சினிமா

நினைவுகளின் வழியே

டிசம்பர் 1943 இல் நாஜி ராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட “கலாவ்ரிட்டா படுகொலை” எனப்படும் கிரேக்கப் படுகொலை நிகழ்வினை மையமாக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் Echoes of the Past. 2021ல் வெளியான இப்படம் கற்பனையான சித்தரிப்புகளுடன் இந்த உண்மை சம்பவத்தை விவரிக்கிறது. படத்தின் துவக்கக் காட்சியில் கலாவ்ரிட்டா படுகொலை நிகழ்விற்கான இழப்பீடு கேட்டு சட்டப்பூர்வமான நடவடிக்கையை இன்றைய கிரேக்க அரசாங்கம் துவங்குகிறது. அன்றிருந்த ஜெர்மன் இப்போது இல்லை. இது புதிய நாடு. புதிய அரசு ஆகவே நாஜி ராணுவத்தின் …

நினைவுகளின் வழியே Read More »

கற்பனைக் குமிழிகள்

சில படங்கள் முதல் காட்சியிலே நம்மை உள்ளிழுத்துக் கொண்டுவிடக்கூடியவை. அப்படியான ஒரு திரைப்படம் தான் Asino vola.( DONKEY FLIES) 2015ல் வெளியான இத்தாலியத் திரைப்படம். மொரிசியோ என்ற இசைக்கலைஞரின் பால்ய நினைவுகளை விவரிக்கும் இப்படத்தின் முதற்காட்சியில் இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக மொரிசியோ செல்லும் போது அவர் கூடவே ஒரு கோழியும் செல்கிறது. அவருடன் அந்தக் கோழி பேசுகிறது. அவருக்காக ஒரு முட்டையைத் தருகிறது. மொரிசியோவும் அந்தக் கோழியுடன் உரையாடுகிறார். அதன் முன்னே இசை நிகழ்த்துகிறார். அந்தக் …

கற்பனைக் குமிழிகள் Read More »

நகரம் அழைக்கிறது

Empty Eyes 1953ல் வெளியான இத்தாலியத் திரைப்படம் காஸ்டெலூசியோவில் வசிக்கும் இளம் பெண் செலஸ்டினா பேருந்தைப் பிடிப்பதற்காக ஓடிவருவதில் படம் துவங்குகிறது. அப்பா அம்மா இல்லாத செலஸ்டினா கிராமப்புறத்திலிருந்து ரோம் நோக்கிச் செல்கிறாள். அவளை வழியனுப்ப வந்துள்ள சகோதரர்கள் தைரியம் சொல்லி பேருந்தில் ஏற்றிவிடுகிறார்கள். முதன்முறையாக வீட்டை விட்டு தனியே பயணம் செய்கிறோம் என்ற பயம். இனி ஊர் திரும்பி வரமுடியாதோ என்ற குழப்பம் எனப் பேருந்தினுள்ளும் அவள் அழுகிறாள். பேருந்தின் ஒட்டுநர் அவளிடம் விசாரிக்கிறார். வீட்டு …

நகரம் அழைக்கிறது Read More »

மறக்க முடியாத நாள்

இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டுகள் போடப்பட்டதைத் தொடர்ந்து, நிபந்தனையற்ற சரணடைவதற்கான ஒப்பந்தத்தில் ஜப்பான் கையெழுத்திட்டது. இந்தச் சரணடையும் முடிவிற்குப் பின்னால் என்ன நடந்தது என்பதை மிக விரிவாக Japan’s Longest Day என்ற திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள். 1967 ல் வெளியான திரைப்படமிது. யுத்த திரைப்படங்களில் இப்படம் தனித்துவமானது. போட்ஸ்டாம் பிரகடனம் எனும் ஜப்பான் சரணடைதலுக்கான விதிமுறைகளை வரையறுக்கும் பிரகடனத்தை . ஜூலை 26, 1945 இல், அமெரிக்க ஜனாதிபதி ஹாரி எஸ். ட்ரூமன், …

மறக்க முடியாத நாள் Read More »

நாம் அறியாத உலகம்

சந்தையில் விற்கப்படும் காய்கறிகள், பழங்களை யார் மொத்தமாகக் கொள்முதல் செய்வது. யார் விநியோகம் செய்வது, விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதன் பின்னாள் ஒரு சிண்டிகேட் செயல்படுகிறது. அவர்களை மீறி எவரும் தக்காளியோ, வெங்காயமோ வாழைப்பழங்களோ நேரடியாக வாங்கி விற்பனை செய்துவிட முடியாது. அந்தச் சிண்டிகேட் உறுப்பினர்கள் விவசாயிகள் எப்போது அறுவடை செய்யவேண்டும். யாரிடம் விற்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். அவர்கள் நினைத்தால் காய்கறிகள் பழங்கள் எதுவும் கிடைக்காமல் நகரை ஸ்தம்பிக்கச் செய்துவிட முடியும். விவசாயிகள் …

