admin

பக்கத்து இருக்கை

புதிய குறுங்கதை பத்தொன்பது ஆண்டுகளாக அவன் டயரி எழுதி வருகிறான். அவற்றை ஒரு மரப்பெட்டியில் பாதுகாத்தும் வருகிறான். அவனது டயரியில் ஒரு நாளில் என்ன நடந்தது என்பதைப் பற்றி எழுதவில்லை. மாறாக எங்கே சென்றாலும் அவனது பக்கத்து இருக்கையில் யார் அமர்கிறார்கள் என்பதைப் பற்றி மட்டுமே எழுதி வந்தான். பக்கத்து இருக்கையில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்பது பலருக்கும் பொருட்டேயில்லை. ஆனால் அவனுக்கு அது முக்கியமானது. தன்னருகில் அமர்ந்திருப்பவர் சில நிமிஷங்களோ, சில மணி நேரமோ தன்னுடன் அவரது …

பக்கத்து இருக்கை Read More »

சீனாவில் தாகூர்

சீனாவின் கடைசிப் பேரரசர் பு யி வுடன் மகாகவி ரவீந்திரநாத் தாகூர் நிற்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பார்த்தேன். இந்தப் பேரரசர் பற்றித் தான் The Last Emperor திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. கண்ணாடி அணிந்த மன்னர் என்ற பிம்பம் என் மனதில் ஆழப்பதிந்துவிட்டது. 1924 இல் தாகூர் சீனாவிற்கு வருகை தந்தார். அப்போது எடுக்கபட்ட புகைப்படமிது. Forbidden city எனப்படும் பீஜிங் அரண்மனை வளாகத்தில் இப்புகைப்படம் எடுக்கபட்டிருக்கிறது. 1924 மற்றும் 1928 எனத் தாகூர் இரண்டு முறை …

சீனாவில் தாகூர் Read More »

புதிய காணொளித் தொடர்

அன்றாடம் எனக்கு வருகின்ற மின்னஞ்சலில் பாதிக்கும் மேல் கேள்விகளே. அதிலும் புத்தகங்கள். எழுத்தாளர்கள், அயல் சினிமா மற்றும் பயணம் குறித்த கேள்விகளே அதிகம். பெரும்பான்மைக் கேள்விகளுக்குப் பதில் எழுதுவேன். ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தகக் கண்காட்சியின் போது வெளியிடப்படும் எனது புத்தகப் பரிந்துரை காணொளிகள் நிறையப் பேருக்கு உதவிகரமாக இருந்ததை அறிவேன். தேசாந்திரி யூடியூப் சேனல் வழியாக சென்னையும் நானும் என்ற காணொளித் தொடர் உருவாக்கப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றது இந்த சேனலில் நூறுக்கும் மேற்பட்ட எனது …

புதிய காணொளித் தொடர் Read More »

இருமொழிப் புத்தகம்

புதிய குறுங்கதை அவன் கையிலிருந்தது இருமொழிப்புத்தகம். அவனுக்கு அந்த இரண்டு மொழிகளும் தெரியாது. ஆனாலும் அப்புத்தகத்தை அவன் ஆசையாக வைத்திருக்கிறான். அடிக்கடி புரட்டிப் பார்க்கிறான். அது ஒரு கவிதைத் தொகுதி என்பதை வடிவத்தை வைத்துத் தெரிந்து கொண்டான். ஒரு பக்கம் கவிஞனின் மூலமொழியிலும் மறுபக்கம் மொழியாக்கம் செய்யப்பட்ட மொழியிலும் அச்சிடப்பட்டிருந்தது. அவனைப் போன்றவர்களுக்கு இருபுறமும் தெரிவது  சொல்வடிவு கொண்ட கோடுகளே. கிழே கிடந்த கூழாங்கல்லை கையில் எடுத்து உருட்டும் போது கிடைக்கும் சந்தோஷம் போல மொழி அறியாத …

இருமொழிப் புத்தகம் Read More »

மதராஸ் நினைவுகள்

கரிம்புமண்ணில் மத்தாய் ஜார்ஜ் எனப்படும் டாக்டர். கே.எம். ஜார்ஜ் 1914 ஆம் ஆண்டு பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிறந்தார். 1940 களில் மலையாளத்தில் எழுத்த்துவங்கிய இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சிறந்த ஆங்கில இலக்கிய விமர்சகர், தேர்ந்த மொழிபெயர்ப்பாளர். ஜவகர்லால் நேருவால் தேர்வு செய்யப்பட்டுச் சாகித்ய அகாதமியில் பணியாற்றியவர். Masterpieces of Indian Literature என்ற இந்திய இலக்கியங்களின் மிகப்பெரிய தொகுப்பு நூலை எடிட் செய்தவர். ஜார்ஜின் சுயசரிதையான AS I SEE MYSELF நூலை சாகித்ய …

மதராஸ் நினைவுகள் Read More »

