admin

இஸ்மாயில் கவிதைகள்

மலையாள, கன்னட இலக்கியங்கள் அறிமுகமான அளவிற்குத் தெலுங்கு இலக்கியங்கள் தமிழுக்கு அறிமுகமாகவில்லை. ஆங்கில மொழிபெயர்ப்பில் கிடைக்கும் சில தெலுங்கு நாவல்களையும் சிறுகதைகளையும் வாசித்த போதும் அதிகம் நெருக்கம் ஏற்படவில்லை. ஆனால் சமீபமாகக் கவிஞர் இஸ்மாயில் கவிதைகளை வாசித்தபோது பிரமிப்பு ஏற்பட்டது. அவர் தெலுங்கு நவீன கவிதையின் முக்கியமான கவிஞர் என்பதை உணர்ந்தேன். ஒரு கவிதையில் பறந்து செல்லும் காகத்தின் நிழலைக் கறுப்பு மௌனம் என்று இவர் குறிப்பிட்டிருப்பது கூடுதல் ஈர்ப்பை உருவாக்கியது தத்துவப் பேராசிரியராக இருந்த முகமது …

இஸ்மாயில் கவிதைகள் Read More »

தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்

எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் எழுதியுள்ள தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் நூலின் வெளியீட்டுவிழா அக்டோபர் 8 மாலை சென்னை தேனாம்பேட்டையில் பாரதி புத்தகாலயம் துவங்கியுள்ள புதிய கடையினுள் நடைபெறுகிறது 900 பக்கங்கள் கொண்ட பெரிய நூல். தமிழ் சிறுகதையுலகினை விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார். நூலை நான் வெளியிடுகிறேன். பாராளுமன்ற உறுப்பினர், கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பெற்றுக் கொள்கிறார். அண்ணன் தமிழ்செல்வனின் நூலை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவரது நிழலில் கோணங்கியோடு சேர்ந்து வளர்ந்தவன் என்பதால் அந்தப் பசுமையான …

தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் Read More »

அன்பு வந்தது

சுடரும் சூறாவளியும் படத்தில் இடம்பெற்ற அன்பு வந்தது என்னை ஆள வந்தது பாடல் எனக்கு பிடித்தமானது. இந்த பாடல் இருமுறை படத்தில் இடம்பெறுகிறது.தாயினை இழந்த பிள்ளைகளை தந்தை ஆறுதல்படுத்திப் பாடும் பாடல் ஜெமினி நடித்த இப்படத்தின் இசை எம்.எஸ்.வி பாடலை எழுதியவர் கண்ணதாசன். எஸ்பிபி பாடிய அன்பு வந்தது பாடலை எப்போது கேட்டாலும் மனது கரைந்துவிடுகிறது. அருமையான பாடல். எஸ்பிபியின் குரல் அமிர்தமாக இனிக்கிறது. கண் இரண்டில் கலக்கம் இன்றிஅமைதி காணலாம்காலம் வெல்லும் வெல்லும் என்றுஉறுதி கொள்ளலாம் …

அன்பு வந்தது Read More »

ஒரு நாள் கருத்தரங்கம்

பெங்களூரில் அமைந்துள்ள கிருஸ்து நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் எனது படைப்புகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் நவம்பர் 11 ம் தேதி இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. எனது நண்பரும் ஆங்கிலத்துறை பேராசிரியருமான அபிலாஷ் மற்றும் தமிழ்த்துறை பேராசிரியர் சரளா இருவரும் இணைந்து இந்த நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்கிறார்கள். இதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள். விருப்பமான படைப்பாளிகள். கல்விப்புல ஆய்வாளர்கள், வாசகர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். •••• பொழில் மன்றம் பெங்களூரில் அமைந்துள்ள கிருஸ்து நிகர்நிலை …

ஒரு நாள் கருத்தரங்கம் Read More »

ஒரு நாள் நிபந்தனை

இரண்டாம் உலகப் போரின் போது ரோமில் வசித்த யூதர்களை நாடு கடத்தாமல் இருப்பதற்காக ஆல்பர்ட் கெஸ்ஸெல்ரிங் தலைமையில் செயல்பட்ட நாஜி ராணுவம் ஒரு நிபந்தனையை விதிக்கிறது. அதன்படி ஒரு நாளைக்குள் அவர்கள் ஐம்பது கிலோ தங்கத்தை ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் நகரைவிட்டு வெளியேறி சிறை முகாமிற்குச் செல்ல நேரிடும். இந்த நிபந்தனையை யூதர்கள் ஏற்கத் தயங்கினார்கள். குறிப்பாக இளைஞர்கள் இதற்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். ஆனால் யூத சமூகத்தின் மிக உயர்ந்த வணிகர்களோ தங்கத்தைக் கொடுத்து நாஜி …