நாம் அறியாத உலகம் Read More »

தப்பிச் செல்லும் பயணம்

நார்த் வெஸ்ட் ஃபிரான்டியர் 1959 ஆம் ஆண்டு வெளியான ஆங்கிலத் திரைப்படம். Flame over India என்ற தலைப்பிலும் இப்படம் வெளியாகியிருக்கிறது இந்தியாவைக் கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. வழக்கமான ஆங்கிலப் படங்களைப் போலவே இந்தியாவைப் புரிந்து கொள்ளாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பெருமை பேசும் மற்றொரு படம். சினிமாஸ்கோப்பில் உருவாக்கியுள்ள இந்தப் படம் ஒரு நீண்ட ரயில் பயணத்தினை விவரிக்கிறது. தப்பிச் செல்லும் இந்த ரயில் பயணத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் தாக்குதல்களும் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. ரயில் கடந்து செல்லும் …

தப்பிச் செல்லும் பயணம் Read More »

வகுப்பறையில் ஒரு யாக்

Lunana: A Yak in the Classroom என்ற பூட்டானிய திரைப்படத்தைப் பாவோ சோய்னிங் டோர்ஜி இயக்கியிருக்கிறார். பூட்டானில் மிகக் குறைவான திரைப்படங்களே உருவாக்கப்படுகின்றன. The Cup என்ற Khyentse Norbu இயக்கி 1999ல் வெளியான பூட்டானிய படம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. அவரது உதவியாளரான பாவோ இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படமும் பன்னாட்டு விருதுகளைப் பெற்றிருக்கிறது. லுனானா பூட்டானின் தொலைதூர மலைக்கிராமம். 56 பேர் மட்டுமே அங்கே வசிக்கிறார்கள். அந்த இடத்திற்குச் சென்று சேர இரவு …

வகுப்பறையில் ஒரு யாக் Read More »

இயற்கையின் காதலன்

In Search of Walt Whitman என்ற அமெரிக்க கவிஞர் வால்டர் விட்மன் பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்தேன். அமெரிக்காவின் நிகரற்ற கவிஞரான வால்ட் விட்மன் 1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். சிறு வயதில் அச்சகத்தில் பணியாற்றிய விட்மன் பல்வேறு நாளிதழ்களில் கட்டுரைகள். செய்திக்குறிப்புகள் எழுதியிருக்கிறார்., பதினேழு வயதில் பள்ளி ஆசிரியராக வேலை செய்திருக்கிறார். 27 ஆவது வயதில் புரூக்லின் செய்தி …

இயற்கையின் காதலன் Read More »

வெறும் வலை

மால்டாவிலுள்ள மீனவர்களின் வாழ்க்கையை விவரிக்கும் “Luzzu” படத்தை இயக்கியுள்ளார் அலெக்ஸ் காமிலேரி. இயக்குநரின் முதற்படமிது தலைமுறையாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜெஸ்மார்க்கின் வழியே கதை சொல்லப்படுகிறது. அவன் வைத்துள்ள நாட்டுப்படகு அவனது தாத்தாவிற்குச் சொந்தமானது. நவீன இயந்திர படகுகளும் புதிய கடல் விதிமுறைகளும் வந்தபிறகு மீன்பிடி தொழிலில் கள்ளச்சந்தை உருவாகிவிட்டது. அது ஜெஸ்மார்க்கிற்குப் பிடிக்கவில்லை. மேலும் படகுகள் அதிகாரிகளால் சீரற்ற முறையில் சோதனை செய்யப்படுகின்றன. அதிகாரிகள் மிரட்டி லஞ்சம் பெறுகிறார்கள். உள்ளூர் மீன் ஏலத்தினைச் சிலர் …

வெறும் வலை Read More »

குற்றவுணர்வின் பாதை மிக நீண்டது.

ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முரகாமியின் Men Without Women சிறுகதைத் தொகுப்பிலுள்ளது Drive My Car சிறுகதை. இந்தச் சிறுகதையை மையமாகக் கொண்டு ரியுசுகே ஹமாகுச்சி இயக்கியுள்ள திரைப்படம் கான்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்றுள்ளதோடு தற்போது ஆஸ்கார் பரிந்துரை பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது படம் பார்ப்பதற்கு முன்பு நீங்கள் சிறுகதையைப் படித்திருந்தால் படத்தின் திரைக்கதை எவ்வளவு அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். முரகாமியின் நாவல்கள் இதற்கு முன்னதாகப் படமாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை …

குற்றவுணர்வின் பாதை மிக நீண்டது. Read More »