நூலக மனிதர்கள் 2 தந்தையின் நிழலில்
விருதுநகர் பொது நூலகத்தில் அவர்கள் இருவரையும் பார்த்திருக்கிறேன். அந்தச் சிறுவனுக்கு பத்து பனிரெண்டு வயதிருக்கும். அவனது கையைப் பிடித்துக் கொண்டு அவனது அப்பா நூலகத்திற்கு அழைத்துக் கொண்டு வருவார். ஒரு முறை கூட அப்பா தனியே நூலகத்திற்கு வந்ததாக நினைவேயில்லை. பெரும்பாலும் சனிக்கிழமை காலையிலும் ஞாயிறு மாலையிலும் அவர்கள் நூலகத்திற்கு வருவார்கள். அப்பா நூலகத்தின் நீண்ட அடுக்குகளுக்குள் அந்த பையனை அழைத்துக் கொண்டு போய் மெல்லிய குரலில் புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசிக் கொண்டிருப்பார். அந்த …