நீலாம்பூர் சென்றவன்
1980களில் இது நடந்திருக்கலாம். அவரது பெயர் ஜெகநாதராவ். அவருக்கு அலங்கார விளக்குகள் மற்றும் கண்ணாடி பொருட்கள் விற்பனை செய்தவகையில் மூன்று லட்சத்து அறுபத்தி மூவாயிரம் ரூபாய் பாக்கியிருந்தது. அந்தப் பணத்தை வசூல் செய்ய யாராலும் முடியவில்லை. நீண்டகாலப் பாக்கியை வசூல் செய்வதற்காக அவனை நீலாம்பூர் அனுப்பி வைத்தார்கள். .•• அவனது பெயரை தெரிந்து கொள்ளும் முன்பு, அவன் ஏன் நீலாம்பூருக்கு செல்ல விரும்பினான் என்பதைத் தெரித்துக் கொள்வது முக்கியம். சில மாதங்களுக்கு முன்பு விடிகாலையில் அவனுக்கு ஒரு …









