admin

புத்தக வெளியீட்டு விழா.

எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம். எனது அழைப்பை ஏற்று வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. நூல்களை வெளியிட்டுச் சிறப்பித்த தோழர் எஸ்.ஏ.பெருமாள். இயக்குநர் ராஜ்குமார், திரு. ஆறுமுகச்சாமிக்கு அன்பும் நன்றியும் விழாவில் உரையாற்றியவர்கள் குறித்த நேரத்திற்குள் நூல் குறித்த சிறப்பான அறிமுகத்தை வழங்கினார்கள். அரங்கில் நிறைய இளைஞர்களைக் காண முடிந்தது மகிழ்ச்சி அளித்தது. புத்தகங்களை நேர்த்தியாகத் தயாரித்து அளித்த மணிகண்டனுக்கும். நிகழ்வைச் சிறப்பாக …

புத்தக வெளியீட்டு விழா. Read More »

துறவியின் ஈரக்காலடிகள்

சீனாவில் வசித்த ஜென் துறவிகளின் கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். Clouds Thick,Where abouts Unknown என்ற இந்தக் கவிதைத் தொகுப்பில் தாங் வம்சம் (618–907) துவங்கி மிங் வம்சம் (1368–1644) வரையான 750 ஆண்டுக் காலக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. துறவிகளின் ஈரக்காலடித்தடங்களைப் போன்றதே இக்கவிதைகள். வெளிப்புற தூண்டுதல்கள் துறவியின் அகத்தில் ஏற்படுத்தும் உணர்வுகளையே இக் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன., மனதின் நுணுக்கங்களை முழுமையாக வார்த்தையில் வெளிப்படுத்திவிட முடியாது. ஆனால் வார்த்தைகளின் வழியே அடையாளம் காட்ட முடியும். என்கிறார் துறவி …

துறவியின் ஈரக்காலடிகள் Read More »

ஹென்றி லாசன் சிறப்புரை

டிசம்பர் 26 மாலை நடைபெறுகிற எனது புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஹென்றி லாசன் குறித்து சிறப்புரை ஆற்றுகிறேன். நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். இடம் :. கவிக்கோ மன்றம். மைலாப்பூர். சென்னை நாள் :. டிசம்பர் 26 செவ்வாய்கிழமை மாலை ஆறுமணி.

அழைப்பிதழ்

டிசம்பர் 26 செவ்வாய்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டுகிறேன் ஆறு நூல்களும் சேர்ந்து சிறப்பு விலை ரூ1000 க்கு கிடைக்கும் இந்த நிகழ்வில் ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஹென்றி லாசன் குறித்த சிறப்புரை நிகழ்த்துகிறேன் கவிக்கோ மன்றத்திற்கான வழி இந்த இணைப்பில் உள்ளது https://maps.app.goo.gl/xmo1Abpy1CYMTfG56 தொடர்புக்கு அலுவலகம் : 044 -23644947 அலைபேசி : 9789825280 Desanthiripathippagam@gmail.com

டிசம்பர் 26 – புத்தக வெளியீட்டு விழா

டிசம்பர் 25ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த எனது புத்தக வெளியீட்டு விழா டிசம்பர் 26ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. தேசாந்திரி பதிப்பகம் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்வில் எனது ஆறு நூல்கள் வெளியிடப்படுகின்றன. கிதார் இசைக்கும் துறவி – சிறுகதைத்தொகுதி மாஸ்கோவின் மணியோசை – ரஷ்ய இலக்கியக் கட்டுரைகள் தனித்த சொற்கள் – உலக இலக்கியக் கட்டுரைகள் கவிஞனும் கவிதையும் – கவிதைகள் குறித்த கட்டுரைகள் தோற்றம் சொல்லாத உண்மை – உலக சினிமாக் கட்டுரைகள நகரங்களே சாட்சி …

டிசம்பர் 26 – புத்தக வெளியீட்டு விழா Read More »

கிதார் இசைக்கும் துறவி ஆங்கிலத்தில்

எனது கிதார் இசைக்கும் துறவி சிறுகதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு Borderless இணைய இதழில் வெளியாகியுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் சந்தானம். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி. இந்தச் சிறுகதையை தலைப்பாகக் கொண்டே எனது புதிய சிறுகதைத் தொகுதி வெளியாகிறது. விகடன் தீபாவளி மலரில் வெளியான இந்தக் கதை இரண்டு மாதங்களுக்குள் மூன்று மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இணைப்பு. The Monk Who Played the Guitar, a story by S …

கிதார் இசைக்கும் துறவி ஆங்கிலத்தில் Read More »

கோவையில்

உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பில் கோவையில் நூல் வெளியிடுதல் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. டிசம்பர் 16 சனிக்கிழமை காலை நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். இடம் : டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகம்                காளப்பட்டி சாலை. கோவை 641048