எலியின் பாஸ்வேர்ட் – ஆங்கிலத்தில்
எலியின் பாஸ்வேர்ட் என்ற எனது சிறார் நூலை சசிகலா பாபு மற்றும் மேகலா உதயசங்கர் இணைந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். இந்நூலை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது.
எலியின் பாஸ்வேர்ட் என்ற எனது சிறார் நூலை சசிகலா பாபு மற்றும் மேகலா உதயசங்கர் இணைந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். இந்நூலை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது.
தூத்துக்குடியில் சலூன் நூலகம் நடத்தும் பொன். மாரியப்பன் மாவட்ட மைய நூலகத்துடன் இணைந்து வாசகர் விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறார். தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு இந்த நிகழ்வு நடைபெறுகிறது. நவம்பர் 19 ஞாயிறு மாலை நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.
முனைவர் மு.வளர்மதி எழுதிய தமிழ் மொழிபெயர்ப்பு முன்னோடிகள் நூலில் அரிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. இந்த நூல் இணையத்தில் தரவிறக்கம் செய்யக் கிடைக்கிறது •• வங்க மொழிப் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்தவர்களில் முக்கியமானவர் அ.கி.ஜெயராமன் . இவர் சரத்சந்திரரின் நூல்களை முழுவதுமாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். 1941 ல் அ.கி. ஜெயராமன் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுக் கைதாகி சென்னையில் சிறையில் அடைக்கப்பட்ட போதும் சரத் சந்திரரின் நாவலை மொழிபெயர்த்துக் கொண்டிருந்திருக்கிறார் என்பது வியப்பளிக்கிறது. அ.கி. ஜெயராமனின் உடன் பிறந்த …
கனடாவில் வசிக்கும் நாடகக் கலைஞர், கல்வியாளர், க. நவம் 54 ஆங்கிலக் கவிதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்து எனினும் நான் எழுகின்றேன் என்ற நூலாக வெளியிட்டிருக்கிறார். இந்தக் கவிதைகளின் பொதுத்தன்மையாக இருப்பது சுதந்திர வேட்கையும் சமாதானத்திற்கான குரலுமாகும். லாங்ஸ்ரன் ஹியூஸ் துவங்கி யாங் வான் லி வரையான சிறந்த கவிஞர்களின் முக்கியக் கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். கவிதைகளை மொழிபெயர்ப்புச் செய்வது மிகவும் சவாலானது. கவிதையில் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளை அளிக்கிறது. அதற்கு நிகரான தமிழ்சொல்லைக் …
மீ. சித்ரா ராஜம் புத்தகம் : முறிந்த பாலம் ஆசிரியர் : தோர்ன்டன் ஒயில்டெர் தமிழாக்கம் : ரா.நடராசன் பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம் பக்கங்கள் : 144 தோர்ன்டன் வைல்டரின் காலத்தை விஞ்சிய செவ்வியல் படைப்பான, “தி பிரிட்ஜ் ஆஃப் சான் லூயிஸ் ரே” யின் தமிழாக்கம் ‘ முறிந்த பாலம்’. என் ஆதர்ச எழுத்தாளர் எஸ்.ரா வின் பரிந்துரையின் பேரில் இப்புத்தகத்தை நான் படித்தேன். எந்த மொழியானாலும், இனமானாலும், காலகட்டமானாலும் மானுடத்தின் அடிப்படை பிரச்சனைகள், …
இந்து தமிழ் தீபாவளி மலர் 2023ல் வெளியாகியுள்ள எனது சிறுகதை அவரது நாட்கள் குறித்து சிறந்த அறிமுகவுரையை வழங்கியுள்ளார் அஞ்சனா. அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்
ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள எனது சிறுகதை தொகுப்பிற்கான மதிப்பீடு The Man Who Walked Backwards and Other Stories Divya Shankar I love the little randomness that a collection of stories, in most cases, grants me. When I began this collection with the 13th story from a total of 18 stories, I didn’t know my first impression would be strong …
வரலாற்றுப் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான கதைகள் ஹாலிவுட்டில் எப்போதும் வெற்றி பெற்றுள்ளன, அப்படியான ஒரு திரைப்படமே Anna and the King of Siam. 1946ல் வெளியானது சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த கலை இயக்கத்திற்கான ஆஸ்கார் விருது பெற்றுள்ளது. மார்க்ரெட் லாண்டன் நாவலை மையமாகக் கொண்டது. இக்கதை அமெரிக்காவில் இசைநாடகமாக நிகழ்த்தப்பட்டுப் பெரும்புகழ் பெற்றிருக்கிறது. அந்த வரவேற்பே படம் உருவாக முக்கியக் காரணம். சயாம் என்பது இன்றைய தாய்லாந்து. கதை 1862ல் நடக்கிறது. ராமா IV …
எனது இரவுக் காவலாளியின் தனிமை சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் டாக்டர் சந்திரமௌலி