சினிமா

தங்கல்

அமீர்கான் நடித்துள்ள தங்கல் படத்தை நேற்று பார்த்தேன். இந்திய சினிமாவில் அமீர்கான் அளவிற்கு அர்ப்பணிப்புடன் புதிய கதைகளன்களைத் தேர்வு செய்து நடிக்கும் நடிகர்கள் குறைவு. இப்படத்தில் அவரது இன்னொரு பரிமாணத்தைக் காணமுடிகிறது. விளையாட்டுச் சார்ந்த படங்களில் கதாநாயகன் அல்லது நாயகி தான் பிரதானமாக இருப்பாள். ஆனால் இதில் அமீர்கான் மையக்கதாபாத்திரம் மட்டுமே. அவர் மல்யுத்தப்போட்டியில் தனது இரண்டு மகள்களை ஈடுபடச்செய்வதும் அவர்கள் வெற்றியின் படிக்கட்டுகளில் ஏறி உச்சத்தை அடைவதுமே கதை. இளம் மல்யுத்த வீரராகவும், ஒரு அப்பாவாகவும், …

தங்கல் Read More »

கிரீடம் இல்லாத அரசன்

1957ல் சார்லி சாப்ளின் எழுதி இயக்கிய A King in New York திரைப்படம் 1973 வரை அமெரிக்காவில் வெளியாகவில்லை. சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் எனக் குற்றம் சாட்டி அமெரிக்க அரசு அவர் மீது விசாரணை மேற்கொண்டது. இதனால் அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறினார். சாப்ளின் இயக்கிய The Great Dictator படத்தை விடவும் நேரடியாக அரசியல் பேசும்படமிது. இதுவே சாப்ளின் கதாநாயகனாக நடித்த கடைசிப்படம். அமெரிக்காவில் கம்யூனிஸ்டுகளாகக் கருதப்பட்டவர்கள், சந்தேகிக்கப்பட்டவர்கள் தேசத்திற்கு எதிராகச் செயல்படுகிறார்கள் எனக் குற்றம்சாட்டி …

கிரீடம் இல்லாத அரசன் Read More »

மணற்புயலுக்குள் இரண்டு பிக்குகள்

பௌத்தம் தொடர்பான திரைப்படங்களைத் தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  அதில் NFDC தயாரித்த Trishagni என்ற ஹிந்திப்படம் கிடைத்தது. நேற்றிரவு அதைப் பார்த்தேன். 1988ல் வெளியான இப்படத்தை நடிகரும் எழுத்தாளருமான Nabendu Ghosh இப்படத்தை இயக்கியுள்ளார். தேசிய விருது பெற்றுள்ளது இப்படம் வங்காள எழுத்தாளர் Sharadindu Bandyopadhyayவின் சிறுகதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கபட்டுள்ளது. Trishagni என்பதற்கு மணற்புயல் என்று அர்த்தம். கிமு 200ல் பாலைவன பிரதேசத்திலுள்ள சாரிபுத் என்ற நகரில் இக்கதை நடக்கிறது. அங்கு புகழ்பெற்ற பௌத்த …

மணற்புயலுக்குள் இரண்டு பிக்குகள் Read More »

மூன்று நண்பர்கள்

புகழ்பெற்ற ஸ்பானிய திரைப்பட இயக்குனர் Carlos Saura. இவரது இயக்கத்தில் 2001ம் ஆண்டு வெளியான BUÑUEL AND KING SOLOMON’S TABLE என்ற படத்தை இரண்டு நாட்களுக்கு முன்பாகப் பார்த்தேன். இப்படம் பிரபல இயக்குனர் லூயி புனுவலைப்(Luis Buñuel) பற்றியது. குறிப்பாக ஒவியர் டாலி, கவிஞர் லோர்க்காவோடு அவருக்கிருந்த நட்பைப்பற்றியது. மூவரும் நெருக்கமான நண்பர்களாகப் பழகினார்கள், சில ஆண்டுகள் மேட்ரிட்டில் ஒரே அறையில் ஒன்றாக வசித்தார்கள். புனுவலின் வாரிசு எனக் கொண்டாடப்படும் கார்லோஸ் சுரா இப்படத்தை ஒரு …

மூன்று நண்பர்கள் Read More »

முடிவற்ற விசாரணை

ஒரு சிறிய அறை. நான்கே முக்கியக் கதாபாத்திரங்கள். யூத சமயசட்டப்படி விசாரணை செய்யும் மூன்று நீதிபதிகள். இவர்களுக்குள் நடக்கும் வாதப்பிரதிவாதங்களை முன்வைத்து 115 நிமிஷங்கள் பரபரப்பாகச் செல்லும் திரைக்கதை. Gett: The Trial of Viviane Amsalem என்ற 2014ல் வெளியான இஸ்ரேல் பிரெஞ்சு கூட்டுதயாரிப்பில் உருவான படத்தைப் பார்த்து முடிக்கும் போது அதிர்ந்து போய்விடுகிறோம். விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் ஒரு யூதப்பெண் படும் பாடு தான் படத்தின் மையக்கதை. யூதச்சட்டப்படி ஒரு பெண் விவகாரத்து பெற …

முடிவற்ற விசாரணை Read More »

