சினிமா

நீள மறுக்கும் கை

இத்தாலிய இயக்குநரான விட்டோரியோ டி சிகா இயக்கிய உம்பர்தோ டி திரைப்படம் வறுமையான சூழலில் வாழும் ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் உலகைச் சித்தரிக்கிறது. டி சிகாவின் பைசைக்கிள் தீவ்ஸ் படத்தை விடவும் சிறந்த படமிது. உம்பர்டோ டியால் வாடகை தர இயலவில்லை. நிறையக் கடன். அவருக்குத் துணையாக இருப்பது ஒரு நாய்க்குட்டி மட்டுமே. அவர் இல்லாத நேரத்தில் அவரது அறையைக் காம தம்பதிக்கு மணி நேரத்திற்கு வாடகைக்கு விடுகிறாள் வீட்டு உரிமையாளர். உடல்நலமற்று மருத்துவமனை போய்த் …

நீள மறுக்கும் கை Read More »

தோற்றம் சொல்லாத உண்மை

The Return of Martin Guerre 1982 ல் வெளியான பிரெஞ்சு திரைப்படம். இது டேனியல் விக்னே இயக்கியது, 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தெற்குப் பிரான்சில் கதை நடக்கிறது. சின்னஞ்சிறிய பிரெஞ்சு கிராமமும் அதன் எளிய மக்களும் கண்முன்னே விரிகிறார்கள். ஃப்ளெமிஷ் ஓவியர் பீட்டர் ப்ரூகலின் ஒவியங்களைப் போன்று ஒளிரும் காட்சிகள். அபாரமான ஒளிப்பதிவு. அந்தக் கால வீடுகள். மக்களின் உடை, அவர்களின் தோற்றம், வீடுகளில் உள்ள இருளும் ஒளியும் என நாம் காலத்தின் பின்னே …

தோற்றம் சொல்லாத உண்மை Read More »

பழிவாங்குதலின் பாதை

ஜான் ஃபோர்டின் The Searchers ஹாலிவுட் சினிமாவின் காவியங்களில் ஒன்றாகும். இது ஜான் ஃபோர்டின் நூற்றுப் பதினைந்தாவது திரைப்படம், சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதை நான்கு முறை பெற்றிருக்கிறார் ஜான் ஃபோர்ட். அவரது மோசமான குடிப்பழக்கம் மிதமிஞ்சிய கோபம் காரணமாக அவரைக் கண்டு ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் பயந்தார்கள். திரையில் அவர் உருவாக்கிக் காட்டிய பிரம்மாண்டம் இன்றும் அதிசயமாகப் பேசப்படுகிறது. இப்படம் ஃபிராங்க் எஸ். நுஜென்ட் எழுதிய திரைக்கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவர் ஜான் ஃபோர்டின் 11 …

பழிவாங்குதலின் பாதை Read More »

பெயரில்லாத நாயகன்

எத்தனை முறை பார்த்தாலும் வியப்புக் குறையாத திரைப்படங்களை உருவாக்கியவர் செர்ஜியோ லியோனி. ஏழு திரைப்படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். ஸ்பாகெட்டி வெஸ்டர்ன் என்ற தனிவகைச் சினிமாவை உருவாக்கியவர் செர்ஜியோ லியோனி. அவரது காட்சிக்கோணங்களும் ,இசையைப் பயன்படுத்தும் விதமும், பரபரப்பான கதைத்திருப்புகளும் மறக்கமுடியாதவை. எவரது நிர்ப்பந்தத்திற்கும் கட்டுப்படாமல் நான் படங்களை இயக்கக்கூடியவன் என்கிறார் செர்ஜியோ. இவரது தந்தையும் ஒரு திரைப்பட இயக்குநரே. முப்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். இவரும் இசையமைப்பாளர் எனியோ மோரிகோனும் பள்ளி நண்பர்கள். இவர்கள் …

பெயரில்லாத நாயகன் Read More »

டார்வினின் வருகை

கவிஞர் ஞானக்கூத்தன் வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு என்றொரு கவிதையை எழுதியிருக்கிறார். அந்தக் கவிதையில் வருவது போல எனது பள்ளி நாட்களில் அறிவியல் பாடம் நடத்தும் போது எலும்புக் கூடு ஒன்றை வகுப்பறைக்குக் கொண்டுவருவார்கள். அந்த எலும்புக்கூடு மனிதன் யார் என்று தெரியாது. அவனது கைகால்களின் எலும்புகளைக் காட்டி ஆசிரியர் டார்வின் தியரியை விளக்கிச் சொல்லுவார். வகுப்பு முடிந்தவுடன் எலும்பு கூட்டை கொண்டு போய்ச் சயின்ஸ் லேப் உள்ளிருந்த கண்ணாடி பெட்டகத்திற்குள் வைத்துவிடுவார்கள். காரிடாரில் எலும்புக்கூடு போவதைக் காண …

டார்வினின் வருகை Read More »

