கிதார் இசைக்கும் துறவி
எனது புதிய சிறுகதைத் தொகுப்பு கிதார் இசைக்கும் துறவி டிசம்பர் 25 ல் வெளியாகிறது. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது
எனது புதிய சிறுகதைத் தொகுப்பு கிதார் இசைக்கும் துறவி டிசம்பர் 25 ல் வெளியாகிறது. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது
டச்சு ஓவியர் வான் ப்ரோன்க்ஹார்ஸ்ட் (Jan Gerritsz. van Bronchorst ) கிரேக்கத் தெய்வமான ஜீயஸ் தனது காதலியைப் பசுவாக உருமாற்றிய காட்சியை ஓவியமாக வரைந்திருக்கிறார். ஜீயஸ் இடி மின்னல், மழை மற்றும் காற்றின் தேவன். , நிரந்தரக் காதலனான ஜீயஸ் அழகான பெண்கள் தனிமையில் இருப்பதைக் கண்டால் உடனே மேகவடிவில் அவர் முன்பு தோன்றி மயக்கிவிடுவார். அதிலும் கருமேக வடிவம் கொண்டு வட்டமிடுவது வழக்கம் இதனை அறிந்து வைத்திருந்த ஜீயஸின் மனைவி ஹீரா அவரைக் கண்காணிக்க …
பெடரல் இணையதளம் சமீபத்தில் வெளியான சிறந்த பத்து ஆங்கில மொழியாக்க நூல்களைப் பட்டியலிட்டுள்ளது. அதில் எனது சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு THE MAN WHO WALKED BACKWARDS AND OTHER STORIES இடம் பெற்றுள்ளது. Ten recent titles in translation that you must add to your TBR list இணைப்பு https://thefederal.com/category/features/international-translation-day-2023-10-new-books-you-must-not-miss-97166 Courtesy: the federal.com online magazine
அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் சார்பில், சிறந்த மொழி பெயர்ப்பு நூல்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன விருதுக்கான நூல்களைத் தேர்வு செய்யும் நடுவர் குழுவில் பணியாற்றினேன். என்னோடு பேராசிரியர் பழனி கிருஷ்ணசாமி, மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ் ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினார்கள். இந்த விருது வழங்கும் விழா நேற்று சென்னை, ஏவி.எம்.ராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம். விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினேன். டேவிட் கிராஸ்மேன் எழுதிய ‘நிலத்தின் விளிம்புக்கு’ நாவலை மொழியாக்கம் செய்த அசதாவிற்கு இரண்டு லட்சம் ரூபாய் …
. புத்தகங்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்.? என்ற கேள்வி பொதுவெளியில் தொடர்ந்து எழுப்பபட்டு வருகிறது அச்சுப் புத்தகங்கள் வெளியிடுவது குறைந்துவிடும். மின் புத்தகங்களே (EBOOKS) அதிகம் வெளியிடப்படும் என்று சொல்கிறார்கள். அப்படியில்லை. அச்சுப் புத்தகங்களுக்கான வாசகர்கள் எப்போதும் இருப்பார்கள். மின் புத்தகம் இன்னொரு வடிவம் மட்டுமே. அதனால் பதிப்புத் தொழில் விரிவடையுமே அன்றி முடிவிற்கு வந்துவிடாது என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. பதிப்புத்துறையின் இன்றைய சவால்களைப் பற்றி விவாதிக்கும் படமாக ஆலிவர் அஸ்ஸாயஸ் (Olivier Assayas )இயக்கிய Non-Fiction வெளிவந்துள்ளது. …
