சினிமா

லூயிஸ் வான் பீத்தோவன்

Louis van Beethoven ஜெர்மன் தொலைக்காட்சிக்காக 2020ல் உருவாக்கப்பட்ட திரைப்படம். பீத்தோவனின் 250வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. நிக்கி ஸ்டெயின் இதனை இயக்கியுள்ளார் லுட்விக் பீத்தோவனின் இறுதி ஆண்டுகளில் துவங்கி அவரது பால்யகாலத்திற்குள் இடைவெட்டி முன்பின்னாகக் கதை நகர்கிறது . குழந்தைப் பருவம். இளமைக்காலம், முதுமை என்று மூன்று வேறுபட்ட காலங்களில் பீத்தோவனைக் காணுகிறோம். படம் பீத்தோவனின் பயணத்தில் துவங்குகிறது. தனது இளைய சகோதரன் வீட்டிற்குக் கோச் வண்டியில் பயணம் செய்கிறார் .வீட்டில் அவருக்குக் கிடைக்கும் …

லூயிஸ் வான் பீத்தோவன் Read More »

அமைதியற்ற நிழல்

Land and Shade படம் பார்த்து முடியும் போது நம் உடல் முழுவதும் எரிக்கப்பட்ட கரும்பு வயலின் தூசியும் சாம்பலும் ஒட்டிக் கொண்டிருப்பதைப் போல உணருகிறோம். அவ்வளவு நெருக்கமான உணர்வைப் படம் ஏற்படுத்துகிறது. கொலம்பியாவைச் சேர்ந்த இப்படத்தைச் சீசர் அகஸ்டோ அசெவெடோ இயக்கியிருக்கிறார். 2015ல் வெளியானது. சிறந்த ஒளிப்பதிவிற்கான கேன்ஸ் விருதைப் பெற்றுள்ளது, படத்தின் முதல் காட்சியில் அல்போன்சா கரும்புத் தோட்டத்தின் நடுவே நடந்து வருகிறார். பெரிய டிரக் ஒன்று மண் சாலையில் வேகமாக அவரைக் கடந்து …

அமைதியற்ற நிழல் Read More »

ஓடிய கால்கள்

அடிடாஸ். பூமா இரண்டும் புகழ்பெற்ற காலணி தயாரிப்பு நிறுவனங்கள். டாஸ்லர் சகோதரர்கள் எனப்படும் ஜெர்மனியைச் சேர்ந்த அடோல்ஃப் மற்றும் ருடால்ஃப் சகோதரர்கள் பிரிந்து இந்த நிறுவனங்களை உருவாக்கினார்கள். இவர்கள் எப்படி விளையாட்டு வீர்ர்களுக்கான சிறப்புக் காலணி தயாரிப்பில் ஈடுபடத் துவங்கினார்கள். எவ்வாறு புகழ்பெற்றார்கள். எதன் காரணமாக இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. அந்தப் பிரிவிற்குப் பின்பு எப்படித் தனக்கெனத் தனி நிறுவனத்தை உருவாக்கினார்கள் என்பதை அழகான திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள். That’s The Name Of The Game! – …

ஓடிய கால்கள் Read More »

கடைசி சாட்சியம்.

GORBACHEV. HEAVEN என்ற மிகையில் கோர்பசேவ் பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்தேன். அவரது கடைசி வருஷங்களில் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு ஆவணப்படம் உலகிற்குத் தேவை என்று ஒரு காட்சியில் அவரே குறிப்பிடுகிறார். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு கோர்பசேவ் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அவரது அரசியல் வாழ்க்கை அத்தோடு முடிந்து போனது என்றார்கள். இந்த ஆவணப்படத்தில் அவர் குறித்த விமர்சனங்களை நேரடியாகக் கேட்கிறார்கள். மிகவும் வெளிப்படையாகக் கோர்பசேவ் பதில் சொல்கிறார். அதில் வெளிப்படும் உறுதி மற்றும் தனது …

கடைசி சாட்சியம். Read More »

புத்தகங்களின் எதிர்காலம்

. புத்தகங்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்.? என்ற கேள்வி பொதுவெளியில் தொடர்ந்து எழுப்பபட்டு வருகிறது அச்சுப் புத்தகங்கள் வெளியிடுவது குறைந்துவிடும். மின் புத்தகங்களே (EBOOKS)  அதிகம் வெளியிடப்படும் என்று சொல்கிறார்கள். அப்படியில்லை. அச்சுப் புத்தகங்களுக்கான வாசகர்கள் எப்போதும் இருப்பார்கள். மின் புத்தகம் இன்னொரு வடிவம் மட்டுமே. அதனால் பதிப்புத் தொழில் விரிவடையுமே அன்றி முடிவிற்கு வந்துவிடாது என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. பதிப்புத்துறையின் இன்றைய சவால்களைப் பற்றி விவாதிக்கும் படமாக ஆலிவர் அஸ்ஸாயஸ் (Olivier Assayas )இயக்கிய Non-Fiction வெளிவந்துள்ளது. …

புத்தகங்களின் எதிர்காலம் Read More »

கண்களை மூடிப் பார்க்கிறேன்.

