admin

பசுமை விருதுகள் 2023

ஈரோட்டை சார்ந்த மருத்துவர் ஜீவா அற்புதமான மனிதர். சிறந்த காந்தியவாதி. சுற்றுசூழல் குறித்துத் தீவிரமான களப்பணிகளை முன்னெடுத்தவர். தேர்ந்த வாசகர். மொழிபெயர்ப்பாளர். காந்தி குறித்த எனது சிறுகதைகள் வெளியான தருணங்களில் அவற்றைப் பாராட்டிப் பேசி ஊக்கப்படுத்தியவர். என் மீது மிகுந்த நேசம் கொண்டவர். ஈரோடு செல்லும் போது தவறாமல் அவரைச் சந்திப்பது வழக்கம். 2021ல் ஜீவா மறைந்தார். அது தனிப்பட்ட முறையில் எனக்குப் பெரிய இழப்பாகும். மறைந்த மருத்துவர் வெ. ஜீவானந்தம் விட்டுச் சென்ற கனவுத்திட்டங்களை நிறைவேற்ற …

பசுமை விருதுகள் 2023 Read More »

வசந்தகாலத்திலே

Springtime in Saken என்ற ரஷ்ய நாவலை தி.க.சி மொழியாக்கம் செய்திருக்கிறார். ஜார்ஜி குலியா எழுதிய இந்த நாவல் சுவாரஸ்யமானது. 1951ல் இதனை மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழ் புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது. அப்காஸீயாவின் வடகிழக்கு மூலையிலுள்ள ஸாகேன் என்ற பகுதியைப் பற்றிய நாவலிது. ஸாகேனின் இயற்கை அழகினை ஒவியன் பார்வையில் விவரிக்கும் இந்த நாவல் அந்த மக்களின் நினைவுகளையும் வரலாற்றையும் மிக அழகாக விவரிக்கிறது. குறிப்பாக இதிலுள்ள வியப்பூட்டும் கதாபாத்திரங்களும் அவர்களின் நினைவுகளும் மறக்கமுடியாதவை.

பால்யத்தின் இனிய நினைவுகள்

வெங்கட்ராமன் கணேசன் தனது வலைப்பதிவில் பதின் நாவலுக்கு எழுதியுள்ள விமர்சனம். •• Pathin – S. Ramakrishnan Venkataraman Ganesan A where-The Wimpy Kid-meets-Adrian Mole, with an embellished profundity, S.Ramakrishnan’s Pathin both mesmerizes and provokes. The reader is given a sneak peek into the secret diaries assiduously maintained by Nanda Gopal (“Nandu”).Spanning a decade, the diaries reveal kaleidoscopic escapades of …

பால்யத்தின் இனிய நினைவுகள் Read More »

அயோத்தி

சிறந்த இயக்குநரும் நடிகருமான சசிகுமார் இன்று சாலிகிராமத்திலுள்ள எனது அலுவலகம் வந்திருந்தார். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவரது நடிப்பில் இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் நேற்று வெளியாகியுள்ள அயோத்தி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் கதை என்னுடையது. திரைப்படத்திற்காகவே இதனை எழுதினேன். படம் மிகுந்த உணர்ச்சிப் பூர்வமான வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்கினை விட்டு வெளியே வரும் பலரும் கண்ணீர் மல்கப் பாராட்டுகிறார்கள். ஊடகங்கள் படத்தைக் கொண்டாடுகின்றன. திரையுலகினை சேர்ந்த பலரும் எனக்குத் தொலைபேசியில் பாராட்டு தெரிவித்து …

அயோத்தி Read More »

கோணங்கி : பாலியல் குற்றச்சாட்டுகள்

இணையத்தில் வெளியாகியுள்ள கோணங்கி மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. கோணங்கியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நான் அவர்கள் பக்கம் நிற்கிறேன். கோணங்கி மற்றும் மணல்மகுடி நாடகக்குழுவை நடத்தும் முருகபூபதிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.

