இரண்டு முடிவுகள்
Between Two Dawns கடந்த ஆண்டு வெளியான துருக்கி திரைப்படம். இதன் இயக்குநர் செல்மன் நகார். இவரது முதல் படமிது. தொழிற்சாலையில் நடைபெற்ற விபத்துக் காரணமாக அதன் நிர்வாகியின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களையும் விபத்துக்குள்ளான தொழிலாளியின் குடும்ப நிலையினையும் மையமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறுகதை அளவேயுள்ள சம்பவம். ஆனால் அதனை நேர்த்தியாக, நுட்பமாகப் படம் விவரிக்கிறது. காதிர் அவரது சகோதரர் ஹலீல் அவர்களின் தந்தை இப்ராகிம் மூவரும் சாயமிடப்பட்ட துணிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நடத்திவருகிறார்கள். …









