admin

பெலா தார் கற்றுத்தருகிறார்.

புகழ்பெற்ற The Turin Horse திரைப்படத்தை எப்படிப் பெலா தார் (BelaTarr) உருவாக்கினார் என்பதை விவரிக்கிறது Tarr Bela: I Used to Be a Filmmaker ஆவணப்படம். இளம் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் இதனை அவசியம் காண வேண்டும். திரைப்பட உருவாக்கத்தில் பெலா தார் எவ்வளவு தீவிரம் காட்டுகிறார். எப்படி ஒரு காட்சியைத் துல்லியமாக உருவாக்குகிறார் என்பதற்கான மாஸ்டர் கிளாஸ் போல இந்த ஆவணப்படம் அமைந்துள்ளது. ஹங்கேரிய திரைப்பட இயக்குநர் பெலா தார் …

பெலா தார் கற்றுத்தருகிறார். Read More »

நீலக்குதிரைகளின் மௌனம்.

ஃபிரான்ஸ் மார்க் வரைந்த புகழ்பெற்ற ஓவியமான Blue Horses பற்றி மேரி ஆலிவர் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதில் அந்த ஒவியத்தினுள் செல்லும் அவரை நீலக்குதிரைகள் நெருங்கி வருகின்றன. தாங்கள் அறிந்த ஏதோ ரகசியத்தைச் சொல்ல முயல்வது போலக் காட்சியளிக்கின்றன. ஆனால் எதையும் சொல்லவில்லை என கவிதை முடிவு பெறுகிறது. உலகில்  இன்னும் கருணை மீதமிருக்கிறது என்பதன் அடையாளம் போலவே இந்த நீலக்குதிரைகள் வரையப்பட்டிருப்பதாக ஆலிவர் கருதுகிறார். இந்த ஓவியத்தைக் காணும்போதெல்லாம் டால்ஸ்டாயின் நடனத்திற்குப் பிறகு என்ற …

நீலக்குதிரைகளின் மௌனம். Read More »

கவின் கடிதம்

டான்டூனின் கேமிரா என்ற எனது சிறார் நூலை வாசித்துவிட்டு இரா.கவின் என்ற நான்காம் வகுப்பு மாணவர் எழுதியுள்ள கடிதம். கவினின் கடிதத்திற்கும் அழகான ஒவியத்திற்கும் நன்றி. வாசிப்பைத் தொடர வாழ்த்துகிறேன். கவின் கேட்ட கேள்விக்குப் பதில் : எறும்பின் வாழ்க்கை என்பது சில நாட்கள் தானே., ஆகவே கதை முடிவதற்குள் டான்டூன் இளைஞனாகி விடுகிறான்.

புதுமைப்பித்தன் நாடக நிகழ்வு

இரண்டு நாட்களும் புதுமைப்பித்தன் நாடகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம்.  நாடகத்தை மிக அருமையாக உருவாக்கியிருக்கிறார்கள்.  நிறைய இளைஞர்கள் நாடகம் காண வந்திருந்தது மகிழ்ச்சி அளித்தது. நாடக இயக்குநர் கே.எஸ்.கருணா பிரசாத், நடிகர்கள், மேடை அமைப்பு, ஒளியைக் கையாண்ட கலைஞர்கள். நாடகத்தைத் தயாரித்த கூத்துப்பட்டறைக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள். புதுமைப்பித்தன் குடும்பத்தினர், புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ரகுநாதன், கண்மணி கமலாவிற்கு நூலை வெளியிட்ட இளையபாரதி, புதுமைப்பித்தன் கதைகளின் செம்பதிப்பை உருவாக்கிய ஆ.இரா.வேங்கடாசலபதி. …

புதுமைப்பித்தன் நாடக நிகழ்வு Read More »

