சினிமா

கற்பனை நாளிதழ் – விசித்திர மனிதர்கள்.

வெஸ் ஆண்டர்சன் எழுதி, இயக்கியுள்ள ஃபிரெஞ்ச் டிஸ்பாட்ச் திரைப்படம் சினிமாவின் அனைத்து சாத்தியங்களையும் பயன்படுத்திப் புதியதொரு அனுபவத்தைத் தருகிறது. உண்மையில் சினிமாவின் அடுத்த கட்டம் இதுவென்பேன். ஆண்டர்சனின் திரைமொழி ஒன்றுக்குள் ஒன்றாக விரியும் சிறார் கதைப்புத்தகங்களை நினைவூட்டக்கூடியது. அவருடைய பெரும்பாலான காட்சிகள் விசித்திர கதைகளைக் கொண்ட புத்தகத்தைப் படிப்பது போன்ற உணர்ச்சியைத் தரக்கூடியது. நடிகர்களின் விசித்திரமான தோற்றம் மற்றும் வெளிப்பாடு, அடர் வண்ணங்களைப் பயன்படுத்துவது, துள்ளலான இசை, வியப்பூட்டும் அரங்க அமைப்புகள். இவை அவரது படங்களின் விசேச …

கற்பனை நாளிதழ் – விசித்திர மனிதர்கள். Read More »

ரகசியத்தின் பாதையில்

Souad என்ற எகிப்திய படத்தைப் பெண் இயக்குநரான அய்டன் அமீன் இயக்கியுள்ளார். 2021ல் வெளியான இப்படம் ஆஸ்கார் விருதுக்கான அயல்மொழி பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது பேஸ்புக், டிக்டாக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு இளந்தலைமுறையினருக்கென ஒரு ரகசிய வாழ்க்கை உருவாகியிருக்கிறது. ஆன்லைன் வழியாகக் காதல் கொள்வதும் அதில் ஏற்படும் சிக்கல்களும் முந்தைய தலைமுறை அறியாத விஷயம். டீனேஜர்கள் இணையவெளியில் எவருடன் நட்பாக இருக்கிறார்கள். யாருடன் சாட் செய்கிறார்கள். எந்த வீடியோவை, புகைப்படத்தை ரசிக்கிறார்கள். …

ரகசியத்தின் பாதையில் Read More »

உதிர்ந்த கனவுகள்

A Fortunate Man என்ற டேனிஷ் திரைப்படத்தைப் பார்த்தேன். வெளியான படம். பில்லி ஆகஸ்ட் இயக்கியிருக்கிறார் கதை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடக்கிறது. தீவிரமான மதப்பற்றுள்ள குடும்பம் ஒன்றில் பிறந்த பீட்டர் தந்தையைப் போல மதகுருவாக விரும்பாமல் பல்கலைக்கழகத்தில் சென்று பொறியியல் படிக்க விரும்புகிறான். இதை அவனது தந்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிடிவாதமாக வீட்டை விட்டுப்புறப்படும் மகனுக்கு ஒரு பாக்கெட் கடிகாரத்தைப் பரிசாகத் தருகிறார் தந்தை. அந்தக் கடிகாரம் அவன் தவறான பாதையில் செல்வதை …

உதிர்ந்த கனவுகள் Read More »

பள்ளத்தாக்கின் பேரழகு

பள்ளி வயதில் மெக்கனாஸ் கோல்ட் திரைப்படத்தைப் பார்த்தபோது தங்கம் தேடும் சாகசக்காரர்களின் கதையை விடவும் அவர்கள் குதிரையில் செல்லும் கிராண்ட் கேன்யன் பள்ளத்தாக்கின் பேரழகு என்னை அதிகம் வசீகரித்தது. இயக்குநர் ஜான் ஃபோர்டு இந்தப் பள்ளத்தாக்கினை மறக்கமுடியாத காட்சிகளாகத் தனது திரைப்படங்களில் பதிவு செய்திருக்கிறார். கௌபாய் படங்கள் என்றதும் மனதில் இந்த நிலக்காட்சி தான் ஒளிருகிறது. அமெரிக்காவின் அரிசோனா பகுதியிலுள்ள கிராண்ட் கேன்யன் மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு. பூர்வ குடி இந்தியர்கள் வாழ்ந்து வரும் இந்த நிலப்பரப்பினைக் …

பள்ளத்தாக்கின் பேரழகு Read More »

குற்றவுணர்வின் மூன்று கிளைவழிகள்

A TALE OF THREE SISTERS என்ற துருக்கிப் படத்தைப் பார்த்தேன். 2019ம் ஆண்டு வெளியானது. சமீபத்தில் நான் பார்த்த படங்களில் மிகச்சிறப்பான ஒளிப்பதிவு கொண்ட படமிது. துருக்கியின் புகழ்பெற்ற இயக்குநரான நூரி பில்கே சிலானின் படங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நிலக்காட்சிகளை தேர்ந்த ஓவியரைப் போலக் கையாளக்கூடியவர். ஆன்டன் செகாவின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். அவரது கதைகளிலிருந்தே தனது படத்திற்கான மையக்கருவை உருவாக்குகிறவர். சிலானின் படங்களில் ஒளிப்பதிவு அபாரமாகயிருக்கும். குறிப்பாக இரவுக்காட்சிகளைக் குறைந்த …

குற்றவுணர்வின் மூன்று கிளைவழிகள் Read More »

பனியில் மறையாத காலடிகள்.

