விகடன் தீபாவளி மலரில்
ஆனந்த விகடன் தீபாவளி மலரில் சிறுகதை எழுதியிருக்கிறேன்
Louis van Beethoven ஜெர்மன் தொலைக்காட்சிக்காக 2020ல் உருவாக்கப்பட்ட திரைப்படம். பீத்தோவனின் 250வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. நிக்கி ஸ்டெயின் இதனை இயக்கியுள்ளார் லுட்விக் பீத்தோவனின் இறுதி ஆண்டுகளில் துவங்கி அவரது பால்யகாலத்திற்குள் இடைவெட்டி முன்பின்னாகக் கதை நகர்கிறது . குழந்தைப் பருவம். இளமைக்காலம், முதுமை என்று மூன்று வேறுபட்ட காலங்களில் பீத்தோவனைக் காணுகிறோம். படம் பீத்தோவனின் பயணத்தில் துவங்குகிறது. தனது இளைய சகோதரன் வீட்டிற்குக் கோச் வண்டியில் பயணம் செய்கிறார் .வீட்டில் அவருக்குக் கிடைக்கும் …
லியோ டால்ஸ்டாய் தனது 82வது வயதில் வீட்டை விட்டு வெளியேறிப் போன நிகழ்வை பாவெல் பெசின்ஸ்கி விரிவாக ஆராய்ந்து தனது Flight from Paradise நூலில் எழுதியிருக்கிறார். அதில் டால்ஸ்டாய் வீட்டை விட்டு வெளியேறிய செய்தி நாளிதழ்களில் எவ்வாறு வெளியிடப்பட்டது என்பதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். கிழட்டுச் சிங்கம் தன் குகையை விட்டு வெளியேறிச் சென்றது, தப்பிப்பறந்தார் டால்ஸ்டாய் டால்ஸ்டாய் எங்கே ஒளிந்திருக்கிறார் என செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். ஒடேசா என்ற நாளிதழ் “டால்ஸ்டாயைத் தேடாதீர்கள். அவர் குடும்பத்திற்கு மட்டும் …
அமெரிக்காவின் தேசியக் கவியாக கொண்டாடப்படும் பில்லி காலின்ஸ் பல்வேறு இதழ்களுக்கு அளித்த நேர்காணல்கள் தொகுக்கபட்டு தனிநூலாக வெளியிடப்பட்டுள்ளது. மிகச்சிறந்த நேர்காணல்களின் தொகுப்பு. கவிதை எழுதுவது குறித்தும் கவிஞனின் அகம் குறித்தும் சிறப்பாக தனது பார்வைகளை முன்வைக்கிறார் பில்லி காலின்ஸ். ‘பிக் டேட்டா காலத்தில் கவிதைகளின் தேவை அல்லது கவிதை எழுதுவது எப்படியிருக்கிறது என ஒரு கேள்வியை முன்வைக்கிறார்கள். அதற்கு அவர் கவிதை என்பது ஸ்மால் டேட்டா என்று பதில் சொல்கிறார். உண்மை தான். பில்லி காலின்ஸ் சொன்னதைப் …
Land and Shade படம் பார்த்து முடியும் போது நம் உடல் முழுவதும் எரிக்கப்பட்ட கரும்பு வயலின் தூசியும் சாம்பலும் ஒட்டிக் கொண்டிருப்பதைப் போல உணருகிறோம். அவ்வளவு நெருக்கமான உணர்வைப் படம் ஏற்படுத்துகிறது. கொலம்பியாவைச் சேர்ந்த இப்படத்தைச் சீசர் அகஸ்டோ அசெவெடோ இயக்கியிருக்கிறார். 2015ல் வெளியானது. சிறந்த ஒளிப்பதிவிற்கான கேன்ஸ் விருதைப் பெற்றுள்ளது, படத்தின் முதல் காட்சியில் அல்போன்சா கரும்புத் தோட்டத்தின் நடுவே நடந்து வருகிறார். பெரிய டிரக் ஒன்று மண் சாலையில் வேகமாக அவரைக் கடந்து …
இந்திய இலக்கியத்தின் சிறந்த படைப்புகளை இரண்டு தொகுதிகளாகத் தொகுத்துள்ளார் கே.எம்.ஜார்ஜ். இதனைச் சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது. முதல் தொகுதி கவிதைகளும் இலக்கிய வரலாறும் கொண்டது. இரண்டாவது தொகுதி புனைகதைகள். இரண்டும் சேர்ந்து 2400 பக்கங்கள். 1993ல் இந்தத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. அதன் மறுபதிப்பை 2013ல் வெளியிட்டிருக்கிறார்கள். இரண்டு தொகுதிகளும் சேர்ந்து ஆயிரம் ரூபாய் விலைக்கு இணையத்தில் வாங்கினேன். புனைகதைகள் தொகுப்பில் 22 மொழிகளிலிருந்து 178 எழுத்தாளர்களின் 115 சிறுகதைகள், 68 நாவல்களின் சிறிய பகுதிகள் இடம் பெற்றுள்ளன. …
இணைய வழியில் நடைபெற்ற எஸ்.ரா கதைகள் -நூறு நிறைவு நிகழ்ச்சியில் நேற்று மாலை கலந்து கொண்டேன். எனது உரைக்குப் பதிலாக கலந்துரையாடலை வைத்துக் கொள்வோம் என்று சொன்னேன். நிறைய வாசகர்கள் நல்ல கேள்விகளைக் கேட்டார்கள். இரண்டு மணி நேரம் உரையாடல் நீண்டது, இன்னும் நிறைய கேள்விகள் மிச்சமிருந்தன. நேரமில்லாத காரணத்தால் அவர்களுக்குப் பதில் அளிக்க இயலவில்லை. பேராசிரியர் வினோத் நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தார். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி. அய்யா ஆறுமுகசாமி நேற்றைய நிகழ்விலும் …
அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் சார்பில் நடைபெற்ற எஸ்.ரா கதைகள் நூறு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட கதைகளின் பட்டியல் இணைய வழி நிகழ்வு – பேசப்பட்ட கதைகள் 1 புத்தனாவது சுலபம் 3 பிழை திருத்துபவரின் மனைவி 4 நடந்து செல்லும் நீரூற்று 5 கதவைத் தட்டிய கதை 6 அம்மா 7 அப்பா புகைக்கிறார் 8 பேசும் கற்கள் 9 அவளது வீடு 10 பீங்கான் நாரைகள்(மூன்று குடும்பங்களின் கதை) 11 இல்மொழி 12 சொர்ணத்து ஆச்சிக்கு …
அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் சார்பில் நடைபெற்ற எஸ்.ரா கதைகள் நூறு நிகழ்வில் பங்குபெற்றவர்களின் பட்டியல் இந்த நிகழ்வில் ஒரு சில சிறுகதைகள் குறித்து இரண்டு பேர் உரையாற்றியிருக்கிறார்கள். இன்னும் நிறைய வாசகர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும் என ஆசையோடு காத்திருக்கிறார்கள். சிறிது இடைவெளிக்குப் பின்பு இதன் அடுத்த கட்ட நிகழ்வு நடைபெறும். ••
அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் சார்பில் நடைபெற்ற எஸ்.ரா கதைகள் நூறு நிகழ்வில் பங்குபெற்றவர்களின் பட்டியல்