புதுமைப்பித்தன் நாடகம்

புதுமைப்பித்தன் வாழ்வை மையமாகக் கொண்டு நான் எழுதிய நாடகத்தைக் கே.எஸ்.கருணாபிரசாத் இயக்கியிருக்கிறார். கூத்துப்பட்டறையின் முக்கிய நடிகர்கள் இதில் பங்கேற்கிறார்கள். டாக்டர் ரவீந்திரன் ஒளியமைப்பு செய்கிறார். நவீன நாடக உலகில் தனிச்சிறப்பு மிக்க நடிகராகவும் இயக்குநராகவும் அறியப்படும் கே.எஸ்.கருணாபிரசாத் எனது அரவான் நாடகத்தை முன்னதாக இயக்கியிருக்கிறார். எழுத்தாளர் ந.முத்துசாமி அவர்களால் நவீன நாடகப் பயிற்சி பள்ளியான கூத்துப்பட்டறை 1977ல் துவங்கப்பட்டது. மிகச்சிறந்த நவீன நாடகங்களைக் கூத்துப்பட்டறை நிகழ்த்தியிருக்கிறது. கூத்துப்பட்டறை சார்பில் நடைபெறும் இந்நாடகம் மார்ச் 24 முதல் 28 …

புதுமைப்பித்தன் நாடகம் Read More »

இசையுலகின் நட்சத்திரம்.

டார் திரைப்படம் பெர்லின் இசைக்குழுவின் தலைமை இசை நடத்துநர் லிடியா டார் வாழ்க்கையை விவரிக்கிறது. இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஆனால் விருது பெறவில்லை. கிளாசிக்கல் இசையுலகில் நட்சத்திரமாகத் திகழும் லிடியா டாரின் நேர்காணலில் படம் துவங்குகிறது. புகழ்பெற்ற இசை நடத்துநர்களாக பெரிதும் ஆண்களே இருப்பது பற்றி கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு இசையில் அப்படியான பேதமில்லை என்று சொல்லிவிட்டுத் தன்னைப் போலப் பெண் இசை நடத்துநர்கள் நிறைய வந்துவிட்டார்கள் என்று தனது ஆதர்சங்களைச் சொல்கிறார். …

இசையுலகின் நட்சத்திரம். Read More »

மாணவர்களின் கடிதம்.

காரியாபட்டி ஒன்றியம் சத்திரம் புளியங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் எனது சிறார் கதைகளைப் படித்துப் பாராட்டுக் கடிதம் அனுப்பியிருந்தார்கள். பள்ளியின் தலைமை ஆசிரியர் சக்திவேல். மாணவர்களுக்கு நல்ல புத்தகங்களைத் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறார். மாணவர்கள் கூட்டாக எழுதிய கடிதத்திற்கு நன்றி கூறும்விதமாக அவர்களுக்கு எனது சிறார் நூல்களைப் பரிசாக அனுப்பி வைத்தேன். மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டார்கள்.

அறிவுச்சுடர் படிப்பகம்

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் திருமதி.சண்முகவடிவு மற்றும் அவரது தோழிகள் இணைந்து குழந்தைகளுக்காக அறிவுச்சுடர் படிப்பகம் என்ற நூலகத்தை நடத்தி வருகின்றனர்.  இங்கே தினமும் மாலையில் சிறுவர்கள் கூடி நூல்களை வாசிக்கிறார்கள். இவர்களைப் பாராட்டும்விதமாக தூத்துக்குடியில் சலூன் நூலகம் நடத்தி வரும் மாரியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் ஜெயபால், அருண்பிரசாத் ஆகியோர் எனது நூல்கள் உள்ளிட்ட ஐம்பது நூல்களை அறிவுச்சுடர் நூலகத்திற்குக் கொடையாக வழங்கியுள்ளார்கள். நூலகமனிதர்கள் என்ற வாசிப்பு இயக்கத்தை முன்னெடுக்கும் மாரியப்பனுக்கும் அவரது நண்பர்களுக்கும் எனது மனம் …

அறிவுச்சுடர் படிப்பகம் Read More »

கையறு

மலேசியத் தமிழ் இலக்கியத்தில் கோ. புண்ணியவான் முக்கியமான எழுத்தாளர். நல்ல சிறுகதையாசிரியர். இவர் எழுதிய கையறு நாவலைப் படித்தேன். சயாம் மரண ரயில் பாதை பணிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களின் வாழ்வினை விவரிக்கும் இந்த நாவல் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது. தண்டவாளம் அமைக்கும் வேலைக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்படுவதற்கு முந்தைய தோட்டத்து வாழ்க்கை. ஜப்பானியர்கள் செய்த அடக்குமுறைகள். ரயில் தண்டவாளம் அமைக்கும் பணியில் தமிழர்கள் சந்தித்த அவலங்களைச் சிறப்பாக எழுதியுள்ளார். காலத்தின் திரைக்குள் மறைந்து போன உண்மைகளை …

கையறு Read More »