admin

இன்பங்களின் தோட்டம்

நெதர்லாந்தின் புகழ்பெற்ற ஓவியரான ஹிரோனிமஸ் போஷ் வரைந்த The Garden of Earthly Delights நிகரற்ற கலைப்படைப்பாகும். மூன்று பகுதிகளாக உள்ள இவ்வோவியம் 1500களில் வரையப்பட்டது. கார்டன் ஆஃப் எர்த்லி டிலைட்ஸ் என்ற தலைப்பு போஷ் வைத்ததில்லை என்கிறார்கள். நம்மை முதலில் வசீகரிப்பது அதன் கவித்துவமான தலைப்பே. புவியிலுள்ள இன்பங்களின் பட்டியல் முடிவில்லாதது. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா எனப் பாரதியார் பாடுகிறார். சிற்றின்பங்களில் ஆழ்ந்துவிடும் மனிதன், பேரின்பங்களை மறந்துவிடுகிறான் என்று எல்லாச் சமயங்களும் …

இன்பங்களின் தோட்டம் Read More »

கல்முகம்

மனித முகத்தைப் போல தோற்றமளிக்கும் கற்களைச் சேகரித்து ஜப்பானில் ஒரு மியூசியம் வைத்திருக்கிறார்கள். அது பற்றிய காணொளி

எழுத்தே வாழ்க்கை

எஸ். ராவின் புத்தகத்தினூடே ஒரு பயணம் : G. கோபி எழுத்தாளர். எஸ். ராமகிருஷ்ணன் தமிழின் முக்கியப் புனைவு எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்த படைப்பாளுமை. உபபாண்டவம், நெடுங்குருதி, யாமம், இடக்கை, சஞ்சாரம், மண்டியிடுங்கள் தந்தையே போன்றவை அவரது முக்கியமான நாவல்கள். எனது இந்தியா, மறைக்கப்பட்ட இந்தியா போன்ற வரலாற்றுக் கட்டுரைகளும் அவசியம் வாசிக்க வேண்டியவை. மேலும் துணையெழுத்து, இலக்கற்ற பயணி, ரயில் நிலையங்களின் தோழமை, வீட்டில்லாத புத்தகங்கள், தேசாந்திரி போன்ற பயணக்கட்டுரைக்களும் வாசிப்பதற்கு அரிய தகவல்களும் வித்தியாசமான …

எழுத்தே வாழ்க்கை Read More »

ஏழு பாடல்கள்

Attenborough’s Wonder of Song என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். இதில் பிபிசியைச் சேர்ந்த டேவிட் அட்டன்பரோ தனக்குப் பிடித்தமான இயற்கையின் ஏழு பாடல்களை அறிமுகப்படுத்துகிறார். குறிப்பாக Indri Lemur,எனும் குரங்கின் பாடல். பறவைகளான Great Tit, Nightingale, Lyrebird, Fairy Wren, . Hawaiian ʻŌʻō பாடல் மற்றும் Humpback Whale எனப்படும் திமிங்கிலம் ஆழ்கடலில் ஏற்படும் ஓசை உள்ளிட்ட ஏழு பாடல்களை விவரிக்கிறார். அத்தோடு பறவைகள் ஏன் பாடுகின்றன. அதன் குரலின் இனிமைக்கு என்ன காரணம். …

ஏழு பாடல்கள் Read More »

க.நா.சுவும் ரஷ்ய இலக்கியங்களும்

க.நா.சுவைப் போல உலக இலக்கியங்களைத் தேடித்தேடி படித்த இன்னொரு தமிழ் எழுத்தாளரைக் காண முடியாது. சர்வதேச படைப்பாளிகளை முறையாக அறிமுகம் செய்ததோடு அவர்களின் முக்கிய நாவல்களை மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார். இவ்வளவு மொழிபெயர்ப்புகளை மேற்கொண்ட க.நா.சு ஏன் ரஷ்ய இலக்கியங்கள் எதையும் மொழிபெயர்ப்பு செய்யவில்லை. அவை பிடிக்கவில்லையா. அல்லது பலரும் மொழிபெயர்ப்புச் செய்கிறார்களே நாம் வேறு எதற்காக மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என நினைத்தாரா என்று தெரியவில்லை. இவ்வளவிற்கும் க.நா.சுவின் காலத்தில் நிறைய ரஷ்ய இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்ப்புச் …

க.நா.சுவும் ரஷ்ய இலக்கியங்களும் Read More »