 “The Wonderful Story of Henry Sugar.” என்ற வெஸ் ஆண்டர்சனின் 40 நிமிஷக் குறும்படம் கதைக்குள் கதை என விரியும் அழகான திரைக்கதையைக் கொண்டிருக்கிறது. எழுத்தாளர் ரோல்ட் டாலின் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆண்டர்சன் கதை சொல்லும் பாணியில் ஒரு விசித்திரத்தன்மை வெளிப்படுவது வழக்கம். இதில் அந்தப் பாணி புதிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. சினிமாவை பல்வேறு கலைகளின் கூட்டு வடிவம் என்பதை ஆண்டர்சன் நன்கு உணர்ந்தவர். நாடகம், மேஜிக், கதை சொல்வது, இசைநிகழ்ச்சி. …

கண்களை மூடிப் பார்க்கிறேன். Read More »

நகரங்களே சாட்சி

Ancient Egypt by Train with Alice Roberts என்ற பயணத்தொடரைப் பார்த்தேன். ஆலிஸ் ராபர்ட்ஸ் பண்டைய எகிப்திலுள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிடுவதற்காக நாடு முழுவதும் ரயிலில் பயணம் செய்கிறார். மருத்துவரான ஆலிஸ் ராபர்ட்ஸ் சவுத் வேல்ஸிலுள்ள தேசிய சுகாதாரச் சேவையில் இளம் மருத்துவராக பதினெட்டு மாதங்கள் பணியாற்றினார். பின்பு 1998 இல் மருத்துவத்துறையை வெளியேறி பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரானார். தற்போது தொலைக்காட்சிக்கான அறிவியல் மற்றும் வரலாற்று ஆவணப்படங்களின் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். எகிப்தில் முதல் இரயில் …

நகரங்களே சாட்சி Read More »

சாராவின் பொய்கள்

ஃபர்னூஷ் சமாதி இயக்கிய 180 Degree Rule 2020ல் வெளியானது. இப்படம் அஸ்கர் ஃபர்ஹாதியின் A Separation பாதிப்பில் உருவானது என்று தெரிகிறது. இரண்டிற்கும் நிறைய ஒற்றுமைகள். தெஹ்ரானில் வசிக்கும் பள்ளி ஆசிரியையான சாரா பள்ளியில் நன்மதிப்பு பெற்றவர். படத்தின் துவக்கத்திலே வகுப்பறையில் தற்கொலைக்கு முயலும் மாணவியைக் காப்பாற்றி விசாரணை மேற்கொள்கிறாள். அவள் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அந்தப் பிரச்சனையை வேறு எவரும் அறியாதபடி மாணவியின் அம்மாவை வரவழைத்துப் பேசி சரிசெய்கிறாள். சாராவின் கணவர் ஹமேட் கண்டிப்பானவர். …

சாராவின் பொய்கள் Read More »

குழப்பம் எனும் நெருப்பு

கிரேக்க எழுத்தாளர் நிகோஸ் கசான்ஸ்சாகிஸ் வாழ்வினை விவரிக்கும் kazantzakis என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். 2017ல் வெளியானது. இதனை யானிஸ் ஸ்மரக்டிஸ் இயக்கியுள்ளார். துறவியின் இதயமும் கலைஞனின் கண்களும் கொண்டவர் கசான்ஸ்சாகிஸ். இப்படம் அவரது படைப்புகள் உருவான விதம் மற்றும் அவரது ஆளுமையை அறிந்து கொள்ளத் துணை செய்கிறது. குறிப்பாக இயேசு மற்றும் புத்தர் குறித்த அவரது புரிதலும் பார்வைகளும் படத்தில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. புத்தரின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட கசான்ஸ்சாகிஸ். தனது நாடகம் ஒன்றில் …

குழப்பம் எனும் நெருப்பு Read More »

எவரெஸ்ட் எனும் கனவு

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதைப் பற்றி எத்தனையோ படங்களைப் பார்த்திருக்கிறேன். அவை சாகசப்பயணமாகவே தோன்றும். ஆனால் ‘மை எவரெஸ்ட்’ முற்றிலும் மாறுபட்ட படம். கார்ல் வூட்ஸ் இயக்கியுள்ள இப்படம் உண்மை நிகழ்வை மையமாகக் கொண்டது இங்கிலாந்தைச் சேர்ந்த மாக்ஸ் ஸ்டெய்ன்டன் பர்ஃபிட் Cerebal Palsy யால் பாதிக்கப்பட்டவர். சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வாழுகிறார் ஸ்டெய்ன்டன் தனது நீண்ட காலக் கனவாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதைக் கொண்டிருக்கிறார். அவரது இந்தப் பயணத்தினை எப்படித் திட்டமிடுகிறார்கள். எவரெஸ்ட் நோக்கி எப்படிப் பயணம் …

எவரெஸ்ட் எனும் கனவு Read More »