admin

ஆங்கிலத்தில்

எனது கடைசி குதிரைவண்டி சிறுகதையை சதீஷ் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார் இணைப்பு https://www.usawa.in/issue-8/Translation/The-Last-Horse-Cart-R-Satish.html

பெயரின் அருகில்

புதிய குறுங்கதை அவரது கையில் குரூப் போட்டோ இருந்தது. சி.எஸ். ஸ்கூலில் ஆறாம் வகுப்பில் எடுத்தது. அதிலிருந்தவர்களின் பெயர்களை நினைவிற்குக் கொண்டு வர முயன்றார். ஐந்தாறு பெயர்களைத் தவிர வேறு நினைவில் இல்லை. எழுபத்தியெட்டு வயதிலிருந்து கொண்டு ஆறாம் வகுப்பில் படித்தவர்களின் பெயர்களை நினைவு கொள்வது எளிதான என்ன. பெயர் மறைந்து போன வகுப்புத்தோழர்கள் உதிர்ந்த சிறகுகளைப் போலிருந்தார்கள். சிறகை வைத்து எந்தப் பறவை உதிர்த்தது எனக் கண்டுபிடிக்க முடியாதே. புகைப்படத்தில் உள்ள யார் யாரை ஞாபகம் …

பெயரின் அருகில் Read More »

கற்பனைத் தீவுகள்

புதிய குறுங்கதை சட்டைப்பையில் வைத்துக் கொள்ளக்கூடிய பாக்கெட் நோட் ஒன்றை அவன் வைத்திருந்தான். அந்த நோட்டில் அவன் கேள்விப்படுகிற தீவுகளின் பெயர்களை எழுதி வைத்துக் கொள்வான். அவனைப் பொறுத்தவரைத் தீவு என்பது அவனது ஆறாவது விரலைப் போன்றது. வரைபடத்தில் காணும் போது எல்லாத் தீவுகளும் மேஜையில் சிந்திய மைத்துளி போலவே தோற்றமளிக்கின்றன. அவனுக்குத் தீவின் பெயர்களைச் சேகரிப்பது பிடித்தமான வேலை. அவன் சந்திக்கும் பலரிடமும் அவர்கள் கேள்விப்பட்ட தீவுகளைப் பற்றி விசாரிப்பான். நாளிதழ்களிலோ, புத்தகங்களிலோ, தொலைக்காட்சியிலோ தீவின் …

கற்பனைத் தீவுகள் Read More »

இணைய இதழில்

Medium என்ற இணைய இதழில் எனது சிறுகதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டிருப்பதை இன்று தான் பார்த்தேன். சிங்கப்பூரில் வசிக்கும் ராஜ் ஸ்வரூப் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருந்தார். சிறப்பான மொழிபெயர்ப்பு. தகுந்த ஆங்கிலப் பதிப்பாளர் கிடைக்காத காரணத்தால் அந்நூல் இன்னும் வெளியாகவில்லை. The Eighty-Year Wait கதை அரிய பறவையான JERDON COURSER பற்றியது. கதையின் இணைப்பு. https://rs-writes-well.medium.com/the-eighty-year-wait-fd95a57b8fec

பெலிகோவின் குடை

ஆன்டன் செகாவின் “Man in a Case” சிறுகதையில் பெலிகோவ் என்றொரு ஆசிரியர் வருகிறார். அவர் பள்ளியில் கிரேக்க மொழி கற்பிக்கிறவர். வீட்டிலிருந்து எப்போது வெளியே புறப்பட்டாலும் கனத்த கோட்டும், குடையும் கலோஷேஸ். எனப்படும் காலணிகளைப் பாதுகாக்கும் நீண்ட உறையும் அணிந்து செல்வது அவரது வழக்கம். எவ்வளவு வெயில் அடித்தாலும் இதனைக் கைவிடமாட்டார். வாழ்க்கையில் எந்த மாற்றமும் நடந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பவர் பெலிகோவ். ஏதாவது வித்தியாசமாக நடந்தால், அதனால் ஏதாவது பிரச்சனைகள் வரலாம் என்ற பயப்படுவார். …

பெலிகோவின் குடை Read More »

புயலின் கண்

The Eye of the Storm நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரேலிய எழுத்தாளர் பேட்ரிக் வொயிட் நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 2011 வெளியான இப்படத்தை இயக்கியவர் ஃப்ரெட் ஸ்கெபிசி. பறவைகள் சூழ கடற்கரையில் தனித்து நிற்கும் எலிசபெத்தின் நினைவுகளுடன் படம் அழகாகத் துவங்குகிறது. அந்தக் காட்சியில் கேமிரா அவளது மனநிலையைப் போலவே அமைதியாகச் சுழல்கிறது. சிட்னியின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் பணக்கார எலிசபெத் ஹண்டரின் இல்லம் தான் கதையின் களம். நோயுற்று நீண்டகாலமாகப் படுக்கையில் நாட்களைக் …

புயலின் கண் Read More »

உறங்கும் நாய்கள்

புதிய குறுங்கதை மூன்று நாய்கள் ஒன்று சேர்ந்து ஒரு வட்டத்தை உருவாக்கியிருப்பதைக் கண்டேன். எனது குடியிருப்பின் படிக்கட்டை ஒட்டிய இடம் சாம்பல் நிற நாயுடையது. இப்போது அந்த இடத்தில் மூன்று நாய்கள் வளையம் போல உறங்கிக் கொண்டிருந்தன. காலில் ஒன்றை மடக்கி இன்னொரு காலை பின்னங்கால் மீதிட்டு வாலைத் தளர்த்தி ஒடுங்கிய முகத்துடன் உறங்கும் மூன்று நாய்களுக்கு நடுவே நீல நிற கிழிந்த துணியொன்று கிடந்தது விநோதமாகத் தோன்றியது. என்ன ஆயிற்று இந்த மூன்று நாய்களுக்கும். யாராவது …

உறங்கும் நாய்கள் Read More »

அன்பும் நன்றியும்

47வது சென்னை புத்தகத்திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான வாசகர்களைச் சந்தித்தேன். புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன். அவர்களுடன் உரையாடினேன். வாசகர்கள் காட்டும் அன்பும் ஆதரவும் ஈடற்றது. புத்தகக் கண்காட்சியின் போது நூறு கைகள் எனக்கிருப்பது போல உணர்ந்தேன். இந்த நம்பிக்கை வாசகர்கள் உருவாக்கியது. அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றி. தேசாந்திரி பதிப்பக அரங்கிற்கு வந்து எனது நூல்களை வாங்கிச் சென்ற அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. எனது புதிய புத்தகங்களையும் பரிந்துரைகளையும் ஒளிப்பதிவு …

அன்பும் நன்றியும் Read More »

காலம் இதழில்

கனடாவிலிருந்து வெளியாகும் காலம் இலக்கிய இதழில் ஓவியம் சார்ந்த எனது இரண்டு குறுங்கதைகள் வெளியாகியுள்ளன. முதற்குறுங்கதையின் தலைப்பு வெர்மீரின் பால். இதழில் அச்சுப்பிழையாக வெர்மின் பால் என வந்துள்ளது. இரண்டாவது கதை வான்கோவின் உருளைகிழங்கு உண்பவர்கள் ஓவியம் குறித்தது. தலைப்பு : பசியின் வெளிச்சம்.