பிப் படித்திருக்கிறேன். எனக்கு இந்தப் பெயரை வைத்த என்னுடைய தந்தை ஆதவனைப் படித்ததில்லை. தாத்தாவின் பெயர் என்பதால் எனக்கு வைத்துவிட்டார். சொல்லப் போனால் நானும் ஆதவன் போலவே நடுத்தரவயது கொண்ட, விருப்பமில்லாத அரசுத்துறை ஒன்றில் பணியாற்றுகிறவன். எனக்குச் சில புத்திசாலித்தனமான கிறுக்குத்தனங்கள் உண்டு. அதில் ஒன்று நானாக எதையும் கற்பனை செய்து கொள்வது. …

இரண்டாவது நிழல் Read More »

முகலாய வேட்டைக்காட்சிகள்

வேட்டையை வரைவதென்பது மனிதர்கள் குகையில் வசித்த காலத்திலிருந்து உருவான பழக்கம். குகை ஓவியங்களில் விலங்குகளே பிரதானமாக வரையப்பட்டிருக்கின்றன. மான் கூட்டத்தை அல்லது எருதை நேர் நின்று வேட்டையாடும் காட்சிகள் அதிகம் வரையப்பட்டிருக்கின்றன. இவற்றில் விலங்கிற்கும் மனிதனுக்குமான இடைவெளியை வரைந்தது முக்கியமானது. வேட்டையாடுபவர்களின் உடல்மொழி அழகாக வரையப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய ஓவியர்கள் 13ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து விலங்குகளை வரைவதிலும், வேட்டைக்காட்சிகளை வரைவதிலும் ஆர்வம் காட்டினார்கள். இது தனித்த வகைமையாக வளர்ச்சி அடைந்தது. வேட்டைக்காட்சி ஓவியங்கள் அரசர்கள் மற்றும் பிரபுக்களின் வனமாளிகைச் …

முகலாய வேட்டைக்காட்சிகள் Read More »

புதுச்சேரியில்

ஏப்ரல் 11 வியாழக்கிழமை புதுச்சேரி சென்றிருந்தேன். பேராசிரியர் ரவிக்குமார், சீனுதமிழ்மணி இருவரையும் சந்தித்து உரையாடினேன். ரவிக்குமார் கல்பனாவுடன் இணைந்து மணிப்பூரிக் கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். அந்த நூலை எனக்கு அளித்தார். மாலையில் பேராசிரியர் ஜெயசீல ஸ்டீபன் அவர்களைச் சந்தித்தேன்.. வரலாற்று அறிஞரான ஜெயசீல ஸ்டீபன் சாந்திநிகேதனில் பணியாற்றியவர். டச்சு, போர்த்துகீஸ். பிரெஞ்சு உள்ளிட்ட ஆறு மொழிகள் அறிந்தவர். 16 முதல் 19 நூற்றாண்டு வரையிலான டச்சு, போர்த்துகீஸ், பிரெஞ்சு காலனிய வரலாற்றை ஆராய்ந்து சிறப்பான நூல்களை எழுதியிருக்கிறார். …

புதுச்சேரியில் Read More »

எஸ்.ராவிடம் கேளுங்கள் -1

எஸ்.ராவிடம் கேளுங்கள் காணொளித் தொடர் நேற்று யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் கேள்விகளை இதில் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.

நன்றி

நேற்று (13.04.24) எனது பிறந்த நாள். காலை முதலே நண்பர்கள், வாசகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கத் துவங்கினார்கள். ஊரிலிருந்து அம்மாவும் அப்பாவும் வாழ்த்துச் சொன்னார்கள். தங்கைகளின் வாழ்த்து அதைத் தொடர்ந்து வந்தது. கவிஞர் தேவதச்சன் வாழ்த்துச் சொல்லியதோடு பிறந்தநாளை எப்படி உணருகிறீர்கள் என்று கேட்டார். மீனா அலெக்சாண்டர் கவிதை ஒன்றில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இருவர் சந்தித்துக் கொள்வார்கள். அப்போது அவர்களுக்கு என்ன பேசுவது என்று தெரியாது. ஆனால் அவர்கள் இளமையின் குருவி எங்கிருந்தோ சப்தமிடுவதைக் கேட்பதாக உணருவார்கள். …

