சினிமா

கவிதையின் நாயகி

The heart asks pleasure first and then excuse from pain. – Emily Dickinson அமெரிக்கக் கவிஞர் எமிலி டிக்கின்சன் பற்றி A Quiet Passion திரைப்படத்தினைப் பார்த்தேன். படத்தின் ஒரு காட்சியில் பாதிரியார் எமிலியின் வீட்டிற்கு வந்து பிரார்த்தனை நடத்துகிறார். எமிலியின் தந்தையும் சகோதரியும் தாயும் மண்டியிட்டு பிரார்த்தனைக்குத் தயார் ஆகும் போது  எமிலி மட்டும் மண்டியிட்டு பிரார்த்திக்க விரும்பவில்லை என மறுக்கிறார். கடவுளிடம் உன் பாவங்களுக்காக மண்டியிட வேண்டியதில்லையா எனப் பாதிரியார் …

கவிதையின் நாயகி Read More »

நெருதா துரத்தப்படுகிறார்

நோபல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெருதா குறித்து வெளியாகியுள்ள புதிய திரைப்படம் நெருதா. சிலே தேசத்தின் பிரபல இயக்குனர் Pablo Larrain இயக்கியிருக்கிறார்.சிலே கம்யூனிஸ்ட் கட்சியின் செனட்டராக நெருதா பணியாற்றினார். அதிலிருந்தே படம் துவங்குகிறது. 1946 ஆம் ஆண்டில், சிலேயின் ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரிகளின் சார்பில் நின்ற கேப்ரியல் கோன்சல்ஸ் விதேலாவிற்கு ஆதரவாக வாக்குசேகரித்தார் நெருதா. விதேலா தேர்தலில் வெற்றிபெற்றபின், சிலே கம்யூனிஸ்ட் கட்சியுடன் சண்டையிட்டு கம்யூனிஸ்டுகளைத் தனதுஅமைச்சரவையிலிருந்து வெளியேற்றினார். பின்னர் ஜனநாயக பாதுகாப்பு சட்டத்தின் …

நெருதா துரத்தப்படுகிறார் Read More »

தோற்கடிக்கப்பட்டவனின் புன்னகை

“When I know your soul, I will paint your eyes.”- Amedeo Modigliani மோடிக்லியானி (Modigliani )புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர் . 35 வயதில் இறந்து போனவர். மரணத்திற்குப் பிறகே மோடிக்லியானி பெரும்புகழை அடைந்தார். பாப்லோ பிகாசோவிற்கு இணையான திறமை கொண்டிருந்த போதும் அங்கீகாரம் கிடைக்காமலே இறந்து போனார். பெருங்குடிகாரர். போதை பழக்கம் கொண்டவர். இவரது காதல் வாழ்க்கையையும், பாரீஸில் நடைபெற்ற ஒவியப்போட்டியில் கலந்து கொள்வதற்காக முயன்ற நிகழ்வினையும் மையமாக்கி உருவாக்கப்பட்டுள்ளது மைக் டேவிஸ் …

தோற்கடிக்கப்பட்டவனின் புன்னகை Read More »

தனிமையெனும் தீவு

ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படங்களுக்கும் ஜப்பானிய அனிமேஷன் திரைப்படங்களுக்கும் இடையில் அடிப்படையிலே வேறுபாடிருக்கிறது. வெறும்பொழுதுவிஷயங்களைத் தாண்டி, காட்டை அழித்து இயற்கை வளங்களை நாசப்படுத்துவது குறித்தும். போருக்கு எதிராகவும், வாழ்வின் அடிப்படை மதிப்பீடுகள் குறித்தும், தொழில்மயமாதல், நகர்மயமாதலின் விளைவுகள் பற்றியும், சிறார்களின் வியப்பபூட்டும் கனவுகள். கற்பனைகள் பற்றியும் ஜப்பானிய அனிமேஷன் படங்கள் பேசுகின்றன. அதீத வன்முறைக்காட்சிகள். இன மதத் துவேசம் எதையும் ஜப்பானிய அனிமேஷனில் காணமுடியாது. மூத்தோர்களின் வழிகாட்டுதலும் ஞானமும் அவசியமானது. இயற்கையோடு இணைந்து வாழுதல் முக்கியம். உறுதியான நம்பிக்கையும் …

தனிமையெனும் தீவு Read More »

எழுத்தாளர்களைப் பற்றிய திரைப்படங்கள்

எழுத்தாளர்களைப் பற்றிய திரைப்படங்களாக  பார்த்துக் கொண்டுவருகிறேன். பெரும்பான்மையான படங்கள் மேலோட்டமாக உருவாக்கபட்டிருக்கின்றன. எழுத்தாளன் என்ற பிம்பம் எப்போதுமே எவரையும் புரிந்து கொள்ளாதவராக, குடும்பத்தை வெறுப்பவராக, உறவுகளில் சிக்கல் கொண்டவராகவே சித்தரிக்கபடுகிறது. எழுத்தாளர்களைப் பற்றிய படம் என்றபோதும் இவை முதன்மையாக எழுத்தாளனின் காதலைப் பேசுபவை. இந்தத் திரைப்படங்களைப் பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். 1.     பாப்லோ நெருதாவைப்பற்றிய திரைப்படம் Neruda / 2016 / directed by Pablo Larraín. 2.     ஆஸ்கார் ஒயில்ட் பற்றிய …

