admin

நூலக வாரவிழா

தூத்துக்குடியில் தேசிய நூலக வார விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட மைய நூலகத்தில் புத்தகக் கண்காட்சியைத் துவங்கி வைத்து உரையாற்றினேன். நூலகர் ராம்சங்கர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார் மாலையில் பொது நிகழ்வு. இடைவிடாத மழைக்குள்ளும் அரங்கு நிரம்ப வாசகர்கள் வந்திருந்தார்கள். நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணப்பு செய்த நூலக மனிதர்கள் இயக்கத்தின் பொன். மாரியப்பன், ஆசிரியர் ஜெயபால், முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த பியர்ல் ஷிப்பிங் நிர்வாக இயக்குநர் …

நூலக வாரவிழா Read More »

தூத்துக்குடியில்

நவம்பர் 19 ஞாயிறு மாலை தூத்துக்குடியில் நடைபெறும் தேசிய நூலக வாரவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் இதனை நூலக மனிதர்கள் இயக்கமும் மாவட்ட மைய நூலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

விசித்திரக் கனவு

சத்யஜித் ரேயின் நாயக் படத்தில் மறக்க முடியாத காட்சி ஒன்றுள்ளது. சினிமா நடிகரான அரிந்தமின் கனவது. கல்கத்தாவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் ரயில் பயணத்தின் போது அந்தக் கனவு வருகிறது. கலையா அல்லது பணம் சம்பாதிப்பதா என்று இரண்டு பாதைகள் நாடக நடிகரான அரிந்தமின் முன்னால் இருந்தன. அவன் பணம் சம்பாதிப்பதைத் தேர்வு செய்கிறான். புகழும் பணமும் கிடைத்துவிட்டால் போதும் என்று நினைக்கிறான். தனது குருவின் ஆணையை மீறி சினிமாவிற்குச் செல்கிறான். அவன் ஆசைப்பட்டது போலவே பெரும்புகழும் பணமும் …

விசித்திரக் கனவு Read More »

பறக்கும் சுடர்கள்

நூல்வனம் பதிப்பகம் புத்தகத் தயாரிப்பில் முன்னோடியானது. மணிகண்டன் மிகவும் கலை நேர்த்தியாகப் புத்தகங்களை வெளியிட்டு வருகிறார். தொடர்ந்து ரஷ்ய இலக்கியங்களைச் செம்பதிப்பாக வெளியிட்டு வருவது பாராட்டிற்குரியது அவரது சமீபத்திய வெளியீடு ரூமி கவிதைகள். தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் கவிஞர் க. மோகனரங்கன். ஈரோட்டைச் சேர்ந்த க.மோகனரங்கன் சிறந்த கவிஞர், தேர்ந்த மொழி பெயர்ப்பாளர். ஜென் கவிதைகளாக இருந்தாலும் சமகால உலகக் கவிதைகளாக இருந்தாலும் அதனை ஆழ்ந்து புரிந்து கொள்வதுடன் அதே கவித்துவத்தைத் தமிழிலும் கொண்டு வருபவர். அவரது …

பறக்கும் சுடர்கள் Read More »

வாசகர்களின் அன்பு

கேரளாவின் கோட்டயத்திலிருந்து டி.எம்.சந்திரசேகரன் என்பவர் மின்னஞ்சல் செய்திருந்தார். அது மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தது. கூகுள் உதவியால் மொழியாக்கம் செய்து படித்தேன். மலையாளத்தில் வெளியாகியுள்ள எனது உப பாண்டவம் நாவலைப் பாராட்டி எழுதியிருந்தார். உப பாண்டவம் மலையாளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆறு மாதங்களில் மட்டும் ஐம்பது மின்னஞ்சல்களுக்கு மேல் வந்திருக்கும். பெரும்பான்மை மலையாளத்தில். தங்களின் பாராட்டினை எழுத்தாளருக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்ற மலையாள வாசகர்களின் பண்பை எண்ணி வியந்து போனேன் மகாபாரதம் மீது மலையாளிகளுக்கு …

வாசகர்களின் அன்பு Read More »

விருதுநகர் புத்தகத் திருவிழாவில்

விருதுநகர் புத்தகத் திருவிழா நவம்பர் 16 முதல் 27 வரை நடைபெறுகிறது நவம்பர் 18 சனிக்கிழமை மாலை விருதுநகர் புத்தகத் திருவிழாவில் உரையாற்றுகிறேன்.

ஹீப்ரு மொழியில்

எனது காந்தியைச் சுமப்பவர்கள் சிறுகதையை ஆங்கிலம் வழியாக ஹீப்ரு மொழியில் Dr. M. Gluzman மொழியாக்கம் செய்துள்ளார். அவர் தொகுக்கும் சிறந்த இந்தியச்சிறுகதைகள் நூலில் இக்கதை இடம்பெறுகிறது.

நினைவில் ஒளிரும் காதல்

Past Lives 2023ல் வெளியான கொரியத் திரைப்படம். அழகான காதற்கதை. இயக்குநர் செலின் சாங்கின் முதற்படம் என்பதை நம்ப முடியவில்லை செலின் சாங் பற்றி இணையத்தில் தேடிப் படித்தேன். செலின் சாங் கொரியாவைச் சேர்ந்தவர். கனடா மற்றும் அமெரிக்காவில் வசிக்கிறார். நாடக இயக்குநராகப் பணியாற்றியிருகிறார். ஆன்டன் செகாவின் நாடகத்தை இயக்கியிருக்கிறார். அவரது ஆதர்ச எழுத்தாளர் செகாவ். Past Lives அவரது முதற்படம். மிகுந்த கவித்துவத்துடன் கலைநேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார். படத்தில் நாயகி நோரா இவரைப் போலவே நாடகத்துறையில் பணியாற்றுகிறாள். …

நினைவில் ஒளிரும் காதல் Read More »