எம்.டி.வாசுதேவன் நாயர் நேர்காணல்
Sahapedia சிறந்த இலக்கியவாதிகளின் நேர்காணல்களை வெளியிட்டுள்ளது. எம்.டி. இந்த நேர்காணலில் அவரது படைப்புகள் மற்றும் வாழ்க்கை குறித்துப் பேசியிருக்கிறார்.
Sahapedia சிறந்த இலக்கியவாதிகளின் நேர்காணல்களை வெளியிட்டுள்ளது. எம்.டி. இந்த நேர்காணலில் அவரது படைப்புகள் மற்றும் வாழ்க்கை குறித்துப் பேசியிருக்கிறார்.
திருச்சி புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது எண் 68 & 69 எனது அனைத்து நூல்களும் அங்கே கிடைக்கும். செப்டம்பர் 23 வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு தேசாந்திரி பதிப்பகத்தின் அரங்கில் என்னைச் சந்திக்கலாம் செப்டம்பர் 24 சனிக்கிழமை மாலை புத்தகத் திருவிழாவில் உரையாற்றுகிறேன். அன்று மாலை நான்கு மணி முதல் தேசாந்திரி பதிப்பக அரங்கில் இருப்பேன்
Jean Sibelius இசையமைத்த Finlandia மிகச்சிறந்த இசைக்கோர்வை. இம்பீரியல் ரஷ்யாவின் கெடுபிடியான தணிக்கைக்கு எதிரான எதிர்ப்பைக் காட்டும் விதமாகவும் ஃபின்னிஷ் மக்களின் நம்பிக்கையினைத் தூண்டும் விதத்திலும் ஜீன் செபெலியஸ் 1899 ல் இதனை உருவாக்கியுள்ளார். ரஷ்ய தணிக்கையைத் தவிர்ப்பதற்காக, ஃபின்லாந்தியாவைப் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் மாற்றுப் பெயர்களில் நிகழ்த்தியிருக்கிறார்கள்
அரசு பள்ளிகளில் 5ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார். மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளிலுள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14, 095 மாணவர்கள் இதனால் பயன்பெறுவார்கள். மாணவர்களுக்கு காலை, மதியம் என இருவேளை உணவு வழங்குவதில் இந்தியாவின் முதல் மாநிலமாகத் தமிழகம் திகழ்வது பெருமையளிக்கிறது. நான் பள்ளியில் படிக்கும் நாட்களில் வறுமையான குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களில் சிலர் காலை உணவு …
திருச்சி புத்தகத் திருவிழா செப்டம்பர் 16 முதல் 25 வரை நடைபெறுகிறது. இடம் : வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானம். திருச்சி நேரம் காலை 11 மணி முதல் இரவு 9 வரை இதில் செப்டம்பர் 24 சனிக்கிழமை மாலை வரலாற்றின் மௌனம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன் திருச்சி புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. அங்கே எனது அனைத்து நூல்களும் கிடைக்கும்.
எனது யாமம் நாவல் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவை நாவல் குறித்து வெளியான அறிமுகக்குறிப்புகள் இந்த நாவலை தெலுங்கில் ஜி. பாலாஜி மொழியாக்கம் செய்துள்ளார். இவரே தற்போது எனது சஞ்சாரம் நாவலை சாகித்ய அகாதமிக்காக மொழியாக்கம் செய்துள்ளார்
கடிதம் வழியாகவே படம் துவங்குகிறது. ஒருவரையொருவர் சந்திக்க வேண்டும் என்று ஆசை கொண்ட பினா மற்றும் ஆல்ஃபிரடோ கடிதங்களின் வழியே மனதை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் காதலர்களாக இருக்கக் கூடும் என்ற எண்ணம் நமக்கு உருவாகிறது. The Visit (1963) என்ற இத்தாலியப்படம் பினாவின் ஒருநாளிற்குள் என்ன நடக்கிறது என்பதை விவரிக்கிறது ரயில் நிலையத்தில் படபடப்புடன் காத்திருக்கிறாள் பினா. அங்கே வரும் இரண்டு கன்னியாஸ்திரீகள் அவளது மிகையான ஒப்பனையைக் கண்டு நகைக்கிறார்கள். அவளோ ஆல்ஃபிரடோவின் வருகைக்காக ஆவலாகக் …
புதிய சிறுகதை (டெல்லி தமிழ்சங்க மலரில் வெளியானது.) தாத்தாவைக் கைது செய்வதற்காக இரண்டு போலீஸ்காரர்கள் வீட்டிற்கு வந்த ஏப்ரல் மாதத்தின் புதன்கிழமை முற்பகலில் கூர்வாள் போல வெயில் மினுங்கிக் bகாண்டிருந்தது. அப்போது என் வயது பனிரெண்டு. தாதன்குளத்தில் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன் அப்பாவின் வேலை காரணமாக அம்மாவும் தம்பிகளும் புனலூரில் வசித்தார்கள். என்னை மட்டும் தாத்தா வீட்டில் விட்டிருந்தார்கள். தாத்தாவிற்கு எட்டூர் கண்மாயை ஒட்டி நாலு ஏக்கர் வயலும் கரிசல் நிலமும் இருந்தது. வயலடியில் பெரிய படிக்கிணறு. …
இரண்டு நாட்களாகத் தூத்துக்குடியிலிருந்தேன். தனது சலூனில் நூலகம் ஒன்றை அமைத்து புத்தக வாசிப்பைப் பரவலாக்கி வரும் பொன் மாரியப்பன் இலக்கிய வாசகர் திருவிழா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார். இப்படி ஒரு நிகழ்ச்சி இந்தியாவில் எங்கும் நடந்ததில்லை. மில்லர்புரத்தில் தனது சலூன் உள்ள வீதியிலே மேடை அமைத்து திறந்தவெளிக் கூட்டமாக அமைத்திருந்தார். இருநூறு பேருக்கும் மேலாக வந்திருந்தார்கள். அவரது கடையின் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றிப் பொது மருத்துவமனை மருத்துவர்கள், தொழிலதிபர்கள். அரசு அதிகாரிகள். வங்கி அதிகாரி. பள்ளி ஆசிரியர்கள், நகராட்சி …
கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த்-ன் ‘அழிந்தபிறகு‘ நாவலில் வரும் யசவந்தராயர் மறக்கமுடியாத கதாபாத்திரம். தற்செயலாக அவரை ரயில் பயணத்தில் சந்திக்கும் கதைசொல்லி பின்பு மும்பையில் அவரைத்தேடிச் சென்று நட்பு கொள்வது. அவரது மரணத்திற்குப் பிறகு அவரது ஆசைகளை நிறைவேற்ற முனைவதும் நாவலில் மிகசிறப்பாக எழுதப்பட்டுள்ளது இந்த நாவலில் வரும் கதைசொல்லி பயணத்தை விரும்புகிறவன். நம்முடைய வாழ்க்கையே ஒரு ரயில் பயணம் தான் என்கிறான். நமக்கான இடம் கிடைக்காவிட்டால் பயணத்தில் நின்று கொண்டே பயணிப்பது போன்ற நிலை வாழ்க்கையிலும் …