எழுத்தாளர்களைப் பற்றிய திரைப்படங்கள் Read More »

எழுத்தில் வாழ்பவர்கள்

ஒவியர்கள், எழுத்தாளர்கள், இசை மற்றும் நடனக்கலைஞர்களின் வாழ்க்கையை விவரிக்கும் ஆங்கிலப் படங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் ஒரு பதிப்பாசிரியரின் வாழ்க்கையை, அவரது இலக்கிய ஆர்வத்தை பற்றிப் படம் எதுவும் வெளியானதில்லை.  அவ்வகையில் GENIUS தனித்துவமான படமே. Michael Grandage இயக்கியுள்ள இப்படம் Max Perkins என்ற Scribners பதிப்பக எடிட்டருக்கும் தாமஸ் வுல்ப் என்ற அமெரிக்க எழுத்தாளருக்குமான உறவைப் பற்றியது.  அமெரிக்க இலக்கியத்தின் நிகரற்ற நாவலாசிரியர் தாமஸ் வுல்ப் என்று புகழ்ந்து போற்றுகிறார் வில்லியம் பாக்னர். தாமஸ் …

எழுத்தில் வாழ்பவர்கள் Read More »

காதலின் நெருப்பு

ஆஸ்திரேலியப் பழங்குடி இனத்தினை மையமாகக் கொண்ட Tanna என்ற திரைப்படத்தை இரவு பார்த்தேன். படம் Nauvhal மொழியில் உருவாக்கபட்டிருக்கிறது. படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் அனைவரும் பழங்குடி மக்களே. Ten Canoes என்ற ஆஸ்திரேலியத் திரைப்படத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருக்கிறேன். அற்புதமான படம். Tanna அதை நினைவுபடுத்தியது படப்பிடிப்புக் குழு ஏழு மாதங்கள் காட்டிற்குள்ளாகவே தங்கி படமாக்கியிருக்கிறார்கள். நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாத வனவாசிகளுக்குப் பயிற்சி முகாம் நடத்தி அங்கேயே ஒரு கதையை உருவாக்கி திரைக்கதை …

காதலின் நெருப்பு Read More »

கடைசி அரசன்

1206ல் நார்வேயின் அரசர் கொல்லப்படுகிறார். அவரது வாரிசான குழந்தையைக் காப்பாற்றும் விசுவாசமான வீரர்கள் பனிப்பிரதேசத்தினுள் தப்பிஒளிகிறார்கள். ஒருபுறம் சதி செய்து அரசனைக் கொன்று அரியணையில் அமர முயற்சிப்பவர்கள். மறுபக்கம் Baglers எனப்படும் திருச்சபை படைவீரர்கள் நாட்டைக் கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். இவர்களிடமிருந்து தப்பி Torstein, Skjervald என்ற இரண்டு படைவீரர்கள் எப்படிக் குழந்தையைக் காப்பாற்றுகிறார்கள் என்பதை விவரிக்கிறது The Last King திரைப்படம். 2016ல் வெளியாகியுள்ளது பனிப்பிரதேசத்தில் குழந்தையைச் சறுக்குவண்டியில் கொண்டு செல்பவர்களை எதிரிகள் துரத்துவதும், பனிப்புயலுக்குள் குழந்தை …

கடைசி அரசன் Read More »

காணாமல் போனவன்

ஆஸ்கார் விருதிற்கான சிறந்த படம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது Lion திரைப்படம். ஆஸ்திரேலியத் தயாரிப்பான இப்படத்தின் கதைக்களம் இந்தியா.  ஸ்லம் டாக் மில்லினியர் படத்தில் நடித்த தேவ் படீல் முக்கிய நடிகர். படத்தின் இயக்குனர் Garth Davis.  இது இவரது முதற்படம் A Long Way Home / Saroo Brierley என்ற புத்தகத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கபட்டுள்ளது. ஐந்து வயதில் வீட்டை விட்டு ஒடி காணாமல் போய் ஆஸ்திரேலியத் தம்பதிகளால் தத்துப்பிள்ளையாக …

காணாமல் போனவன் Read More »

இளமையின் சங்கீதம்

இரண்டு நாட்களுக்கு முன்பாக LA LA LAND என்ற ஹாலிவுட் திரைப்படத்தைச் சத்யம் திரையரங்கில் பார்த்தேன். அரங்கம் முழுவதும் இளைஞர்கள். படம் முழுவதும் கைதட்டி ரசித்துக் கொண்டாடுகிறார்கள்.  இசை நிகழ்ச்சியின் போது உற்சாகத்தில்  ஆடுவது போன்ற சந்தோஷப்பீறிடலை  படம் தருகிறது. இளமை ததும்பும் படம் என்பதற்கு இப்படம் ஒரு அத்தாட்சி. மூன்று ஆஸ்கார் விருதுகள் பெற்ற திரைப்படமான Whiplash படத்தை இயக்கிய Damien Chazelleயின் புதிய படமிது. டேமியன் முறையாக மேற்கத்திய இசை பயின்றவர். இசைக்குழு ஒன்றில் …

இளமையின் சங்கீதம் Read More »