admin

நாளும் ஒரு கதை

கு.அழகிரிசாமியின் சிறுகதைகள் குறித்து இணைய வழியாக நடத்தப்படும் தொடர்நிகழ்வில் இன்றிரவு கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறேன். நாளும் ஒரு கதை என இணைய வழியாக இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இன்று அதன் 95வது நாள். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் அறம் தனுஷ்கோடி ராமசாமி இதனை நடத்தி வருகிறார். சிறப்பான இந்த முன்னெடுப்பிற்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

திரைப்பட விருது

எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக் கல்லூரியைச் சேர்ந்த மோகன் குமார் எனது சிறுகதை புர்ராவைக் குறும்படமாக இயக்கியுள்ளார். இந்தப் படம் தமிழக அரசின் திரைப்பட விருது பெற்றுள்ளது. சிறந்த இயக்குநர் விருது பெற்றுள்ள மோகன் குமாருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

திவாகர் காட்டும் சென்னை

1993 ஆக இருக்கலாம். The Marriage of Maria Braun படம் திரையிடுவதைக் காணுவதற்காகச் சென்னை பிலிம்சேம்பர் சென்றிருந்தேன். அங்கே படம் பார்ப்பதற்காக வந்திருந்த மொழிபெயர்ப்பாளர் சதாசிவம் கன்னட எழுத்தாளர் எஸ்.திவாகரின் சிறுகதைகளை அறிமுகம் செய்து உரையாடினார். அரைமணி நேரத்திற்கும் மேலாகத் திவாகரைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். திவாகர் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் வேலை செய்வதாகச் சொல்லி நாம் ஒரு நாள் சந்திப்போம் என்றார். சில ஆண்டுகளுக்குப் பின்பு எஸ்.திவாகரின் சிறுகதைகளை அந்தரத்தில் நின்ற நீர் …

திவாகர் காட்டும் சென்னை Read More »

கதைகளின் வரைபடம்

லிடியா டேவிஸ் சிறந்த சிறுகதையாசிரியர். குறிப்பாக அவரது குறுங்கதைகள் புகழ் பெற்றவை. மேடம்பவாரி உள்ளிட்ட சில நாவல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். அவரது கட்டுரைகளின் தொகுப்பு Essays One, இதில் அவரது எழுத்துலகப் பிரவேசம் மற்றும் அவருக்கு விருப்பமான எழுத்தாளர்கள். கதைகள் குறித்த எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். லிடியாவின் உரைநடை பனிச்சறுக்கு செல்வது போலச் சறுக்கிக் கொண்டு போவது. அவர் தாவிச்செல்லும் புள்ளிகள் வியப்பளிக்கக் கூடியவை. கல்லூரி நாட்களிலே அவருக்குச் சிறுகதை ஆசிரியராக வேண்டும் என்ற கனவு இருந்தது. …

கதைகளின் வரைபடம் Read More »

கவிஞனின் நாட்கள்

 “Every man has his secret sorrows which the world knows not; and, oftentimes we call a man cold when he is only sad.” என்ற லாங்ஃபெலோவின் மேற்கோளுடன் I Heard the Bells படம் துவங்குகிறது. படத்தை ஜோசுவா என்க் இயக்கியுள்ளார். அமெரிக்கக் கவிஞரான ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெலோவின் வாழ்க்கையை விவரிக்கும் இத் திரைப்படம் உள்நாட்டு போருக்கு சற்று முன் மற்றும் போரின் போது அவரது வாழ்க்கையின் கதையைச் …

கவிஞனின் நாட்கள் Read More »

இந்து தமிழ் விழாவில்

இந்து தமிழ் நாளிதழ் தமிழகமெங்கும் வாசிப்புத் திருவிழாவை நடத்தி வருகிறது. சென்னை வாசிப்புத் திருவிழா மார்ச் 2 காலை பத்து மணிக்கு பேட்ரிசியன் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்

நுண்ணோக்கியும் தொலைநோக்கியும்

கவிஞர் தேவதச்சனின் புதிய கவிதைத்தொகுப்பான தேதியற்ற மத்தியானம் குறித்த தனது வாசிப்பனுபவத்தை மதார் பகிர்ந்துள்ளார். கவிதைகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தேவதச்சனின் கவிதைகளை ஆழ்ந்து புரிந்து கொண்டு எழுதியுள்ள விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. மதாருக்கு என் வாழ்த்துகள் தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ள தேவதச்சனின் இந்தத் தொகுப்பு மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. •• தேவதச்சனின் தேதியற்ற மத்தியானம் – மதார் தேவதச்சனின் புதிய கவிதை நூலான தேதியற்ற மத்தியானம் வெளிவந்துள்ளது. நுண்ணோக்கியும் தொலைநோக்கியும் இருக்கும் கவிதைகள் என இந்தத் தொகுப்பிலுள்ள …

நுண்ணோக்கியும் தொலைநோக்கியும் Read More »

ஹோமரின் முடிசூட்டுவிழா

கிரேக்க கவிஞர் ஹோமருக்கு முடிசூட்டு விழா நடப்பதாக ஓவியர் ஜீன் அகஸ்டே டொமினிக் இங்க்ரெஸ் 1827ல் The Apotheosis of Homer என்ற ஓவியத்தை வரைந்திருக்கிறார். நிகரற்ற கிரேக்க இதிகாசங்களை எழுதிய ஹோமர் பார்வையற்றவர். ஓவியத்தின் மையமாக அவர் அமர்ந்திருக்கிறார். உலகின் சிறந்த கவிகள். ஓவியர்கள், சிற்பிகள் நாடக ஆசிரியர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் அவரைச் சுற்றிலும் இடம்பெற்றிருக்கிறார்கள். அதில் ஒருவராக ஷேக்ஸ்பியர் இடம் பெற்றிருக்கிறார். ஹோமருக்கு இணையான படைப்பாளி என்பதால் அவரையும் இங்க்ரெஸ் வரைந்திருக்கிறார். தாந்தே, ஈசாப். …

ஹோமரின் முடிசூட்டுவிழா Read More »

ஷெர்லி அப்படித்தான்

பேராசிரியர் வினோத் ஒருங்கிணைப்பு செய்த எனது நூறு சிறுகதைகள் குறித்த அறிமுக நிகழ்வில் விருதுநகர் மாவட்டக் கல்வி அலுவலர் ஜான் பாக்கியசெல்வன் ஷெர்லி அப்படித்தான் சிறுகதையை குறித்து சிறப்பாகப் பேசியுள்ளார். அவருக்கு எனது அன்பும் நன்றியும்.

இயற்கையுடன் இணைந்து

நிலம் கேட்டது கடல் சொன்னது – வாசிப்பனுபவம் குமரன். ஆயிரம் சூரியன்கள் ஒன்றாக வெடித்தது போல் இருந்தது அச்சம்பவம். என்ன நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் முன்பே பலருடைய உயிரும் உடலில் இருந்து பிரிந்து விட்டது. கரும்புகை திரண்டு வானத்துக்கும். பூமிக்குமாக நாய்க்குடை வடிவில் புகை மண்டலம் சூழ்ந்தது. என்ன நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் முன்பே ஒட்டுமொத்த ஹிரோஷிமா நகரும் தரைமட்டமானது. அணுவீச்சில் உடல் பாதிப்புக் கொண்டு உருகத் துவங்கியது. அணுகுண்டிலிருந்து வெளிப்பட்ட வெப்பத்தின் அளவு மூன்று லட்சம் …

இயற்கையுடன் இணைந்து Read More »