ஒகினமாரோ என்ற நாய்

ஜப்பானைச் சேர்ந்த செய் ஷோனகான் எழுதிய The Pillow Bookல் ஒரு நிகழ்ச்சி குறிப்பிடப்படுகிறது. பேரரசரின் விருப்பமான பூனையின் பெயர் மையோபு. அதைக் கவனித்துக் கொள்ள ஒரு பணிப்பெண் இருந்தாள். அவளது பெயர் முமா. ஒரு நாள் அந்தப் பூனை நீண்டநேரமாக வெயிலில் தூங்கிக் கொண்டிருந்தது, அதைக் கலைப்பதற்காக முமா அரண்மனை நாயை வேடிக்கையாக ஏவிவிட்டாள். ஒகினமாரோ என்ற அந்த நாய் பூனையின் மீது வேகமாகப் பாய்ந்தது. திடுக்கிட்டுப் போன பூனை பயத்தில் தப்பியோடியது. மன்னர் அப்போது …

ஒகினமாரோ என்ற நாய் Read More »

பெயர் மறந்த மனிதன்

புகழ்பெற்ற ஸ்பானிஷ் இயக்குநரான விக்டர் எரிஸ் தனது ஐம்பது ஆண்டுகாலத் திரைவாழ்க்கையில் ஐந்து படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். அவர் கேன்ஸ் திரைப்பட விழா விருது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளைப் பெற்றவர். 31 வருஷங்களுக்குப் பிறகு விக்டர் எரிஸ் தனது புதிய திரைப்படமான Close Your Eyesயை வெளியிட்டிருக்கிறார். இப்போது அவரது வயது 83. சினிமாவால் நமது நினைவுகளை மீட்டெடுக்கமுடியும். அது ஒரு வகை அருமருந்து எனக்கூறும் எரிஸ் இதையே தனது படத்தின் மையக்கருவாகவும் கொண்டிருக்கிறார். இதுவும் …

பெயர் மறந்த மனிதன் Read More »

கோனேரி ராஜபுர ஓவியங்கள்

கோனேரி ராஜபுரம் சென்றிருந்தேன். திருநல்லம் என்பது அதன் பழைய பெயர். அங்குள்ள பஞ்சலோக நடராஜர் விக்கிரகம் மிகப்பெரியது. பேரழகு மிக்கது. செம்பியன் மாதேவி இக்கோவிலைக் கற்றளியாகக் கட்டினார் என்கிறார்கள். கோவிலிலுள்ள இறைவியின் பெயர் அங்கவள நாயகி. எவ்வளவு அழகான பெயர். கும்பகோணம் – காரைக்கால் பாதையில் எஸ்.புதூர் என்னும் ஊரைக் கடந்து தெற்கே வடமட்டம் செல்லும் சாலையில் பயணம் செய்தால் கோனேரி ராஜபுரம் அடையலாம். சாலைவழியெங்கும் நாணல் பூத்திருந்தன. இளவெயிலின் முணுமுணுப்பு. மண்சாலைகளுக்கு உள்ள நினைவு தார்ச் …

கோனேரி ராஜபுர ஓவியங்கள் Read More »

சோமாவைப் பாடுதல்

சோமா என்ற “ஏ.கே.ராமானுஜனின் புதிய கவிதைத்தொகுப்பினை வாசித்தேன். ஆங்கிலக் கவிஞரும் நாட்டுப்புறவியல் ஆய்வாளருமான ஏ.கே.ராமானுஜனின் மறைவிற்குப் பிறகு அவரது கையெழுத்துப்பிரதிகள், நாட்குறிப்புகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் சிகாகோ பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட்டு பாதுகாப்பட்டு வருகின்றன. பெரும்பாலான சேகரிப்பு ஆங்கிலத்திலிருந்தாலும், தமிழ், கன்னட கையெழுத்து பிரதிகளும் அங்கே காணப்படுகின்றன. இதில் அவரது சான்றிதழ்கள் புகைப்படங்கள் மற்றும் கடிததொடர்புகள், நினைவுக்கட்டுரைகள் தனியே தொகுக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை வெளியிடப்படாத அவரது ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பைச் சோமா என்ற பெயரில் தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். இந்தத் …

சோமாவைப் பாடுதல் Read More »

காஞ்சிபுரம் புத்தகத் திருவிழாவில்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மைதானத்தில் புத்தகத் திருவிழா 09.02.2024 முதல் 19.02.2024 வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளது இந்த விழாவில் 13 செவ்வாய்கிழமை மாலை உரையாற்றுகிறேன்