“The Wonderful Story of Henry Sugar.” என்ற வெஸ் ஆண்டர்சனின் 40 நிமிஷக் குறும்படம் கதைக்குள் கதை என விரியும் அழகான திரைக்கதையைக் கொண்டிருக்கிறது. எழுத்தாளர் ரோல்ட் டாலின் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆண்டர்சன் கதை சொல்லும் பாணியில் ஒரு விசித்திரத்தன்மை வெளிப்படுவது வழக்கம். இதில் அந்தப் பாணி புதிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. சினிமாவை பல்வேறு கலைகளின் கூட்டு வடிவம் என்பதை ஆண்டர்சன் நன்கு உணர்ந்தவர். நாடகம், மேஜிக், கதை சொல்வது, இசைநிகழ்ச்சி. …
ஃபிளெமிஷ் ஓவியர் பீட்டர் பால் ரூபன்ஸ் வரைந்த சாம்சன் மற்றும் டிலீலா ஓவியம் நிகரற்ற அழகுடையது. அந்த ஓவியத்தில் டிலீலாவின் மடியில் தலைவைத்து சாம்சன் துயில்கிறான். அப்போது அவன் தலைமயிரை துண்டிப்பதற்காகக் காட்டிக் கொடுக்கிறாள் டிலீலா. வாசலுக்கு வெளியே பெலிஸ்திய வீரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓவியத்தில் டிலீலாவின் இடது கை சாம்சனின் வலது தோள்பட்டையின் மேல் உள்ளது, மறுகை விலகி இருக்கிறது. தனது செயலை முழுமனதோடு அவள் செய்யவில்லை என்பதன் அடையாளம் போலவே சித்தரிக்கபட்டுள்ளது. டிலீலாவின் …
அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் சார்பில் எனது நூறு சிறுகதைகள் குறித்துத் தமிழ்த்துறை ஆய்வாளர்கள், பேராசிரியர்கள். வாசகர்கள் இணைய வழி உரை நிகழ்த்துகிறார்கள். இதனைப் பேராசிரியர் வினோத் ஒருங்கிணைப்பு செய்கிறார். இணைய நிகழ்வு குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். ••• விருதுநகர் அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம். இணைய வழி நூற்பொழிவு 17.09.2023 அன்று முதல் 20.11.2023 வரை நடைபெற உள்ளது. எஸ்.ராமகிருஷ்ணனின் நூறு சிறுகதைகள் என்ற தலைப்பில் நிகழ உள்ளது. எஸ்.ராமகிருஷ்ணனின் ஏதேனும் ஒரு சிறுகதையைத் தேர்ந்தெடுத்து பத்து நிமிடங்கள் …
லியா வோல்சோக் இயக்கிய Very Semi-Serious ஆவணப்படம் நியூயார்க்கர் இதழில் வெளியான கேலிசித்திரங்கள் குறித்துப் பேசுகிறது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை தாங்கள் வரைந்த புதிய கேலிச்சித்திரங்களுடன் ஓவியர்கள் நியூயார்க்கர் அலுவலகம் வருவது வழக்கம். யார் வேண்டுமானாலும் தாங்கள் வரைந்த ஓவியத்துடன் வரலாம். அந்தக் கேலிச்சித்திரங்களிலிருந்து பதினைந்தை அந்த வாரத்திற்காகத் தேர்வு செய்வார்கள். தேர்வு செய்யும் பணி சவாலானது. தேர்வாளரான ராபர்ட் மான்கோஃப் அனைத்துக் கேலிச்சித்திரங்களைப் பரிசீலனை செய்து பொருத்தமானவற்றைத் தேர்வு செய்கிறார். ஒரு கார்ட்டூனிற்கு ஆயிரம் டாலர் …
சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் – குறித்த அறிமுகம் மீ. சித்ரா ராஜம். உலகச் சினிமாவை நேசிக்கும் பார்வையாளனுக்கும், உலகச் சினிமாவே தெரியாத சாமானியனுக்குமான அருமையான புத்தகம் .இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்து எஸ்.ரா சொன்ன படங்களைத் தேடித் தேடி பார்க்க ஆரம்பித்ததால் இந்தப் புத்தகத்தை முடிக்கவே எனக்கு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. ஆயினும் ஓரிரண்டு படங்களே பார்க்க முடிந்தது. அவர் குறிப்பிட்டுள்ள ஒரு படத்தைக் கூடக் கடந்து செல்ல முடியாமல் ஒரு வரியையேனும் நானும் இப்பகிர்வில் குறிப்பிட்டிருக்கிறேன். தேர்ந்த …