சினிமா

ஒரு கனவிலிருந்து மறுகனவிற்கு.

மனிதர்கள் கனவைத் துரத்திச் செல்பவர்கள். எவ்வளவு நெருக்கடியிலும் அவர்கள் கனவுகளைக் கைவிடுவதில்லை. ஒரு கனவிலிருந்து இன்னொரு கனவிற்கு மாறிவிடுவார்களே அன்றிக் கனவுகளற்ற வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதுவும் இயற்கைக்கு மிக நெருக்கமாக. தனித்து வாழுகிறவர்கள் எதையும் துணிச்சலோடு சந்திக்கக் கூடியவர்கள். இடர்களை எதிர்கொண்டு வெல்லக்கூடியவர்கள். அப்படி ஒரு மனிதனின் கதையைத் தான் துருக்கியின் சிறந்த படமான COLD OF KALANDAR விவரிக்கிறது. முஸ்தபா காரா இயக்கிய படமிது. 1980 இல் பிறந்த முஸ்தபா காரா, கும்ஹுரியேட் …

ஒரு கனவிலிருந்து மறுகனவிற்கு. Read More »

வூடி ஆலனின் கேலி

ரஷ்ய இலக்கியங்களைக் கேலி செய்து வூடி ஆலன் இயக்கிய திரைப்படம் Love and Death. 19 ஆம் நூற்றாண்டின் ரஷ்ய நாவல்கள் மற்றும் சோவியத் திரைப்படங்களைப் பகடி செய்து இப் படத்தை உருவாக்கியிருக்கிறார். டால்ஸ்டாய் மற்றும் தஸ்தாயெவ்ஸ்கியை ஆழ்ந்து படித்த ஒருவரால் தான் இது போன்ற பகடியை உருவாக்க முடியும். குறிப்பாகக் கரமசோவ் சகோதரர்கள் மற்றும் லியோ டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் நாவலை இதை விடக் கேலி செய்ய முடியாது. அதிலும் நெப்போலியன் படையெடுப்பை war and …

வூடி ஆலனின் கேலி Read More »

பெயரில்லாத பெண்ணும் நினைவில்லாத ஆணும்

எகிப்திய திரைப்படமான “feathers” கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் பரிசை வென்றுள்ளது. இயக்குநர் ஓமர் எல் ஜோஹைரியின் முதல் படம். படம் துவங்கிய சில நிமிஷங்களிலே மலையாள இயக்குநர் ஜி.அரவிந்தன் இயக்கிய கும்மாட்டி படம் நினைவில் வந்து போனது. அதே போன்ற கதைக்களம். ஆனால் இப்படம் மையம் கொள்ளும் பிரச்சனைகளும் சித்தரிப்புகளும் வேறுவிதமானவை. ஜோஹைரி பெரும்பாலும் தொழில்முறை அல்லாத நடிகர்களைப் பயன்படுத்தியிருக்கிறார். அது தான் படத்தை மிகவும் யதார்த்தமாக உணரச் செய்கிறது. கமல் சாமியின் ஒளிப்பதிவு …

பெயரில்லாத பெண்ணும் நினைவில்லாத ஆணும் Read More »

தந்தையின் சிறகுகள்

1940ல் எழுதப்பட்ட ஆர்தர் மில்லரின் Death of a Salesman என்ற பிராட்வே நாடகம் அன்றைய சூழலுக்கு மட்டுமின்றி இன்றைக்கும் மிகப்பொருத்தமாகவே உள்ளது. ஆர்தர் மில்லர் இந்த நாடகத்திற்காகப் புலிட்சர் பரிசைப் பெற்றிருக்கிறார். இந்நாடகம் 29 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது A MAN IS MEASURED FAR MORE BY WHAT HE SELLS THAN BY WHAT HE DOES என்பதே படத்தின் மையக்கரு. தந்தைக்கும் மகனுக்குமான உறவுச்சிக்கலை, புரிதலை, எதிர்பார்ப்புகளைப் பேசும் இந்த நாடகம் இருவரது …

தந்தையின் சிறகுகள் Read More »

சாம்பல் முகங்கள்

ஆறுவயதான கர்ட் தனது அத்தை எலிசபெத்துடன் டிரெஸ்டனில் நடைபெறும் ஓவியக்கண்காட்சிக்குச் செல்வதுடன் NEVER LOOK AWAY படம் துவங்குகிறது. ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் ஃப்ளோரியன் ஹென்கெல் வான் டோனர்ஸ்மார்க் இயக்கியுள்ள படம் அந்தக் கண்காட்சி கர்ட்டிற்கு விநோதமாகயிருக்கிறது வருகை தந்துள்ள மனிதர்கள். சுவரில் மாட்டப்பட்டிருக்கும் விசித்திர ஓவியங்கள், புதிரான நவீன சிற்பங்கள். காவல்காக்கும் ராணுவத்தினர் என அந்த இடமும் மனிதர்களும் மிரட்சி கொள்ளச் செய்கின்றன ஆனால் எலிசபெத் கண்காட்சியில் இடம்பெற்ற புகழ்பெற்ற ஒவியங்களை ரசிக்கிறாள். அவளது …

சாம்பல் முகங்கள் Read More »

நிழல் சொல்லும் நிஜம்.

