சினிமா

டோக்கியோ விசாரணை

இரண்டாம் உலகப்போரின் முடிவிற்குப் பின்பு ஹிட்லரின் போர்க்குற்றங்களையும் அதற்குக் காரணமாக இருந்த நாஜி ராணுவ அதிகாரிகள். அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட உயர்பதவி வகித்தவர்களையும் விசாரிக்க நூரென்பெர்க்கில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. நீதிமன்ற வரலாற்றில் நூரென்பெர்க் விசாரணை மிகவும் முக்கியமானது. இந்த விசாரணையை மையமாகக் கொண்டு 1961ம் ஆண்டு JUDGMENT AT NUREMBERG என்ற திரைப்படம் ஸ்டான்லி கிராமர் இயக்கத்தில் வெளியானது. தலைமை நீதிபதி டான் ஹேவுட்வாக ஸ்பென்சர் டிரேசி சிறப்பாக நடித்திருப்பார். அற்புதமான  திரைப்படம். நூரென்பெர்க் …

டோக்கியோ விசாரணை Read More »

டிக்கன்ஸின் தேவை

Armando’s Tale of Charles Dickens என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன் தொலைக்காட்சி தயாரிப்பாளர் மற்றும் இலக்கிய ஆர்வலரான அர்மாந்தோ யெனூச்சி சார்லஸ் டிக்கன்ஸின் தீவிர வாசகர். அவர் பிபிசிக்காக இந்த ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார் டிக்கன்ஸ் பிறந்து இருநூறு ஆண்டுகள் ஆகின்றன. அவரது நாவல்கள் பல்வேறு நாடுகளில் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. நாடகமாகவும் தொலைக்காட்சித் தொடராகவும் இன்றும் உருவாக்கப்படுகின்றன. டிக்கன்ஸின் டேவிட் காப்பர்ஃபீல்டு, ஆலிவர் டுவிஸ்ட்  போன்ற நாவல்களை இன்றைய தலைமுறை விரும்பிப் படிக்கிறார்களா. அல்லது அவர் வெறும் கலாச்சாரப் பிம்பம் …

டிக்கன்ஸின் தேவை Read More »

மகிழ்ச்சியின் பெயர்

Borsch. The Secret Ingredient என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். யெவ்ஹென் க்ளோபோடென்கோ என்ற சமையற்கலைஞர் போர்ஷ் என்ற சூப்பின் ரெசிபிகளைக் கண்டறிய முயலும் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ‘ இதில் உக்ரேனிய உணவுப்பண்பாட்டினையும் அதன் வரலாற்றையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்கள் இறைச்சி, உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் பீட்ரூட் கொண்டு சமைக்கப்படும் போர்ஷ் சூப் உக்ரேனியர்களின் விருப்பத்திற்குரிய உணவு. எல்லா விசேசங்களிலும் அவர்கள் போர்ஷ் தயாரிக்கிறார்கள்.. உக்ரேனியர்களை ஒன்றிணைக்கும் இந்த சூப்பை பல்வேறு விதங்களில் சமைக்கிறார்கள். அதன் …

மகிழ்ச்சியின் பெயர் Read More »

குற்ற நாடகங்களின் நாயகன்

ஹாலிவுட் இயக்குநரான மார்ட்டின் ஸ்கோர்செசி தனது எண்பதாவது வயதில் Killers of the Flower Moon என்ற படத்தை இயக்கியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு கேன்ஸ் திரைப்படவிழாவில் இப்படம் திரையிடப்பட்டு மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. மூன்றரை மணி நேரம் ஓடும் இந்தத் திரைப்படத்தை ஆப்பிள் டிவி தயாரித்துள்ளது. ஸ்கோர்செசியை விட ஒரு வயது குறைந்த ராபர்ட் டி நீரோ இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். லியோனார்டோ டிகாப்ரியோ, லில்லி கிளாட்ஸ்டோன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே படத்தில் பணியாற்றியிருக்கிறார்கள். …

குற்ற நாடகங்களின் நாயகன் Read More »

மறைந்திருக்கும் உண்மைகள்

சமகால ஐரோப்பியத் தத்துவவாதிகளில் முக்கியமானவர் ஸ்லாவாய் ஜிஜெக் (Slavoj Zizek) . லாகானிய உளவியல் பகுப்பாய்வுகள், சமகால வாழ்க்கையை வடிவமைக்கும் சித்தாந்தம், முதலாளித்துவம் மற்றும் கற்பனையின் தர்க்கங்கள் குறித்து ஆராய்ந்து எழுதி வருகிறார் ஜிஜெக். இவரது நகைச்சுவை உணர்வு அபாரமானது. சினிமாவில் நாம்  காணும் காட்சிகளுக்குள் என்னவெல்லாம் ஒளிந்திருக்கின்றன. எது போன்ற பிம்பங்களைச் சினிமா உருவாக்குகிறது என்பதைப் பற்றி இந்த ஆவணப்படத்தில் ஜிஜெக் விவரிக்கிறார். நகைச்சுவை நடிகர்களிடம் காணப்படும் உடல்மொழி போல அவரிடமும் அழகான உடல்மொழி வெளிப்படுகிறது. …