ஜான் ஃபோர்டின் புகழ்பெற்ற திரைப்படமான தி சர்ச்சர்ஸ் பாதிப்பில் அதே கதையினைத் துருவப்பகுதியில் நடப்பதாகப் புதிய திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். Maliglutit (searchers) எனும் இப்படத்தை இயக்கியவர் சகரியாஸ் குனுக். 2016ல் வெளியாகியிருக்கிறது. உலகின் முதற்குடிமக்கள் என்று அழைக்கப்படும் இனூட் பூர்வகுடிகள் துருவப்பகுதியில் வாழுகிறார்கள். உறைபனிப் பிரதேசத்தில் வசிக்கும் இவர்கள் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டவர்கள். உறைபனியில் பயணம் செய்வதற்கு நாய்களால் இழுக்கப்படும் வண்டியைப் பயன்படுத்துகிறார்கள். இப்படம் இனூட் குழுக்களுக்குள் உள்ள சண்டை, மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை, உணவு …

பனியில் மறையாத காலடிகள். Read More »

அர்த்தமற்ற விசாரணை

உருது எழுத்தாளர் இஸ்மத் சுக்தாயின் வாழ்க்கையினையும் அவரது புகழ்பெற்ற லிஹாஃப் சிறுகதையினையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது லிஹாஃப் திரைப்படம். இதை இயக்கியவர் ரஹத் ஹஸ்மி. சர்ச்சைக்குரிய இந்தக் கதையை ஆபாசம் எனக் கருதி இஸ்மத் மீது நீதிமன்ற வழக்குத் தொடரப்பட்டது. இதற்காக அவர் லாஹுர் நீதிமன்றத்திற்குச் சென்று வந்தார். சதத் ஹசன் மண்டோ மீதும் இது போன்ற ஆபாச வழக்குத் தொடரப்பட்ட காரணத்தால் அவர்கள் இணைந்து லாஹுர் சென்று வந்தார்கள். இந்தப் படம் இஸ்மத் வீட்டிற்குப் போலீஸ் வருவதில் …

அர்த்தமற்ற விசாரணை Read More »

நூற்றாண்டின் நினைவுகள்

Around India with a Movie Camera என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன் பிரிட்டனின் BFI தேசிய ஆவணக் காப்பகத்திலுள்ள இந்தியா பற்றிய ஆவணப்படங்களிலிருந்து 72 நிமிஷங்கள் ஓடக்கூடிய இந்தத் தொகுப்பினை உருவாக்கியிருக்கிறார் சந்தியா சூரி. 1899ல் இந்தியாவில் படமாக்கப்பட்ட காட்சிகளில் துவங்கி 1947 வரையிலான பல்வேறு வகைக் காட்சிப்பதிவுகளைத் தேடிச்சேகரித்து ஒன்றிணைத்திருக்கிறார் இந்த ஆவணப்படத்தின் மூலம் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் எப்படி வாழ்ந்தார்கள். அன்றைய மகாராஜாக்கள் மற்றும் வைஸ்ராய்களின் ஆடம்பர வாழ்க்கை. இசை மற்றும் நடனக்கலைஞர்களின் உலகம். புலி …

நூற்றாண்டின் நினைவுகள் Read More »

36 புகைப்படங்கள்

The Last Roll Of Kodachrome என்ற ஆவணப்படம் பிரபல புகைப்படக்கலைஞரான ‘ஸ்டீவ் மெக்குரி’ கடைசிக் கோடக்குரோம் படச்சுருளைப் பயன்படுத்தி 36 புகைப்படங்களை எடுப்பதை ஆவணப்படுத்தியிருக்கிறது படச்சுருள் தயாரிப்பில் கோடக் நிறுவனம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது. டிஜிட்டில் கேமிரா வந்தபிறகு படச்சுருளின் தேவை வெகுவாகக் குறைந்து போனதால் அந்நிறுவனம் தனது படச்சுருள் தயாரிப்பை 2009 ஜுன் 22ல் கைவிட்டது. கடைசியாக இருந்த ஒரு படச்சுருளை ஸ்டீவ் மெக்குரியிடம் கொடுத்து அவர் விரும்பும் புகைப்படங்களை எடுத்துக் கொள்ளச் சொன்னது …

36 புகைப்படங்கள் Read More »

மாயநிலத்தில் அலைவுறும் நிழல்

.அமெரிக்காவின் கொலராடோ பகுதியுள்ள Monument Valley க்குப் படப்பிடிப்பு ஒன்றுக்காகச் சென்ற எனது நண்பர் அங்கே இயக்குநர் ஜான் ஃபோர்டின் ஆவி இன்றும் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஒருவேளை இப்போதும் படம் எடுத்துக் கொண்டிருக்கிறதோ என்னவோ என்று சொன்னார். அவர் சொன்னது முற்றிலும் உண்மை, இந்தப் பள்ளத்தாக்கினை ஜான் ஃபோர்டு போல யாரும் படமாக்கியிருக்க முடியாது. இன்று அந்தப் பள்ளத்தாக்கு அவரது நினைவுச்சின்னமாகவே குறிப்பிடப்படுகிறது. அமெரிக்கச் சினிமாவின் நிகரற்ற இயக்குநர் ஜான் ஃபோர்டு. சென்ற லாக்டவுன் நாட்களில் தொடர்ச்சியாக …

மாயநிலத்தில் அலைவுறும் நிழல் Read More »