மருத்துவ சிகிச்சை

எனது இடுப்பு எலும்பில் ஒரு நரம்பு அழுத்தம் ஏற்பட்டு கடுமையான வலி உருவானது.‘ கடந்த ஒரு மாதகாலமாக அதற்குச் சிகிச்சை எடுத்து வருகிறேன். ஆகவே இலக்கிய நிகழ்ச்சிகள், புத்தகத் திருவிழா எதிலும் கலந்து கொள்ள முடியவில்லை. இன்னும் சில வாரங்கள் சிகிச்சை தொடர வேண்டும் என்று மருத்துவர் சொன்னதால் எங்கும் செல்ல முடியாத சூழ்நிலை. வீட்டில் இருந்தபடியே பிசியோதெரபி எடுத்துக் கொள்கிறேன். நல்ல மருத்துவர்களின் துணையால் இப்போது நலம் பெற்றுவருகிறேன்.

அறியப்படாத கார்க்கி

டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, ஆன்டன் செகாவ் போல மாக்சிம் கார்க்கியின் வாழ்க்கை வரலாறு இன்றுவரை விரிவாக எழுதப்படவில்லை. ரஷ்ய மொழியில் வெளியாகியுள்ள அவரது வாழ்க்கை வரலாறு சுருக்கமானது. ஸ்டாலின் அரசோடு அவருக்கு ஏற்பட்ட மோதல்கள், நெருக்கடிகள் பற்றி அதில் எதுவுமில்லை. Henri Troyat எழுதிய Gorky: A Biography கூட முழுமையானதில்லை. MAXIM GORKY : A POLITICAL BIOGRAPHY என்ற T. YEDLAN புத்தகத்தில் அவரது வாழ்க்கையின் கடைசிப்பகுதி விவரிக்கப்படுகிறது. தனது பால்ய வயது துவங்கி இளைஞனான …

அறியப்படாத கார்க்கி Read More »

மலையாளத்தில்

எனது உறுபசி நாவல் மலையாளத்தில் வெளியாகிறது. இடமன் ராஜன் இதனை மொழியாக்கம் செய்திருக்கிறார். லோகோஸ் பதிப்பகம் வெளியிடுகிறது. தமிழக அரசின் சிறந்த நூலுக்கான மொழியாக்கத் திட்டத்தில் இதனை வெளியிடுகிறார்கள்.

சின்னஞ்சிறு கவிஞன்

The Kindergarten Teacher என்ற இஸ்ரேலியத் திரைப்படத்தில்  Being a poet in our world is going against the nature of the world என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.  முற்றான உண்மையிது. ஒரு கவிஞனின் மனதில் கவிதை எப்படிப் பிறக்கிறது. எது அவனைக் கவிதை எழுதத் தூண்டுகிறது என்ற கேள்வியை நூற்றாண்டுகளாகக் கவிஞர்களிடம் கேட்டுவருகிறார்கள். இதற்குச் சொல்லப்பட்ட அத்தனை பதில்களுக்கும் வெளியே கவிதை உருவாகும் விதம் ரகசியமாகவும் ஆழ் மனதின் வெளிப்பாடாகவும் விளக்கமுடியாத புதிராகவுமே …

சின்னஞ்சிறு கவிஞன் Read More »

தேசாந்திரி பற்றி

எனது தேசாந்திரி புத்தகம் இன்றுவரை விற்பனையில் தொடர்ந்து சாதனை படைத்துவருகிறது. இந்த நூல் பற்றி மலேசியாவில் வாழும் வெங்கட்ராமன் சிறப்பான குறிப்பு ஒன்றை எழுதியிருக்கிறார் Desanthiri – S. Ramakrishnan – Blogternator Desanthiri – S. Ramakrishnanwritten by Venky February 22, 2023 Armed with a copy of Dan Cruickshank’s A Portrait of a City in 13 Walks, I arrived in London in December 2022, …

தேசாந்திரி பற்றி Read More »