சினிமா

அறிந்த தவறு

The Birdcatcher’s Son திரைப்படம் 2019ல் வெளியானது. 18ம் நூற்றாண்டில் ஃபாரோ தீவில் நடக்கும் கதையிது. இந்தத் தீவின் சட்டப்படி ஆண் வாரிசு இல்லாதவர் தங்கள் குத்தகை நிலம் மற்றும் வீட்டிற்கு உரிமை கொண்டாட முடியாது பறவைகளைப் பிடித்து விற்கும் எஸ்மர் குடியிருக்கும் வீடு மற்றும் நிலத்தை அதன் உரிமையாளர் காலி செய்யச் சொல்கிறார். அவனோ தன் மனைவி கர்ப்பிணியாக இருக்கிறாள். இந்த முறை நிச்சயம் தனக்கு ஆண் பிள்ளை பிறக்கும் ஆகவே நிலத்தின் குத்தகை அடுத்த …

அறிந்த தவறு Read More »

கற்பனைத் தோழி

ஹிட்லரின் நாஜி முகாமில் அடைக்கப்பட்டு இறந்துபோன யூதச்சிறுமி ஆனி ஃபிராங்க் எழுதிய டைரிக்குறிப்புகள் இனப்படுகொலையின் சாட்சியமாக விளங்குகிறது. இந்த நூல் தமிழ் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது ஜெர்மனியின் பிராங்பெர்ட் நகரத்தில் 1929ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி ஆனி ஃபிராங்க் பிறந்தார். யூதர்களை நாஜி ராணுவம் வேட்டையாடத் துவங்கிய போது அவர் தனது சகோதரி மார்க்ரெட், மற்றும் தாய் தந்தையருடன் ரகசிய நிலவறை ஒன்றில் ஒளிந்து வாழ்ந்தார். இரண்டு வருடங்களாக அவர்கள் ரகசிய இடத்தில் …

கற்பனைத் தோழி Read More »

நிகழ்வின் கிளைவழிகள்

Waru என்ற நியூசிலாந்து திரைப்படத்தைப் பார்த்தேன். வாரு என்ற பழங்குடியினச் சிறுவனின் மரணம் மற்றும் இறுதிச்சடங்கினையும் அது பழங்குடியினரிடம் ஏற்படுத்திய தாக்கத்தையும் முன்வைத்து உருவாக்கப்பட்ட கதைதொகுப்பாகும். ஒவ்வொரு பகுதியும் பத்து நிமிஷம் ஓடக்கூடியது. சிங்கிள் ஷாட்டாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பகுதியினையும் ஒரு மாவோரி பெண் இயக்குநர் இயக்கியிருக்கிறார். இந்தத் தொகுப்பிற்கான படப்பிடிப்பு காலை 9:59 மணிக்குத் தொடங்கி, ஒரே நாளில் படமாக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனை. சமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த Anthology இதுவே. ரோஷோமான் போல …

நிகழ்வின் கிளைவழிகள் Read More »

வெள்ளைக் கோட்டினைக் கடந்து.

தி ஸ்கார்லெட் அண்ட் தி பிளாக் 1983 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இதை இயக்கியவர் ஜெர்ரி லண்டன். 1943 இல், ரோம் நகரை நாஜி படைகள் ஆக்கிரமித்துக் கொண்ட போது ராணுவம். வாடிகன் நகரையும் போப்பின் அதிகாரத்தையும் தனது கட்டுக்குள் வைக்க முயன்றது படத்தின் துவக்கக் காட்சியிலே இரண்டு ராணுவ உயரதிகாரிகள் போப்பினை சந்தித்து வாடிகன் தங்கள் அதிகாரத்தில் தலையிடக் கூடாது. யாருக்கும் அடைக்கலம் கொடுப்பதோ, உதவி செய்வதோ கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார்கள். அத்துடன் …

வெள்ளைக் கோட்டினைக் கடந்து. Read More »

உளவு பார்க்கும் உலகில்

ஒரு நிகழ்வு துவங்கும் போது அது எப்படி முடியும் என்று யாராலும் கணித்துவிட முடியாது. இயல்பாக முடிந்துவிட்டால் அன்றாடச் செயலாகிவிடுகிறது. எதிர்பாராமல் முடிந்துவிட்டால் மறக்கமுடியாத அனுபவமாகிறது. சலூனுக்குச் சிகை அலங்காரம் செய்து கொள்ளச் சென்ற ஒரு பெண் மீள முடியாத பிரச்சனைக்குள் மாட்டிக் கொள்வது என்பது நாம் நினைத்துப் பார்க்க முடியாத விஷயம். அதுவும் நட்பாகப் பழகிய தோழியால் வஞ்சிக்கப்படுவதும், மிரட்டி சதிவேலையில் ஈடுபடச்செய்வதும் அதிர்ச்சியான விஷயங்கள். அதைத் தான் Huda’s Salon விவரிக்கிறது. ஹானி அபு-ஆசாத் …

