சர்வதேச இலக்கிய விழா
கேரளாவில் நடைபெறவுள்ள சர்வதேச இலக்கிய விழாவில் கலந்து கொள்கிறேன். பிப்ரவரி 3 காலை எனது அமர்வு நடைபெறுகிறது
கேரளாவில் நடைபெறவுள்ள சர்வதேச இலக்கிய விழாவில் கலந்து கொள்கிறேன். பிப்ரவரி 3 காலை எனது அமர்வு நடைபெறுகிறது
நேற்று புத்தகக் கண்காட்சியில் ஒரு இளைஞரைச் சந்தித்தேன். சென்னை ஓவியக்கல்லூரியில் பயில்வதாக அறிமுகம் செய்து கொண்டு தான் வரைந்துள்ள கோட்டோவியத்தை என்னிடம் காட்டினார். அதில் நானும் எழுத்தாளர் கி.ராஜநாராயணனும் எழுத்தாளர் சுந்தர ராமசாமியும் தஸ்தாயெவ்ஸ்கியும் இருந்தோம். வியப்போடு அந்த ஓவியம் பற்றிக் கேட்டேன் நீங்கள் விருதுநகர் புத்தகக் கண்காட்சிக்கு உரையாற்ற வந்ததைப் பற்றி வரைந்திருக்கிறேன். நீங்கள் விருதுநகருக்கு ரயிலில் வந்து இறங்குகிறீர்கள். உங்கள் பேச்சில் எப்போதும் கி.ராவை, சுந்தர ராமசாமியை உயர்வாகச் சொல்கிறீர்கள் ஆகவே அவர்களும் உங்களுடன் …
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் என்ன புத்தகங்களை வாங்கலாம் என வாசகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள். இவை இன்றைய எனது பரிந்துரைகள். பதிப்பாளர் பெயர் குறிப்பிட்டுள்ளேன். அரங்கு எண் தெரியவில்லை. நினைவின் குற்றவாளி – கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன், வேரல் பதிப்பகம் ₹130 ( நகுலன் பற்றிய நினைவுகளும் ஆழ்ந்த வாசிப்பு அனுபவக்குறிப்புகளும் கொண்டது. ) கதை இல்லாதவனின் கதை- மலையாளம்- எம். என். பாலூர் ( கதகளி கலைஞரின் வாழ்க்கை நினைவுகளைச் சொல்லும் அற்புதமான படைப்பு. )தமிழில்: …
ஹென்றி வெர்னியூல் இயக்கிய The Cow and I 1959 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு பிரெஞ்சு-இத்தாலியத் திரைப்படம். இரண்டாம் உலகப்போரின் போது நாஜிகளால் பிடிக்கப்பட்டுப் பண்ணை வேலையில் ஈடுபடுத்தப்பட்ட சார்லஸ் பெய்லி என்ற போர்க்கைதி எப்படி அங்கிருந்து தப்பிப் பிரான்ஸ் செல்கிறான் என்பதையே படம் விவரிக்கிறது. போர் கைதிகள் தப்பிச் செல்லுவதைப் பற்றி நிறையப் படங்கள் வந்துள்ளன. ஆனால் இப் படத்தின் சிறப்பு நாஜிகளிடமிருந்து தப்பிச் செல்லும் சார்லஸ் தன்னோடு ஒரு பசுவையும் அழைத்துக் கொண்டு …
எனது காந்தியைச் சுமப்பவர்கள் சிறுகதையை ரேடியோ நாடகமாக அகில இந்திய வானொலி சென்னை நேற்று ஒலிபரப்புச் செய்தார்கள். எனது சிறுகதையை ரேடியோ நாடகமாக எழுதியவர் குமரி எஸ். நீலகண்டன். நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் எஸ்.அண்ணாமலைப் பாண்டியன் ஜே.ஜெயா. நாடகத்தில் பங்கேற்று நடித்த ரவி சுப்ரமணியன். கிருஷ்ணமூர்த்தி, பரத் ராஜ்,வி. லோகபாபு உள்ளிட்ட அனைவருக்கும் அன்பும் நன்றியும்
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. அரங்கு எண் 265 மற்றும் 266. மூன்றாவது வரிசையில் உள்ளது. இந்த அரங்கில் தினமும் மாலை ஐந்து மணி முதல் இருப்பேன். விருப்பமான வாசகர்கள் , நண்பர்கள் சந்திக்கலாம்.
புதிய சிறுகதை. ஜனவரி 2. 2024 சமையல் வேலையிலிருந்த சாந்தாவிற்கு அப்பா எதையோ சப்தமாகச் சொல்லிக் கொண்டிருப்பது கேட்டது. பக்கவாதம் வந்து வலதுகையும் காலும் செயல்பட முடியாமல் அப்பா படுக்கையில் கிடந்தார். முகமும் லேசாகக் கோணிப்போயிருந்தது. பகல் முழுவதும் எதிரே யாரோ இருப்பது போலத் தனக்குத் தானே பேசிக் கொண்டிருப்பது அவரது வழக்கம். சில சமயம் சப்தமாக “சாந்தா. கொஞ்சம் வாயேன்“ என்று கூப்பிடுவார். அந்த அழைப்பிற்கு ஒரு காரணமும் இருக்காது. அவள் அப்பா படுத்திருந்த அறைக்குள் …
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். 2024 உங்கள் கனவுகள் யாவும் நிறைவேறும் ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்.
சாண்டியாகோ மிட்ரே தயாரித்து இயக்கிய Argentina, 1985 திரைப்படம் அர்ஜென்டினாவை ஆட்சி செய்த இராணுவ தலைமையின் மீதான நீதி மன்ற விசாரணையினை மையமாகக் கொண்டது. சிறந்த அயல்மொழித் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டது. 1975 இல் விடேலா அர்ஜென்டினா இராணுவத்தின் படைத்தளபதி ஆனார். மார்ச் 1976 இல் ராணுவம் இசபெல் பெரோனுக்கு எதிராக ஒரு சதித்திட்டத்தில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியது அதனை அடுத்து விடேலாவின் இராணுவ ஆட்சிக்குழு, தேசிய மறுசீரமைப்புச் செயல்முறை, அரசியல் கட்சிகளைத் தடைசெய்தல் மற்றும் …
47 வது சென்னை புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. அரங்கு எண் 265 மற்றும் 266. எனது அனைத்து நூல்களும் தேசாந்திரி பதிப்பக அரங்கில் கிடைக்கும்.