பள்ளி நாட்களில் The Count of Monte Cristo நாவலின் சுருக்கத்தை ஆங்கிலத் துணைப்பாடப் புத்தகத்தில் படித்திருக்கிறேன். பின்பு நாவலின் இரண்டு வேறுபட்ட திரைவடிவங்களைப் பார்த்திருக்கிறேன். சுவாரஸ்யமான கதை. 2002ல் வெளியான The Count of Monte Cristo படத்திலுள்ள மழைத்துளிகளுக்கு நடுவே வாள் வீசி பயிற்சி எடுக்கும் காட்சி மறக்கமுடியாதது. அலெக்சாண்டர் டூமா பிரான்சில் மட்டுமின்றி இந்தியாவிலும் விரும்பிப் படிக்கப்பட்டவர். இவரது The Three Musketeers நாவலுக்கு 50க்கும் மேற்பட்ட திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தழுவல்கள் …

நிழல் சொல்லும் நிஜம். Read More »

துப்பாக்கியிலிருந்து எழும் இசை

உலகப் புகழ் பெற்ற இசைக்கலைஞர் எனியோ மோரிகோன் பற்றி Ennio என்ற  ஆவணப்படத்தை இயக்குநர் குசாபே டொர்னடோர் இயக்கியுள்ளார். எனியோ மோரிகோன் 2020 இல் தனது 91வது வயதில் மறைந்தார். அவர் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். எனியோ மோரிகோன் என்றதும் வெஸ்டர்ன் திரைப்படங்களின் மறக்கமுடியாத இசை நினைவில் எழுகிறது. அதிலும் குறிப்பாக விசிலோடு கூடிய The Good the Bad and the Ugly – Main Theme மற்றும் Man with Harmonica – …

துப்பாக்கியிலிருந்து எழும் இசை Read More »

குகையில் ஒரு பெண்

ஈரானில் நடைபெறும் ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி இயக்குநர் ஜாபர் பனாஹிக்கு 20 ஆண்டுகாலம் திரைப்படம் இயக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 2019ல் வெளியான 3 Faces திரைப்படம் தடையை மீறி ரகசியமாக இயக்கப்பட்டதாகும். பனாஹியின் திரைப்படங்கள் சமகால ஈரானிய வாழ்வைத் துல்லியமாகப் பிரதிபலிக்கக் கூடியவை. அரசியல் ரீதியாகத் துணிச்சலான கருத்துகள் மற்றும் எதிர்ப்பினை முன்வைக்கக்கூடியவை திரைப்படம் எடுப்பதற்குப் பெரிய கதை தேவையில்லை. ஒற்றை நிகழ்வு போதும். அந்த நிகழ்வினை முன்பின்னாக ஆழ்ந்து அறிவதன் மூலம் சிறந்த திரைக்கதையை …

குகையில் ஒரு பெண் Read More »

எட்டு பற்களின் சிரிப்பு.

சீனாவைப் பற்றி அமெரிக்க ஊடகங்கள் பகிரும் செய்திகள். காட்சிகள் பெரிதும் எதிர்மறையான பிம்பத்தைத் தரக்கூடியது. இது போலவே சீன அரசு தன்னைப் பற்றியும் சீன மக்களின் வாழ்க்கை பற்றியும் பகிரும் காட்சிகளும் நம்பகத்தன்மையில்லாதவை. பிரச்சாரத்திற்காக உருவாக்கப்பட்டவை. உண்மையான சீனாவின் நிலை, பொருளாதார வளர்ச்சி மற்றும் பிரச்சனைகளை நேரடியாக அறிந்து சில ஆய்வாளர்கள். பத்திரிக்கையாளர்கள் புத்தகமாக எழுதியிருக்கிறார்கள். ஆவணப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள். அது போன்ற ஒரு ஆவணப்படமே Ascension (2021) ஜெசிகா கிங்டன் இயக்கிய இந்த ஆவணப்படம் இன்றைய சீனாவின் …

எட்டு பற்களின் சிரிப்பு. Read More »

நீண்ட தூர ஒட்டம்

சிலபடங்கள் அதன் தலைப்பிலே நம்மை வசீகரித்துவிடும். அப்படியொரு படம் தான். The Loneliness of the Long Distance Runner. 1962ல் வெளியான பிரிட்டிஷ் திரைப்படம். வடக்கு இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் வறுமையான குடும்பத்தில் வசிக்கும் காலின் ஸ்மித் என்ற இளைஞன் வாழ்வில் நடக்கும் சில நிகழ்வுகளை முன்பின்னாகப் படம் விவரிக்கிறது துவக்கக் காட்சியில் கிராமப்புற சாலையில் தனியாகக் காலின் ஸ்மித் ஒடிக் கொண்டிருக்கிறான். ஒட்டம் என்பது அவனது ரத்தத்தில் கலந்துவிட்ட பழக்கம், அதுவும் காவல்துறையிடமிருந்து தப்பியோடுவது என்பது …

நீண்ட தூர ஒட்டம் Read More »