admin

எழுத்தின் வழியான பயணம்

சுபாஷ் ஜெய்ரேத் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய எழுத்தாளர். இவர் ஒன்பது ஆண்டுகள் ரஷ்யாவில் புவியியல் மற்றும் ரஷ்ய இலக்கியங்களைப் படித்திருக்கிறார். 1986 இல் அவர் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார். ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழிகளில் இவரது நூல்கள் வெளியாகியுள்ளன. அவரது நாவல் ஆஃப்டர் லவ் 2018 இல் ஸ்பெயினில் வெளியிடப்பட்டது. இவரது Spinoza’s Overcoat, Travels with Writers and Poets சிறப்பான கட்டுரைத் தொகுப்பாகும். சுபாஷ் ஜெய்ரேத் ரஷ்ய இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர் என்பதால் இந்தப் …

எழுத்தின் வழியான பயணம் Read More »

செகாவின் சகோதரி

விடிகாலையின் போது எல்லா ஊர்களும் தனது பெயர்களை இழந்து விடுகின்றன. இயக்கம் தான் ஊர்களின் பெயர்களை, அடையாளத்தை உருவாக்குகிறது. பனிமூட்டம் கலையாத விடிகாலையில் யால்டா வசீகரமான கனவுவெளியைப் போலிருக்கிறது என்று ஆன்டன் செகாவ் ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். ஊரும் அதன் நினைவுகளும் அதற்குக் காரணமாக மனிதர்களுமே அவரது எழுத்தின் ஆதாரங்கள். ஆன்டன் செகாவ் தன்னை ஒரு போதும் மாநகரத்தின் மனிதராகக் கருதவில்லை. மாஸ்கோவின் தொலைவிலுள்ள சின்னஞ்சிறிய கிராமத்திலே தான் வாழ்ந்திருக்கிறார். தனது வீட்டிலே இலவச மருத்துவமனையும் சிறிய …

செகாவின் சகோதரி Read More »

இரண்டு சிகரங்கள்

லியோ டால்ஸ்டாயும் தஸ்தாயெவ்ஸ்கியும் நேரில் சந்தித்துக் கொண்டதில்லை. ஆனால் ஒருவர் மீது மற்றவர் பெருமதிப்பு கொண்டிருந்தனர். வீட்டை விட்டு வெளியேறிய டால்ஸ்டாய் தனது இறுதிப்பயணத்தின் போது தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் நாவலைக் கையில் வைத்திருந்தார். இன்றைய AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டாக்டர் ஜி. கிருஷ்ண மூர்த்தி இருவர் சந்திப்பை அழகிய புகைப்படமாக்கியுள்ளார். ரஷ்ய இலக்கியங்களைக் கொண்டாடும் எனக்குப் பரிசாக இதனை அனுப்பி உள்ளார். அவருக்கு மனம் நிறைந்த நன்றி.

தோற்றம் சொல்லாத உண்மை

The Return of Martin Guerre 1982 ல் வெளியான பிரெஞ்சு திரைப்படம். இது டேனியல் விக்னே இயக்கியது, 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தெற்குப் பிரான்சில் கதை நடக்கிறது. சின்னஞ்சிறிய பிரெஞ்சு கிராமமும் அதன் எளிய மக்களும் கண்முன்னே விரிகிறார்கள். ஃப்ளெமிஷ் ஓவியர் பீட்டர் ப்ரூகலின் ஒவியங்களைப் போன்று ஒளிரும் காட்சிகள். அபாரமான ஒளிப்பதிவு. அந்தக் கால வீடுகள். மக்களின் உடை, அவர்களின் தோற்றம், வீடுகளில் உள்ள இருளும் ஒளியும் என நாம் காலத்தின் பின்னே …

தோற்றம் சொல்லாத உண்மை Read More »

