admin

என்டோனியின் கனவு

லுசினோ விஸ்காண்டியின் La Terra Trema 1948 ஆம் ஆண்டு வெளியானது. இத்தாலியின் மீனவ கிராமம் ஒன்றின் வாழ்க்கையை யதார்த்தமாக, கலைநேர்த்தியுடன் படமாக்கியிருக்கிறார் விஸ்காண்டி. இப்படம் சிசிலியன் மீனவர்களின் வாழ்க்கையை நிஜமாகச் சித்தரிக்கிறது என்று வெனிஸ் திரைப்படவிழாவில் விருது பெற்றிருக்கிறது. ஜியோவானி வெர்காவின் நாவலை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாக்கபட்டிருக்கிறது. தொழில்முறை சாராத நடிகர்களைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதே படத்தின் பலம்.. மீனவர்கள் கலையாத இருளுக்குள் வலையோடு கடலுக்குச் செல்வது. மீனவ குடும்பத்தின் நெருக்கடிகள். உணவு தயாரிக்கும் விதம். …

என்டோனியின் கனவு Read More »

குள்ளனும் டாவின்சியும்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான பர்லாகர் க்விஸ்டின் குள்ளன் நாவலை தி.ஜானகிராமன் மொழியாக்கம் செய்திருக்கிறார். சிறப்பான மொழியாக்கம். நாவலின் கவித்துவமான வர்ணனைகள் மற்றும் தத்துவ எண்ணங்களை நேர்த்தியாகத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். The Dwarf நாவல் 1944ல் ஸ்வீடிஷ் மொழியில் வெளியானது. 1945ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.  1986 அக்டோபரில் சமுதாயம் பதிப்பகம் குள்ளன் நாவலை வெளியிட்டிருக்கிறது. இந்த நாவலில் ஓவியர் லியோனார்டோ டாவின்சி முக்கியக் கதாபாத்திரமாக இடம்பெற்றுள்ளார். மிலன் பிரபுவான லுடோவிகோ ஸ்ஃபோர்சாவின் அழைப்பில் …

குள்ளனும் டாவின்சியும் Read More »

ஹெர்சாக் சொல்கிறார்

தாமஸ் வான் ஸ்டெய்னேக்கர் இயக்கிய Werner Herzog: Radical Dreamer படத்தின் துவக்கத்தில் தன்னை A good soldier of cinema என ஹெர்சாக் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். ஆம். போர்வீரனின் துணிச்சலும் தியாகமும் கொண்டவர் தான் வெர்னர் ஹெர்சாக். பதினாறு வயதில் துவங்கிய அவரது சினிமாக் கனவு நிறைய போராட்டங்களையும் தடைகளையும் சந்திக்கச் செய்தது. அவற்றை வெற்றிகரமாக வென்று காட்டி சாதனைகளை நிகழ்த்தியவர் ஹெர்சாக். இன்று சர்வதேச சினிமாவில் அவரது பெயர் ஒரு அடையாளம். நிகரற்ற திரைக்கலைஞராகக் …

ஹெர்சாக் சொல்கிறார் Read More »

ஒளி தரும் மகிழ்ச்சி

ஜப்பானுக்கு வெளியே அதிகம் கவனம் பெறாத எழுத்தாளர் யோகோ சுஷிமா (Yūko Tsushima). ஜப்பானியத்தனம் இல்லாத ஜப்பானிய படைப்பாளி என்பதால் மேற்குலகம் அவரைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. சர்வதேசப் பதிப்பாளர்கள் சிறந்த இலக்கியப் படைப்புகளை விடவும் புத்தகச்சந்தையில் விற்பனைக்கான அதிக சாத்தியமுள்ள படைப்புகளையே தேர்வு செய்கிறார்கள்.  அதற்கு ஜப்பானியதனம் அவசியமானது. அது முரகாமியிடம் இருக்கிறது. சுஷிமாவிடம் இல்லை. 2016ல் மறைந்துவிட்ட சுஷிமாவின் எழுத்துகள் தனித்து பேசப்பட வேண்டியவை. ஜப்பானிய இலக்கிய உலகம் யோகோ சுஷிமாவைக் கொண்டாடுகிறது. அவர் பல்வேறு …

ஒளி தரும் மகிழ்ச்சி Read More »