ஒரு நாள் நிபந்தனை Read More »

புத்தகங்களின் நடுவே

கடந்த ஐந்து நாட்களாகப் பயணத்திலிருந்தேன். இன்று தான் சென்னை திரும்பினேன். திருச்சி மற்றும் மதுரை புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டேன். திருச்சியில் புத்தகத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. திருச்சி மாவட்ட நிர்வாகமும் தேசிய புத்தக நிறுவனமும் இணைந்து கண்காட்சியை சிறப்பாக உருவாக்கியிருந்தார்கள். களம் அமைப்பின் சார்பில் உரையாற்ற வருகிறவர்களை வரவேற்று வசதியான தங்குமிடம், ருசியான உணவு கொடுத்துக் கவனித்துக் கொண்டார்கள். 24 சனிக்கிழமை மாலையில் நான் வரலாற்றின் மௌனம் என்ற தலைப்பில் உரையாற்றினேன். அரங்கு நிறைந்த கூட்டம். …

புத்தகங்களின் நடுவே Read More »

மன்னிக்கப்படும் குற்றம்

புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்றில் காபிக்கடை முதலாளி கடவுளிடமே ஒரு கள்ளநோட்டினைத் தள்ளிவிடுகிறார். கடவுள் அந்த நோட்டினை தனியே எடுத்துக் கிழித்துப் போட்டுவிடுகிறார். துக்ளக் காலம் துவங்கி இன்றுவரை கள்ளநோட்டுப் புழக்கம் இல்லாத காலமேயில்லை. அதுவும் புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகமாகும் போது உடனே கள்ளநோட்டுகள் தயாராகிவிடுகின்றன. இன்றைக்கு நாம் எந்தக் கடைக்குப் போய்ப் பணம் கொடுத்தாலும் அது ஒரிஜினல் தானா என்று பரிசோதித்துப் பார்க்கிறார்கள். நூற்றில் ஒரு கள்ளநோட்டு எப்படியோ கலந்துகிடக்கிறது. கள்ளநோட்டு கும்பலைப் பற்றி எத்தனையோ …

மன்னிக்கப்படும் குற்றம் Read More »

மதுரை புத்தகத் திருவிழா

மதுரை புத்தகத்திருவிழா செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 3 வரை நடைபெறுகிறது இடம் : தமுக்கம் மைதானம் இந்தப் புத்தகத்திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. செப்டம்பர் 25 ஞாயிறு மாலை புத்தகத்திருவிழா அரங்கில் உரையாற்றுகிறேன்

பழைய மதராஸ்

பிதியா மேரி க்ரோக்கர் எனப்படும் பி.எம்.க்ரோக்கர் பிரிட்டனைச் சேர்ந்தவர். பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியைத் திருமணம் செய்து கொண்டு இந்தியாவில் 14 ஆண்டுகள் வசித்திருக்கிறார். இதில் சில காலம் வெலிங்டனில் வாழ்ந்திருக்கிறார். 1882 ஆம் ஆண்டுத் தனது 33 வயதில் எழுதத் துவங்கிய க்ரோக்கர் 1919 வரையுள்ள 37 ஆண்டுகளில் 44 நாவல்கள் மற்றும் ஆறு சிறுகதைகளின் தொகுதிகளை எழுதியிருக்கிறார். இவரது நாவல்கள் இங்கிலாந்தில் விரும்பி வாசிக்கபட்டன. சில நாவல்கள் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளன. இதில் In Old Madras …

பழைய மதராஸ் Read More »

ஷேக்ஸ்பியரின் ரகசியங்கள்

ஷேக்ஸ்பியரின் நாடகங்களைப் புரிந்து கொள்வதற்கான சில அடிப்படைகளை உருவாக்கும்விதமாக. Shakespeare and the goddess of complete being என்ற புத்தகத்தைக் கவிஞர் டெட் ஹியூஸ் எழுதியிருக்கிறார். இதில் ஷேக்ஸ்பியரின் ஆரம்பகாலக் கவிதைகளான வீனஸ் அண்ட் அடோனிஸ் மற்றும் தி ரேப் ஆஃப் லுக்ரேஸைக் கொண்டு அவரது நாடகங்களை ஆராய்ந்திருப்பது முக்கியமானது. இந்தக் கவிதைகளை அவரது நாடகங்களின் திறவுக்கோலாக டெட் ஹியூஸ் மதிப்பிடுகிறார். இரண்டு வேறுபட்ட காதல்நிலைகளை சித்தரிக்கும் இந்தக் கவிதைகளிலிருந்து அவரது நாடகங்கள் உருவாக்கபட்டிருக்கின்றன என்றும் …

ஷேக்ஸ்பியரின் ரகசியங்கள் Read More »