கே.ஜி, ஜார்ஜ் நினைவு மலர்
மறைந்த இயக்குநர் கே.ஜி. ஜார்ஜின் நினைவைப் போற்றும்விதமாக மலையாளத்தில் வெளியாகியுள்ள மலரில் எனது கட்டுரை இடம் பெற்றுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் நண்பர் ஷாஜி.
மறைந்த இயக்குநர் கே.ஜி. ஜார்ஜின் நினைவைப் போற்றும்விதமாக மலையாளத்தில் வெளியாகியுள்ள மலரில் எனது கட்டுரை இடம் பெற்றுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் நண்பர் ஷாஜி.
புதிய சிறுகதை நரேந்திரன் ஒரு ஜப்பானிய நிறுவனத்தில் வேலை செய்து வந்தான். ஒவ்வொரு ஆண்டும் அவர்களது அலுவலகத்திலிருந்து பத்துப் பேர் தேர்வு செய்யப்பட்டு ஜப்பான் சுற்றுலா அனுப்பி வைக்கபடுவார்கள். இந்த முறை அவன் தேர்வு செய்யப்பட்டிருந்தான். அயோகிகஹாரா என்ற புகழ்பெற்ற வனத்தில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இணையத்தில் தேடி அந்தக் காட்டின் காணொளிகளைப் பார்த்தான். தற்கொலைக்குப் புகழ்பெற்ற காடு என்றார்கள்.. அவர்கள் நிறுவனத்தில் நேரந்தவறாமை, முழுமையான ஈடுபாட்டுடன் வேலை செய்வது. உரத்த சப்தமின்றிப் பணியாற்றுவது அடிப்படை விதிகளாகும். …
‘மாஸ்கோவின் மணியோசை’ வாசிப்பனுபவம். ரம்யா ரோஷன் ரஷ்ய இலக்கியமும் எழுத்தாளர்களும் என்றுமே எனக்கு ஆச்சர்யம் தான்.ரஷ்ய எழுத்தாளர்கள் நிச்சயம் தத்துவவாதிகளாகவும் சிந்தனையாளர்களாகவும் இருந்திருக்க வேண்டும். சமூகத்தை இவ்வளவு அக்கறையோடும், கவலையோடும், உணர்ச்சியோடும் பார்க்கும் இலக்கியம் வேறெதுவும் இல்லை என்றே எனக்குத் தோன்றும். நம்மில் பலர் ரஷ்ய இலக்கியங்களை ரசிக்க காரணம் எஸ்.ரா ஐயா வாக தான் இருக்க முடியும். ரஷ்ய இலக்கியத்தின் நிகரற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்து அவர் பேசியதும் எழுதியதும் ஏராளம். ரஷ்ய இலக்கியம் குறித்த …
பிப்ரவரி 9 வெள்ளிக்கிழமை மாலை திருவாரூர் புத்தகத் திருவிழாவில் உரையாற்றுகிறேன்
கேரளாவில் நடைபெறும் சர்வதேச இலக்கிய விழாவில் கலந்து கொள்ள நாளை ( பிப்ரவரி 2) திருச்சூர் செல்கிறேன்.
The Naked Island படத்தில் தொலைதூரத் தீவு ஒன்றில் வாழும் ஆணும் பெண்ணும் விவசாயம் செய்கிறார்கள் கடலின் உப்பு நீரைக் கொண்டு விவசாயம் செய்ய முடியாது என்பதால் நல்ல தண்ணீரைத் தேடி தீவின் மறுகரைக்குச் செல்கிறார்கள். வாளிகளில் தண்ணீரைச் சேகரித்து, தங்கள் தீவுக்குக் கொண்டு வருகிறார்கள். பாறைவெடிப்புகளுக்குள் நீளும் பாதையில் தண்ணீர் வாளிகளைக் கொண்டு செல்கிறார்கள். கிட்டத்தட்ட முதுகுத்தண்டு உடைந்துவிடுமளவு கடினமான பணி. அந்தப் பெண் இரண்டு பக்கமும் இரண்டு தண்ணீர் வாளிகளைச் சுமந்தபடி உயரமான பாதையில் …
புதிய குறுங்கதை வீட்டில் அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டுக் கொள்ளும் நாளில் அப்பா கட்டாயம் சினிமாவிற்குப் போவார். அது சில நேரம் இரவு செகண்ட் ஷோவாகக் கூட இருக்கக் கூடும். அப்படிச் சினிமாவிற்குப் போகும் போதெல்லாம் அவனையும் அழைத்துக் கொண்டு போவார். ஆகவே அப்பா அம்மாவின் சண்டை சிறுவனான அவனை மகிழ்ச்சிப்படுத்தவே செய்தது. “என்னை இப்படி விட்டுட்டு நீங்க சினிமாவுக்குப் போனா நான் செத்துப் போயிருவேன் பாத்துக்கோங்க“ என்று அம்மா கத்துவாள். அப்பா அதைக் காது கொடுத்துக் …
Journalism is the profession that most resembles boxing, with the advantage that the typewriter always wins and the disadvantage that you’re not allowed to throw in the towel. – Gabriel García Márquez. கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் பற்றிய Gobo ஆவணப்படத்தில் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. மார்க்வெஸின் அம்மா அவரது கதையில் வரும் கதாபாத்திரங்கள் நிஜவாழ்க்கையில் யார் என்பதைக் கண்டறிந்து சொல்லிவிடுகிறார். அது கற்பனையில் எழுதியது …
புதிய குறுங்கதை அவளுக்கு இருபத்தைந்து வயதிருக்கும். கரும்பச்சை நிற சுடிதார் அணிந்திருந்தாள். சிவப்பு நிற ஸ்கூட்டியில் வந்திருந்தாள். அவள் ரகுவிடம் மணி கேட்டாள். மூன்று நாற்பது என்றான் அவள் மெல்லிய குரலில் மூன்று நாற்பதா என்று திரும்பக் கேட்டாள். மறுபடியும் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு ஆமாம் என்றான் அவள் எதையோ நினைத்து பெருமூச்சிட்டுக் கொண்டாள். அவள் மழலையர் பள்ளியில் படிக்கும் தனது மகளை அழைத்துப் போவதற்காக வந்திருந்தாள். ரகுவும் தனது மகளுக்காகவே வந்திருந்தான். பள்ளிவிடுவதற்கு இன்னும் இருபது நிமிடங்கள் …
The Delinquents 2023ல் வெளியான ரோட்ரிகோ மோரேனோ இயக்கிய அர்ஜென்டினா திரைப்படம். வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட கதையை முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையின் மூலம் கவித்துவமாக, செறிவாக எடுத்திருக்கிறார்கள். கிளைவிடும்கதைகள். இருவேறு நிலவெளிகள். இரண்டு முக்கியக் கதாபாத்திரங்கள். காதலும் குற்றமும் இணைந்தும் விலகியும் செல்லும் திரைக்கதை. இப்படத்தின் ஒரு காட்சியில் அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற கவிஞரான Ricardo Zelarayán எழுதிய The Great Salt Flats என்ற கவிதையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சிறைச்சாலையில் அந்தக் கவிதை வாசிக்கப்படுகிறது. உண்மையில் அது …