நன்றி Read More »

கதை சொல்லும் சிலை

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் மார்ஜியானாவின் யோசனைப்படி எண்ணெய் பீப்பாய்க்குள் ஒளிந்துள்ள திருடர்களை மலையுச்சியிலிருந்து அருவியில் தள்ளிவிட்டுக் கொல்லுவார்கள். எண்ணெய் வணிகராக வந்துள்ளது திருடர்களின் தலைவன் அபு ஹுசேன் என அறிந்த அலிபாபா அவனுடன் சண்டையிட்டு வீழ்த்துவான். பீப்பாயினுள் ஒளிந்துள்ள திருடர்களைத் தள்ளிவிடுவதற்குப் பதிலாகச் சூடான எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்றிக் கொன்றதாகக் கதையில் உள்ளது. அந்தக் காட்சியைப் பாக்தாத் நகரில் ஒரு சிற்பமாகச் செய்து வைத்திருக்கிறார்கள். அந்தச் சிற்பத்தைச் செய்தவர் ஈராக்கிய சிற்பி முகமது …

கதை சொல்லும் சிலை Read More »

நடைக்கூலி

புதிய குறுங்கதை இது நடந்தது 1814ல். சுமேர்பூரில் முகாமிட்டிருந்த கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி ஜான் சாமுவேலிடம் கடிதம் பெறுவதற்காக அந்த ஆள் வெளியே காத்திருந்தார். ஆறடி அடிக்கும் மேலான உயரம். தலையில் பெரிய தலைப்பாகை. அடர்ந்து நரைத்த மீசை. தாடி. பழுப்பு நிறமான கண்கள். கூர்மையான மூக்கு. தோளில் போர்வை போன்றதொரு ஒரு துண்டு. பலானா கிராமத் தலைவருக்கு எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை ஒப்படைக்கும் போது சாமுவேல் அவரது பெயரைக் கேட்டார் “சாப்பன்“ என்று சொன்னார். ராஜஸ்தானிய …

நடைக்கூலி Read More »

“உறுபசி” – நமக்குள் இருக்கும் தீமை

முனைவர். வ. இரமணன் தமிழ் நாடு தடய அறிவியல் துறை. பிரபஞ்சத்தின் சிதறம் (entropy) எப்போதும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்கிறது வெப்பவியக்கவியலின் இரண்டாம் விதி. அதாவது ஒழுங்கின்மை அல்லது சிதறிக்கிடப்பதுதான் பிரபஞ்சத்தின் இயல்பு. எந்த ஒரு ஒழுக்கமும் இயற்கைக்கு எதிரானது. என்று ஆதிமனிதன் வாழத்தலைப்பட்டானோ அன்றே இயற்கையை எதிர்க்கத்துணிந்து விட்டான். இன்றுவரை மனிதன் இயற்கையை எதிர்த்துக்கொண்டேதான் இருக்கிறான். நாம் நமக்கென்று சட்டதிட்டங்கள் வகுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவை இல்லையென்றால் மனிதன் வாழ்வது கடினமாகிவிடும். ஒரு கட்டற்ற வாழ்க்கையை …

“உறுபசி” – நமக்குள் இருக்கும் தீமை Read More »

எம்.எஃப் ஹுசைன்

Through the Eyes of a Painter – ஓவியர் எம்.எஃப் ஹுசைன் இயக்கிய திரைப்படம். 18 நிமிஷங்கள் கொண்ட இந்தப் படம் ஓவியனின் பார்வையில் ராஜஸ்தானின் மூன்று கிராமங்களை மிகுந்த அழகுணர்வுடன் சித்தரிக்கிறது. இசையும் காட்சிப்படிமங்களும் இணைந்து புதிய அனுபவத்தைத் தருகின்றன. படத்தில் உரையாடல் கிடையாது காட்சிக்கோர்வைகளின் வழியே காலமும் கலைகளும் உருவாக்கிய மாற்றங்களை அடையாளப்படுத்துகிறார். மணிகௌலின் ஆவணப்படங்களைப் போன்ற அழகியலைக் கொண்டிருக்கிறது.