மறைந்திருக்கும் உண்மைகள் Read More »

தனிக்குரல்

உண்மையைச் சொல்லும் திரைப்படங்களை மட்டுமே நான் எடுக்க விரும்புகிறேன். அதுவும். ஆழமான உண்மைகளை, கசப்பான உண்மைகளைக் கூடப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது என்கிறார் உஸ்மான் செம்பேன். ஆப்பிரிக்கச் சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் உஸ்மான் செம்பேன் குறித்த ஆவணப்படம் “Sembene!” 2015ல் வெளியான இப்படத்தை Samba Gadjigo மற்றும் Jason Silverman’ இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் ஆப்பிரிக்கா முழுவதும் திரையிடப்பட்டிருக்கிறது செனகலில் 1980 முதல் இப்போது வரை 90% திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. …

தனிக்குரல் Read More »

ரூமியும் லம்யாவும்

பதிமூன்றாம் நூற்றாண்டு பாரசீக கவிஞர் ரூமி என்கின்ற மௌலானா ஜலாலுதீன் ரூமியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட அனிமேஷன் திரைப்படம் Lamya’s Poem. சிரியாவில் வாழும் பனிரெண்டு வயதான லம்யாவின் பகல் கனவில் துவங்குகிறது படம். மின்மினிப்பூச்சிகள் பறக்கும் உலகைக் கனவு காணுகிறாள். அதில் மின்மினிப்பூச்சிகள் பறந்து வந்து அவளது கையில் அமர்கின்றன. அதன் வசீகர ஒளியும் பறத்தலும் அவளைச் சந்தோஷப்படுத்துகின்றன. விநோதமான கற்பனையிலிருந்து அவள் விழிப்படையும் போது சாதாரணப் பள்ளி மாணவியாக வெள்ளை உடையில் தோன்றுகிறாள். வீட்டில் …

ரூமியும் லம்யாவும் Read More »

சைபீரியப் பனியில் சில காலடிகள்

அகிரா குரோசாவாவின் திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றத் துவங்கி அவரது திரைப்படங்களின் தயாரிப்பு உதவியாளர் வரையான பல்வேறு பணிகளை மேற்கொண்டவர் டெருயோ நோகாமி அகிரா குரசோவாவின் 19 படங்களில் பணியாற்றியிருக்கிறார். குரோசாவாவின் பக்கத்திலேயே கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் இருந்திருக்கிறார். இவர் தனது திரையுலக அனுபவங்களை Waiting on the Weather: Making Movies with Akira Kurosawa என்ற நூலாக எழுதியிருக்கிறார். அவர் திரைப்பட உலகிற்கு அறிமுகமான விதம் மற்றும் குரசோவாவின் படத்தில் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு, …

சைபீரியப் பனியில் சில காலடிகள் Read More »

அறியப்படாத நட்பு

2022ல் வெளியான Turn Every Page — The Adventures of Robert Caro and Robert Gottlieb என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். புலிட்சர் பரிசு பெற்ற எழுத்தாளர் ராபர்ட் காரோ மற்றும் அவரது எடிட்டர் ராபர்ட் காட்லீப்பிற்குமான ஐம்பது ஆண்டுகால நட்பை விவரிக்கிறது. படத்தை இயக்கியிருப்பவர் ராபர்ட் காட்லீப்பின் மகள் லிசி. இப்போது ராபர்ட் காரோவுக்கு வயது 86. காட்லீப்பிற்கு வயது 91 க்னாஃப் (Alfred A. Knopf )பதிப்பகத்தின் தலைமை பொறுப்பு வகித்த காட்லீப் …

அறியப்படாத நட்பு Read More »

இசையுலகின் நட்சத்திரம்.

டார் திரைப்படம் பெர்லின் இசைக்குழுவின் தலைமை இசை நடத்துநர் லிடியா டார் வாழ்க்கையை விவரிக்கிறது. இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஆனால் விருது பெறவில்லை. கிளாசிக்கல் இசையுலகில் நட்சத்திரமாகத் திகழும் லிடியா டாரின் நேர்காணலில் படம் துவங்குகிறது. புகழ்பெற்ற இசை நடத்துநர்களாக பெரிதும் ஆண்களே இருப்பது பற்றி கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு இசையில் அப்படியான பேதமில்லை என்று சொல்லிவிட்டுத் தன்னைப் போலப் பெண் இசை நடத்துநர்கள் நிறைய வந்துவிட்டார்கள் என்று தனது ஆதர்சங்களைச் சொல்கிறார். …

இசையுலகின் நட்சத்திரம். Read More »