ஊரும் உறவும்

திதி என்ற கன்னடப்படத்தைப் பார்த்தேன். சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற பிரக்ஞையே உருவாகவில்லை. மாறாக ஒரு கிராமத்தில் நம் கண்முன்னே எல்லாச் சம்பவங்களும் நடப்பதாகவே இருந்தது. ஆவணப்படத்தைக் கூட இவ்வளவு துல்லியமாக எடுக்க முடியுமா என்பது சந்தேகமே. நடித்திருப்பவர்கள் அத்தனை பேரும் கிராமத்து மனிதர்கள். வெகு யதார்த்தமாகப் படமாக்கபட்டிருக்கிறது. இவ்வளவு நிஜமாக ஒரு படத்தை உருவாக்கிவிட முடியும் என்பது சாதனையே. இதனாலே Locarno International Film Festival லில் இரண்டு முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளது. படத்தின் இயக்குனர் …

ஊரும் உறவும் Read More »

கண்காணிப்பின் வலை.

நேற்று Eye in the Sky என்ற பிரிட்டீஷ் திரில்லரைப் பார்த்தேன். நைரோபியில் ஒரு வீட்டில் தீவிரவாதிகள் ஒளிந்துள்ளதாகப் பிரிட்டீஷ் ராணுவம் அடையாளம் காணுகிறது. அவர்கள் தற்கொலைப்படையினர் என்பதால் வான்வழிதாக்குதல் மூலம் அவர்களின் இருப்பிடத்தை அழிக்க முற்படுகிறார்கள். இதற்கான விண்ணிலிருந்து அந்த வீடு கண்காணிக்கபடுகிறது. தீவிரவாதிகளை ஒழிப்பது கூட்டு நடவடிக்கை என்பதால் இங்கிலாந்துடன் அமெரிக்காவும் இணைந்து பணியாற்றுகிறது. தீவிரவாதிகளின் இருப்பிடத்திற்குள் சிறிய வண்டு போல ரகசிய கேமிரா பறந்து போய் அவர்களைப் படம்பிடிக்கிறது. வான்தாக்குதல் நிகழ்த்தப்படும் நேரத்தில் …

கண்காணிப்பின் வலை. Read More »

இமயத்தின் மணியோசை.

இந்தியாவைக் கதைக்களமாகக் கொண்ட ஆங்கிலப்படம் BLACK NARCISSUS, 1947ல் வெளியானது. மைக்கேல் போவல் இயக்கியுள்ளார். சிறந்த கலையமைப்பு. ஒளிப்பதிவு என இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்றுள்ள இப்படத்தைச் சமீபத்தில் பார்த்தேன். இமயமலையின் மோபு என்ற இடத்தில் கன்னியர் மடம் ஒன்றை உருவாக்க முயலும் கன்னியாஸ்திரிகளின் கதையே பிளாக் நார்சிசஸ். இளவரசன் திலீப் ராய் பயன்படுத்தும் வாசனைத்திரவியத்தின் பெயரது. மையக்கதையின் குறியீடாகவே அந்த வாசனை திரவியம் அடையாளப்படுத்தபடுகிறது. இளமையின் அடையாளமாக உள்ள அந்த வாசனைதிரவியத்தின் மணத்தைக் கன்னியாஸ்திரிகள் விரும்புகிறார்கள். …

இமயத்தின் மணியோசை. Read More »

பெண்ணால் முடியும்.

இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கோவிந்த நிகாலனி இயக்கிய Sanshodhan என்ற ஹிந்திப்படத்தைப் பார்த்தேன். NFDC & UNICEF இணைந்து தயாரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பின்தங்கிய கிராமம் ஒன்றில் வித்யா என்ற இளம்பெண் தேர்தலில் போட்டியிட்டு பஞ்சாயத்து உறுப்பினராகிச் சந்திக்கும் பிரச்சனைகளை மிக நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார் நிகாலனி. செய்திதுறையின் விளம்பரப் படம் போல நிறையக் காட்சிகள் பஞ்சாயத்து ராஜ் சட்டம் மற்றும் மகளிர் பங்கெடுப்பு பற்றிய விளக்கமாக இருந்த போதும் ராஜஸ்தானிய கிராமிய வாழ்க்கையைக் காட்சிபடுத்தியதிலும் கல்விக்காகக் …

பெண்ணால் முடியும். Read More »

திருலோக சீதாராம்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா நாவலைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர் திருலோக சீதாராம். சிறப்பான மொழியர்ப்பு. 1962 ஆகஸ்ட் 9ம் தேதியன்று ஹெஸ்ஸே காலமான செய்தியை ரேடியோவில் கேள்விபட்ட திருலோகம் தனது உறவினர்களில் ஒருவர் இறந்து போனது போலப் பதறிப்போயிருக்கிறார் அதைக்கண்ட மனைவி யாரு இறந்து போனது எனக்கேட்டதற்கு, என் சொந்தம். உனக்கு இதுல தீட்டு இல்லை என்று சொல்லிவிட்டு ஹெஸ்ஸேயிற்க்காக தான் தீட்டு காக்கவில்லை என்றாலும் உடனே ஒரு முழுக்கு போட …

திருலோக சீதாராம் Read More »