இசைக்க மறந்த உறவு

கிரில் செரிப்ரெனிகோவ் எழுதி இயக்கிய TCHAIKOVSKY’S WIFE 2022ல் வெளியானது. இப்படம் புகழ்பெற்ற ரஷ்ய இசைக்கலைஞர் சைகோவ்ஸ்கியின் திருமண வாழ்க்கையைப் பற்றியது. 1893 ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் படம் துவங்குகிறது, அன்டோனினா தனது கணவர் சைகோவ்ஸ்கியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறார் – நெரிசல் நிறைந்த மாளிகையின் இரண்டாவது மாடிக்குத் தடுமாறிச் செல்கிறாள். அங்கிருந்தவர்களால் அதிர்ச்சியுடனும் வெறுப்புடனும் பார்க்கப்படுகிறாள். அங்கே இறந்த கிடந்த சைகோவ்ஸ்கி எழுந்துவந்து அவள் மீது கோபம் கொண்டு வெளியே துரத்துவதாகக் கற்பனை …

இசைக்க மறந்த உறவு Read More »

பற்றிக் கொள்ளும் கைகள்

ஓல்ஸ் சானின் இயக்கிய உக்ரேனியத்  திரைப்படம் The Guide. 2014ல் வெளியானது. படத்தின் முன்னோட்டத்தைக் காணும் போது Ivan’s Childhood திரைப்படம் ஞாபகம் வந்தது. நேற்று படம் பார்த்து முடித்தபோது தார்கோவெஸ்கியின் பாதிப்பில் உருவான படம் என்பதை நன்றாகவே உணர முடிந்தது. 1930களின் தொடக்கத்தில் படம் நடக்கிறது. உக்ரேனிய வரலாற்றின் முக்கியமான காலகட்டத்தின் கதையைப் படம் சொல்கிறது. உக்ரேனின் கார்கிவ் நகரில் கூட்டுப்பண்ணை விவசாயத்திற்காகப் புதிய டிராக்டர் தொழிற்சாலை கட்ட முயலுகிறார்கள். இந்தப் பணியில் சோசலிசத்தின் மீது …

பற்றிக் கொள்ளும் கைகள் Read More »

இன்மையின் சுவை

சுவிஸ் திரைப்படத் தயாரிப்பாளரான வெர்னர் பென்சல் இயக்கிய ஆவணப்படம். Zen for Nothing 2016ல் வெளியான இப்படம் ஜென் மடாலய வாழ்வினைப் பற்றிய சிறப்பான அனுபவத்தைத் தருகிறது. சுவிஸ் நடிகையான சபீனா டிமோடியோ தனது அகத்தேடலின் காரணமாக ஜப்பானின் மேற்குக் கடற்கரை பகுதியிலுள்ள அந்தாஜி ஜென் மடாலயத்திற்குச் செல்கிறார். அங்கே மூன்று பருவகாலங்களைக் கழிக்கிறார். தியானம் மற்றும் வாழ்வியல் நுட்பங்களைக் கற்றுக் கொள்கிறார். ஜென் துறவிகள் என்றால் சதா தியானத்திலிருப்பவர்கள் என்ற பொதுப்புத்திக்கு மாறாக இங்கே துறவிகள் …

இன்மையின் சுவை Read More »

சாமுராய்களும் செர்ரி மலர்களும்

Chushingura 1962ல் வெளியான ஜப்பானியப் படம். ஹிரோஷி இனாககி இயக்கியது புகழ்பெற்ற 47 ரோனின் என்ற சாமுராய்வீர்ர்களின் கதையை விவரிக்கும் படம். 47 ரோனின் கதை ஜப்பானின் தேசிய காவியம் என்றே அழைக்கப்படுகிறது இக்கதை எண்ணற்ற முறை நாடகமாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அத்தோடு ஆறு முறை படமாக்கப்பட்டிருக்கிறது இதே கதையை மிஷோகுஷி 1949ல் எடுத்திருக்கிறார். அப்படம் தோல்வியுற்றது. வண்ணத்தில் அதே கதையைத் தொசிரே மிபுனே போன்ற முக்கிய நட்சத்திரங்களைப் பயன்படுத்திப் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள். இடைக்கால ஜப்பானில் நடைபெறும் கதை. …

சாமுராய்களும் செர்ரி மலர்களும் Read More »

மவுண்ட்பேட்டனின் கடைசிநாள்

லூயி பிரான்சிஸ் ஆல்பெர்ட் விக்டர் நிக்கோலஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் எனப்படும் மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் வைஸ்ராயாக இருந்தவர். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்தவர். இந்தியப்பிரிவினைக்கு முக்கியக் காரணமாக இருந்தவர், இங்கிலாந்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்த மவுண்ட்பேட்டன் ஆங்கிலக் கடற்படைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்றார். இவர் தனது குடும்பத்துடன் அயர்லாந்தின் முல்லாக்மோரிலுள்ள கிளாசிபான் கோட்டையில் விடுமுறையைக் கழித்த போது படுகொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வின் நேரடி சாட்சிகள் மற்றும் அந்த நாளில் …

மவுண்ட்பேட்டனின் கடைசிநாள் Read More »