ஹோமரின் முடிசூட்டுவிழா
கிரேக்க கவிஞர் ஹோமருக்கு முடிசூட்டு விழா நடப்பதாக ஓவியர் ஜீன் அகஸ்டே டொமினிக் இங்க்ரெஸ் 1827ல் The Apotheosis of Homer என்ற ஓவியத்தை வரைந்திருக்கிறார். நிகரற்ற கிரேக்க இதிகாசங்களை எழுதிய ஹோமர் பார்வையற்றவர். ஓவியத்தின் மையமாக அவர் அமர்ந்திருக்கிறார். உலகின் சிறந்த கவிகள். ஓவியர்கள், சிற்பிகள் நாடக ஆசிரியர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் அவரைச் சுற்றிலும் இடம்பெற்றிருக்கிறார்கள். அதில் ஒருவராக ஷேக்ஸ்பியர் இடம் பெற்றிருக்கிறார். ஹோமருக்கு இணையான படைப்பாளி என்பதால் அவரையும் இங்க்ரெஸ் வரைந்திருக்கிறார். தாந்தே, ஈசாப். …