சிறிய கண்டுபிடிப்பாளன்

புதிய சிறுகதை அசோக் ராஜன் இன்றைக்கும் பத்திரிக்கையாளர்களை வரவழைத்திருந்தார். மாதம் ஒருமுறை ஏதாவது புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றிச் சொல்லி பத்திரிக்கையாளர்களின் கேலிக்கு ஆளாவது அவரது வழக்கம். ஆனால் அதனால் அவர் மனச்சோர்வடைவதில்லை. உற்சாகமாகப் புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்ந்துவிடுவதுண்டு. அன்றைய சந்திப்பிற்கு ஆறு பத்திரிக்கையாளர்கள் வந்திருந்தார்கள். அசோக் ராஜன் தானே தயாரித்த தேநீரை அவர்களுக்கு வழங்கினார். தேநீரை அருந்தியபடியே ஒரு பத்திரிக்கையாளர் “ஏன் இப்படி முட்டாள்தனமான வேலையைத் தொடர்ந்து செய்கிறீர்கள்“ என்று கேட்டார் அதற்கு ராஜன் புன்சிரிப்போடு“ …

சிறிய கண்டுபிடிப்பாளன் Read More »

விழித்திருப்பவனின் இரவு

ஹாரிஸ் வாசிப்பின்/மீள் வாசிப்பின் போது எந்த ஒரு புத்தகம் எத்தனை வருடங்கள் சென்ற பின்னும் புதிய அனுபவத்தை அல்லது அன்றைய நிகழ்வுகளை படிப்பது போல் உணர வைக்கிறத்தோ அதுவே சிறந்த புத்தகம் என்பது எனது அபிப்பிராயம்.  எஸ் ராமகிருஷ்ணனின் ஒவ்வொரு கட்டுரை தொகுப்புகளும்  அவ்வகையானவையே…. விழித்திருப்பவனின் இரவு தொகுப்பை (மீள்)வாசித்து கொண்டிருக்கின்றேன்.  Dracula பற்றிய கட்டுரை – இப்போது கூட Dracula untold என்று ஒரு படம் வந்துள்ளது… எத்தனை வருடங்கள் கடந்தாலும் சிறந்த புத்தகங்கள் obsolete …

விழித்திருப்பவனின் இரவு Read More »

வெயிலைக் கொண்டு வாருங்கள் / கற்பனையின் உச்சம்

கணேஷ்பாபு. சிங்கப்பூர் குறுங்கதைகள், அதிகதைகள், மாய யதார்த்தக் கதைகளை அல்லது பொதுவாகப் பின்நவீனத்துவப் படைப்புகளை வாசிப்பதற்கு வாசகன் மனதளவில் சில தீர்மானங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். முதலில், முன்முடிவற்று இப்பிரதிகளை வாசிக்கப் பழக வேண்டும். ஆங்கிலத்தில் “Wilful suspension of disbelief” என்பார்கள். வாசகன் இவ்வகை அதிகதைகளை வாசிக்கையில் தனது நம்பிக்கையின்மையை அல்லது அவநம்பிக்கையை அல்லது தர்க்க அறிவை பிரக்ஞைபூர்வமாக ரத்து செய்துவிட்டு பிரதிக்குள் நுழைய வேண்டும். ஒரு விலங்கு எப்படிப் பேசும், குரங்கு எப்படிக் கடலைத் தாவும் …

வெயிலைக் கொண்டு வாருங்கள் / கற்பனையின் உச்சம் Read More »

உப பாண்டவம் புதிய பதிப்பு

மலையாளத்தில் கே.எஸ் வெங்கிடாசலம் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ள உப பாண்டவம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது அதன் இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது.

ருகெண்டாஸின் ஓவியங்கள்

An Episode in the Life of a Landscape Painter என்றொரு நாவலை அர்ஜென்டின எழுத்தாளர் செசர் ஐரா எழுதியிருக்கிறார். ஜெர்மானிய ஓவியரான ஜோஹன் மோரித் ருகெண்டாஸ் வாழ்க்கையினையும் செவ்விந்தியர்களைத் தேடி அவர் மேற்கொண்ட பயணத்தையும் முதன்மைப்படுத்தி எழுதப்பட்டது இந்த நாவல். ரொபெர்த்தோ பொலான்யோ இதற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். அதில் ஐராவை நிகரற்ற நாவலாசிரியர் என்று கொண்டாடுகிறார். அது உண்மை என்பதை நாவலை வாசித்து முடிக்கும் போது உணர்ந்தேன் ருகெண்டாஸ் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் செவ்விந்தியர்களை …

ருகெண்டாஸின் ஓவியங்கள் Read More »