அன்பும் நன்றியும்

47வது சென்னை புத்தகத்திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான வாசகர்களைச் சந்தித்தேன். புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன். அவர்களுடன் உரையாடினேன். வாசகர்கள் காட்டும் அன்பும் ஆதரவும் ஈடற்றது. புத்தகக் கண்காட்சியின் போது நூறு கைகள் எனக்கிருப்பது போல உணர்ந்தேன். இந்த நம்பிக்கை வாசகர்கள் உருவாக்கியது. அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றி.

தேசாந்திரி பதிப்பக அரங்கிற்கு வந்து எனது நூல்களை வாங்கிச் சென்ற அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.

எனது புதிய புத்தகங்களையும் பரிந்துரைகளையும் ஒளிப்பதிவு செய்து உதவிய ஸ்ருதி டிவி கபிலனுக்கு அன்பும் நன்றியும். இணைந்து ஒளிப்பதிவு செய்த சுரேஷ் மற்றும் நேர்காணல் செய்த எழுத்தாளர் அகரமுதல்வனுக்கு நன்றி.

தேசாந்திரி பதிப்பகம் தொடர்பான காணொளிகளையும் செய்திகளையும் வெளியிட்டு உதவிய பத்திரிக்கையாளர்கள் மற்றும் இணைய ஊடகங்கள், யூடியூப் சேனல்கள் அனைவருக்கும் நன்றி.

எங்கள் அரங்கிற்கு வந்திருந்த இலங்கை, துபாய், மலேசியா மற்றும் சிங்கப்பூரைச் சார்ந்த படைப்பாளிகள். வெளிநாட்டு வாசகர்கள், புத்தகக் கடை உரிமையாளர்கள், இலக்கிய அமைப்பைச் சார்ந்தவர்கள், தங்கள் புதிய நூல்களை எனக்குப் பரிசாக அளித்த சகபடைப்பாளிகள். இளங்கவிஞர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் அனைவருக்கும் நன்றி.

எனது அன்பிற்குரிய எழுத்தாளர் வண்ணதாசன், மருத்துவர் பரணி, மருத்துவர் நந்தினி, ஆடிட்டர் சந்திரசேகர், ஹைதராபாத் கணேஷ்குமார், எழுத்தாளர் சாந்தன், நீதியரசர் பிரபா ஸ்ரீதேவன், டெல்லி நெடுங்கிள்ளி, இயக்குநர் வசந்தபாலன், வழக்கறிஞர் மணிசெந்தில், வேலூர் லிங்கம்.  உள்ளிட்ட தோழமைகள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.

புத்தகங்களை அழகாக அச்சிட்டு உதவிய மணிகண்டன். நூல் வடிவமைப்பில் உதவிய குரு, தேசாந்திரி பதிப்பக அரங்கினை நிர்வாகம் செய்த மேலாளர் அன்புகரன். அரங்க உதவியாளர்களாகப் பணியாற்றிய மணிகண்டன், கண்ணகி, சிவரஞ்சனி அருண்பிரசாத். ஒட்டுநர் பச்சையப்பன், எல்லா நாட்களும் உடனிருந்து உதவிய நண்பர் சண்முகம், கபிலா காமராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி

தேசாந்திரி பதிப்பகத்தின் நிர்வாகப் பொறுப்பைச் சிறப்பாக நடத்தி வரும் அன்பு மகன் ஹரி பிரசாத்திற்கு பாராட்டுகள்.

இந்த ஆண்டுப் புதிய நம்பிக்கையுடன் துவங்கியுள்ளது. நாம் சேர்ந்து பயணிப்போம். இலக்கியம் வளர்ப்போம்.

நன்றி நண்பர்களே.

0Shares
0