உளவு பார்க்கும் உலகில் Read More »

பச்சை வாசனை

Yellow Flowers on the Green Grass என்ற வியட்நாமிய படத்தைப் பார்த்தேன். 2015ல் வெளியான இப்படத்தை இயக்கியுள்ளவர் Victor Vũ. இரண்டு சிறார்களின் வாழ்க்கையை விவரிக்கும் இப்படம் பால்ய வயதின் கொண்டாட்டங்களை, பயத்தை, இழப்புகளை அழகாகப் பதிவு செய்திருக்கிறது 1980 களின் மத்திய வியட்நாமில் கதை நடக்கிறது. 12 வயது தியூ, 7 வயதான அவனது தம்பி துவாங் இருவரையும் மையமாகக் கொண்ட கதை. சின்னஞ்சிறிய கிராமம். சுற்றிலும் பசுமையான வயல்கள். தூரத்து மலை. வண்ணத்துப்பூச்சிகள் …

பச்சை வாசனை Read More »

பிரிவின் சொற்கள்

The Letter Room என்ற முப்பது நிமிஷம் ஓடக்கூடிய குறும்படம் ஒன்றைப் பார்த்தேன். சிறைக் கைதிகளுக்கு வரும் கடிதங்களைத் தணிக்கை செய்து ஒப்படைக்கும் அதிகாரியின் கதை. தனிமையில் வாழும் சிறை அதிகாரி ரிச்சர்ட் இரக்க குணம் கொண்டவர். சிறைக்கைதிகளிடம் அன்பாக நடந்து கொள்கிறார். இவரைத் தகவல் தொடர்பு இயக்குநராகப் பதவி உயர்வு கொடுத்து நியமிக்கிறார்கள். தனது புதிய வேலையில் கைதிகளுக்கு வரும் கடிதங்களைப் படித்துத் தணிக்கை செய்கிறார். சிறைக்கோப்பிற்காக இந்தக் கடிதங்களை ஸ்கேன் செய்து வைப்பதும் அவரது …

பிரிவின் சொற்கள் Read More »

தன்னை மறந்தவள்

எமி பிரஸ்டன் நடுத்தர வயது பெண். அவளது கணவர் ஜிம் ஒரு டிம்பர் நிறுவனத்தில் வேலை செய்கிறார். திருமணமாகி இருபது ஆண்டுகள் சந்தோஷமான வாழ்க்கையைத் தொடர்கிறாள். பதின்வயதிலுள்ள மகன் பிரைன் பேச்சுப் போட்டியில் ஆர்வம் கொண்டவன். அவர்கள் லண்டனின் சிறிய குடியிருப்பு ஒன்றில் வசிக்கிறார்கள். ஐம்பதுகளில் கதை நடக்கிறது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் படம் துவங்குகிறது. எமி பிரஸ்டனுக்கு வானொலியில் இசை கேட்பது பிடித்தமானது. சமையலறையில் உணவு தயாரித்தபடியே சங்கீதம் கேட்கிறாள். வேறு பக்கம் கவனம் திரும்பவே …

தன்னை மறந்தவள் Read More »

சாப்ளினின் பயணங்கள்

Chaplin in Bali என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். 2017ல் வெளியானது. ரஃபேல் மில்லட் இயக்கியுள்ளார். மௌனப்படங்களின் யுகம் முடிந்து பேசும் படங்கள் வரத்துவங்கிய போது சார்லி சாப்ளின் தனது இடம் பறிபோனது போலவே உணர்ந்தார். பேசும் படத்திற்கு ஏற்ப எப்படித் தனது நடிப்பை மாற்றிக் கொள்வது, தனது குரலை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டது. அத்துடன் திருமண உறவில் ஏற்பட்ட சிக்கல். விவாகரத்து. பத்திரிக்கையாளர்களுடன் ஏற்பட்ட மோதல் எனத் தொடர்ந்து பிரச்சனைகளால் சூழப்பட்டிருந்தார். …

சாப்ளினின் பயணங்கள் Read More »

மூன்று மௌனங்கள்

இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள CODA என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். Sian Heder என்ற பெண் இயக்குநர் இயக்கியுள்ளார். CODA என்றால் காது கேளாத பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தை என்று பொருளாம். (child of deaf adults) இப்படத்தின் கதாநாயகி ரூபி அப்படியான இளம்பெண். அவளைச் சுற்றியே கதை நிகழுகிறது. ரூபியின் அப்பா, அம்மா, அண்ணன் என மூவரும் காது கேளாதவர்கள். ரூபியின் அப்பா ஒரு மீனவர். தலைமுறையாக அவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு …

மூன்று மௌனங்கள் Read More »