மூன்று சிறுமிகள்

டச்சு ஓவியரான வாலி மோஸ் (Wally Moes)ஆம்ஸ்டர்டாமில் பிறந்தவர். ஆகஸ்ட் அலெபே மற்றும் ரிச்சர்ட் பர்னியர் ஆகியோரிடம் ஓவியம் பயின்றிருக்கிறார். உணர்ச்சிகரமான ஓவியங்களை வரைவதில் பெயர் பெற்றவர் வாலி மோஸ். அதிலும் குறிப்பாகக் குழந்தைகளை வரைவதில் தனித்துவம் கொண்டவர். 1880ம் ஆண்டின் கோடையில் மோஸ், ஓவியர் தெரேஸ் ஸ்வார்ட்ஸை சந்தித்தார், அவர் வழியாக கலையுலகிற்கு அறிமுகமானார். ஜெர்மனியில் சிறிது காலம் தங்கிய மோஸ் பின்பு  ஆம்ஸ்டர்டாமிற்குத் திரும்பினார். 1884 இல் பாரிஸுக்குச் சென்றார், அங்குள்ள கலைக்கூடங்களில் தனது …

மூன்று சிறுமிகள் Read More »

Usawa இதழில்

எனது புலிக்கட்டம் சிறுகதை ஜி.பரத்குமாரால் “Lambs and Tigers” என மொழியாக்கம் செய்யப்பட்டு Usawa Literary Review இதழில் வெளியாகியுள்ளது.

நூல் கொள்முதல் கொள்கை 2024

தமிழ்நாடு அரசின் சார்பில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்கம் வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் கொள்கை 2024யை வெளியிட்டுள்ளது நூலகத்துறையின் எதிர்காலம் மற்றும் பதிப்புத்துறையின் வளர்ச்சி, வாசகர்களின் பன்முகப் பயன்பாடுகளுக்கான வழிகாட்டுதல்கள், நூலகங்களுக்கான நிதி ஒதுக்கீடு, நூல் தேர்விற்கான சிறப்புக் குழு, இணைய வழியாக விண்ணப்பம் செய்வது, நூல்களுக்கான விலையை முறையாக நிர்ணயம் செய்வது எனச் சிறந்த வழிகாட்டுதல்களைக் கொண்ட நிகரற்ற ஆவணமாகவே இதனைக் கருதுகிறேன். நூல் கொள்முதலை ஆண்டுமுழுவதும் செயல்படுத்தும் முயற்சி மிகுந்த …

நூல் கொள்முதல் கொள்கை 2024 Read More »

எழுத்தின் சிறகுகள்.

Shadows in the Sun 2005ல் வெளியான திரைப்படம். பிராட் மிர்மன் இயக்கியுள்ளார் லண்டனில் வசிக்கும் ஜெர்மி டெய்லர் பதிப்பகம் ஒன்றில் எடிட்டராக வேலை செய்கிறான். ஒரு நாள் பதிப்பக உரிமையாளர் அவனிடம் “நீ வெல்டன் பாரிஷைப் படித்திருக்கிறாயா“ என்று கேட்கிறார். “மிகவும் நல்ல எழுத்தாளர். அவரது Shadow Dancer நாவலை விரும்பி படித்திருக்கிறேன். அவர் எழுத்துலகை விட்டு விலகி இத்தாலியின் கிராமப்புறம் ஒன்றில் வசிக்கிறார், யாரையும் சந்திப்பதில்லை “ என்கிறான் ஜெர்மி. “நீ அவரைச் சந்தித்துப் …

எழுத்தின் சிறகுகள். Read More »

சாகித்ய அகாதமி விழா

சாகித்ய அகாதமியின் நிறுவன நாள் விழா மார்ச் 12 மாலை சென்னையிலுள்ள சாகித்ய அகாதமி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். இலக்கியத்தின் புதிய பாதைகள் என்ற தலைப்பில் சமகால உலக இலக்கியம் மற்றும் இந்திய இலக்கியத்தின் புதிய போக்குகள் குறித்து உரையாயாற்றுகிறேன். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள குணா பில்டிங்கின் இரண்டாம் தளத்தில் சாகித்ய அகாதமி அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கே தான் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி …

சாகித்ய அகாதமி விழா Read More »

ஒரு வரிக்கதை

லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான அகஸ்டோ மான்டெரோசோ (Augusto Monterroso) ஒரேயொரு வரியில் கதை எழுதியிருக்கிறார். டைனோசர் என்ற அந்தக் கதை பல்வேறு தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளது. இதாலோ கால்வினோ அதனை நிகரற்ற கதை என்று புகழுகிறார். அந்தக் கதை குறித்துப் போர்ஹெஸ் தனது கட்டுரை ஒன்றிலும் வியந்து குறிப்பிடுகிறார். Cuando despertó, el dinosauro todavía estaba allí (When he awoke, the dinosaur was still there ) என்பதே அகஸ்டோ மான்டெரோசோவின் கதை. ஆங்கிலமொழி …

ஒரு வரிக்கதை Read More »