மழையின் கறுப்புக் கோடுகள்

மாங்கா என்பது ஜப்பானின் புகழ்பெற்ற சித்திரக்கதை வடிவம். வயது வாரியாக மாங்கா வெளியிடப்படுகிறது. புகழ்பெற்ற மாங்கா நூல்கள் லட்சக்கணக்கில் விற்பனையாகின்றன. ஏன் ஜப்பானியர்கள் சித்திரங்களுடன் படிக்க விரும்புகிறார்கள். அது அவர்களின் பண்பாடு. வாசிப்பின் பிரதான முறை. படக்கதை என்பதை ஆரம்ப வாசிப்பு என்றே இந்தியாவில் நினைக்கிறார்கள். அதனால் பெரியவர்கள் காமிக்ஸ் படிப்பதை ஒவ்வாத விஷயமாக நினைக்கிறார்கள். ஆனால் இப்போது படக்கதை என்பது தனி வகைமையாக உருக்கொண்டதோடு அதற்கான பெரிய சந்தையும் உருவாகியுள்ளது. ஜப்பானில் மாங்கா வரைவதற்கும் எழுதுவதற்கும் …

மழையின் கறுப்புக் கோடுகள் Read More »

நீண்ட வாக்கியம்

இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற நார்வேஜிய எழுத்தாளரான ஜான் ஃபோஸ்ஸே தனது எழுத்துமுறையை Slow Prose என்கிறார். எழுத்தை அதன் சொந்த வேகத்தில் செல்ல அனுமதிக்க வேண்டும். தேவையற்ற பரபரப்பு. வேகத்தை நாமாக உருவாக்க வேண்டியதில்லை என்கிறார் ஜான் ஃபோஸ்ஸே இந்த எழுத்துமுறை கவிதையைப் போல ஒவ்வொரு சொல்லும் முக்கியம் கொண்டதாக, நுணுக்கமான விவரிப்புகள் கொண்டதாக, ஆழ்ந்து வாசித்துப் புரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கும் என்பது அவரது வாதம். சொற்களின் தாளம் மற்றும் வாக்கியக் …

நீண்ட வாக்கியம் Read More »

கதைகளின் ஆழ்படிமங்கள்

மணிகண்டன் ஐந்து வருட மௌனம் சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்தவுடன் உங்களுக்கு எழுதுகிறேன். இக்கதைகள் மொத்தமாய்க் குரலற்றவர்களின் குரலாய் ஒலிக்கிறன. இக்கதைகளின் நாயக நாயகியர் வாழ்வின் பாரத்தை மௌனமாகச் சுமப்பவர்கள், அனைத்து விஷயங்களுக்கும் தார்மீக பொறுப்பேற்பவர்கள்,பழையவற்றில் சிலதை விடாது பிடித்துக் கொண்டிருப்பவர்கள் சிறிய வைராக்கியங்கள் நிறைய உடையவர்கள் , சிறிய விஷயங்களிலேயே நிறைவை காண்பவர்கள், தனித்துவமிக்கக் குணாதிசயம் வழி துயர் மிகு வாழ்வை கடப்பவர்கள். நீங்கள் அவர்களது வாழ்வை எழுதியிருக்கும் விதத்தில் அவர்களிடம் பெரிய குற்றச்சாட்டோ பரிதாபமோ …

கதைகளின் ஆழ்படிமங்கள் Read More »

இரண்டு நகரங்கள்

போலந்து எழுத்தாளர் ஸ்லாவோமிர் மிரோஜெக் பாலத்தில் ஒரு ஓட்டை (THE HOLE IN THE BRIDGE) என்றொரு குறுங்கதையை எழுதியிருக்கிறார். ஒரு காலத்தில் ஒரு நதியின் இரு கரைகளிலும் இரண்டு சிறுநகரங்கள் இருந்தன . இரண்டினையும் இணைக்கும் விதமாக ஒரு பாலம் கட்டப்பட்டிருந்தது. ஒரு நாள் அந்தப் பாலத்தில் ஒரு ஓட்டை ஏற்பட்டது. அந்த ஓட்டையைச் சரி செய்ய வேண்டும் எனப் பலரும் குரல் கொடுத்தார்கள். ஆனால் யார் சரிசெய்வது என்பதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. காரணம் ஒருவரை …

இரண்டு நகரங்கள் Read More »

நூற்றாண்டின் சாட்சியம்

குமாரமங்கலம் தியாக தீபங்கள் என்று டாக்டர் சுப்பராயன் வாழ்க்கை வரலாற்றை கே.ஜீவபாரதி எழுதியிருக்கிறார். மிக முக்கியமான வாழ்க்கை வரலாற்று நூல். 500 பக்கங்களுக்கும் மேலாக டாக்டர் சுப்பராயனின் வாழ்க்கை மற்றும் அரசியல் பங்களிப்பைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்கள். இதனை பொள்ளாச்சி மகாலிங்கம் அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. இந்த நூலின் வழியே டாக்டர் சுப்பராயன் குடும்பத்தினைப் பற்றி மட்டுமின்றி, நீதிக்கட்சி உருவான வரலாறு. அதன் செயல்பாடுகள். அன்றைய சட்டமன்ற நடவடிக்கைகள். அரசு பணியாளர் தேர்வாணையம் உருவானது. அறநிலையத் துறையை உருவாக்கியது. …

நூற்றாண்டின் சாட்சியம் Read More »