சினிமா

பனியில் சிந்திய குருதி.

மெக்சிகோவைச் சேர்ந்த இயக்குனரான அலெஹாந்த்ரோ கான்சலஸ் இனாரித்து (Alejandro González Iñárritu) அமரோஸ் பெரோஸ், பாபேல், 21 கிராம்ஸ் போன்ற சிறந்த படங்களைத் தந்தவர். சென்ற ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியான BIRD MAN ஆஸ்கார் விருதைப் பெற்றது. தற்போது அவரும் டிகாப்ரியோவும் இணைந்து The Revenant என்ற மிகச்சிறந்த படம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். 2015 கிறிஸ்துமஸ் அன்று இப்படம் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்குள் இப்படத்தை மூன்றுமுறை பார்த்துவிட்டேன். கரடி தாக்கி உயிர்பிழைத்த வேட்டைக்காரன் Hugh …

பனியில் சிந்திய குருதி. Read More »

பாஜிராவ் மஸ்தானி

நேற்றிரவு விஜயா போரம் மாலில் புதிதாக திறக்கபட்டுள் Palazzo திரையரங்கில் பாஜிராவ் மஸ்தானி பார்த்தேன். Palazzo திரையரங்கு  8-screen கொண்டது,  சிறப்பான ஒலி ஒளி இருக்கைகளுடன் உலகத்தரத்தில் உருவாக்கபட்டுள்ளது. கூடுதல் சிறப்பு பார்வையாளர்கள் சினிமா துவங்குவதற்கு முன்பும் பின்பும் அமர்ந்து பேசுவதற்கு வசதியான இருக்கைகள். காபி ஷாப்.  வளாகம் முழுவதும் ஒரே இளைஞர் கூட்டம். பாஜிராவ் மஸ்தானி இந்திய பொழுது போக்கு சினிமாவின் பெரும்சாதனை.   பிரம்மாண்டம் என்பது வெறும் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமில்லை, எடுத்துக் கொள்ளும் கதைக்களம்,  …

பாஜிராவ் மஸ்தானி Read More »

அகிரா குரோசாவா – மார்க்கேஸ் உரையாடல்

திரைக்கதையும் அணுகுண்டும் தமிழில்: ராம் முரளி 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், உலக புகழ்பெற்ற கொலம்பிய எழுத்தாளரான காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் டோக்கியோ நகருக்கு சென்றிருந்தபோது, RHAPSODY IN AUGEST எனும் தனது புதிய படத்தை இயக்கிக் கொண்டிருந்த அகிரா குரோசாவாவை சந்தித்து உரையாடினார். மார்க்கேஸ் தனது “ONE HUNDRED YEARS OF SOLITUDE” மற்றும் “LOVE IN THE TIME OF CHOLERA” போன்ற மகத்தான கிளாசிக்கல் நாவல்களை எழுதிடும் முன்பாக, சில ஆண்டுகள் …

அகிரா குரோசாவா – மார்க்கேஸ் உரையாடல் Read More »

எவரெஸ்ட்

நேற்று மாலை எவரெஸ்ட் என்ற ஆங்கிலப்படம் பார்த்தேன், Baltasar Kormákur இயக்கியுள்ள இப்படம் 1996ல் நடைபெற்ற உண்மை நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கபட்டுள்ளது. எவரெஸ்ட் பயணம் மேற்கொள்வதற்காக நேபாளம் வந்து இறங்கும் குழு ஒன்றுடன் படம் துவங்குகிறது. நாமும் அவர்களுடன் இணைந்து பயணிக்கத் துவங்குகிறோம். பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறது இமயம், பனிபடர்ந்த அதன் கம்பீரம் நம்மை மயக்குகிறது. அடிவாரத்தில் நின்றபடியே தாங்கள் செல்ல வேண்டிய சிகரத்தை வியந்து பார்க்கிறார்கள் பயணக்குழுவினர். இமயத்தின் அழகை கண்டு நம் அகம் …

எவரெஸ்ட் Read More »

அனடோலியாவின் மலைப்பாதைகள்

கடந்த இரண்டு வாரங்களாகத் துருக்கி சினிமாவின் சிறந்த இயக்குனரான நூரி பில்கே ஜெலான் (Nuri Bilge Ceylan ) படங்களாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். சமகால உலகசினிமாவில் என்னை மிகவும் பாதித்த இயக்குனர் இவரே. அதிலும் குறிப்பாக இவரது Once Upon a Time in Anatolia ஒரு காவியம். ரஷ்ய இயக்குனரான தார்கோவெஸ்கியின் திரைப்படங்கள் ஏற்படுத்திய ஆழமான பாதிப்பிற்கு நிகரானவை நூரியின் படங்கள். Clouds of May, Uzak, Climates, Three Monkeys , Once Upon …

அனடோலியாவின் மலைப்பாதைகள் Read More »

யுத்த ரகசியம்

இறந்து போன ஒரு மனிதனால் ஒரு யுத்தத்தின் போக்கினை திசைதிருப்ப முடியுமா ? முடியும் என்கிறது The Man Who Never Was திரைப்படம்.நாவலாக வெளிவந்து வெற்றிபெற்ற கதையைப்  படமாக்கியிருக்கிறார்கள். 1956ல்  வெளியான இப்படத்தை Ronald Neame இயக்கியுள்ளார். சமீபத்தில் பார்த்த மிக சுவாரஸ்யமான திரைப்படம் இரண்டாம் உலகப்போரின் போது நேசப்படை எங்கே தனது அடுத்த தாக்குதலை நடத்தப் போகிறது எனக் கவனமாக உளவு பார்க்கிறது நாஜி ராணுவம். அதை திசைதிருப்புதவற்காக பிரிட்டீஷ் ராணுவம் இறந்த மனிதனின் …

யுத்த ரகசியம் Read More »

மின்னும் சிவப்புப் பூக்கள்

காற்றில் பனித் துகள்கள் பறந்து கொண்டிருக்கின்றன.  சுழன்று ஆடும் மரக்குதிரையின் மீது பனி பொழிகிறது. நான்கு வயது பாங் குயிங் அதை வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறான் இப்படிதான் Little Red Flowers திரைப்படம் துவங்குகிறது. கிண்டர் கார்டன் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் உலகைச் சித்தரிக்கும் அற்புதமான படமது. இத்தனை குழந்தைகளை எப்படி நடிக்க வைத்தார்கள் என ஆச்சரியமாக இருக்கிறது. அதிலும் பாங் குயிங்காக நடித்துள்ள சிறுவன் அசத்துகிறான். சீனத்திரைப்படங்கள் என்றாலே மார்ஷல் ஆர்ட்ஸ் படங்கள் அல்லது வரலாற்றையும் …

மின்னும் சிவப்புப் பூக்கள் Read More »

பொம்போலினியின் சிரிப்பு

1969ம் ஆண்டு வெளியான The Secret of Santa Vittoria படத்தை நேற்றிரவு பார்த்தேன். Stanley Kramer இயக்கியது, ஆன்டனி குயின் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ராபர்ட் கிரக்டன் நாவலை படமாக்கியிருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகள் குறித்து நிறையத் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன, இப்படமும் உலகப்போரில் முசோலினியின் வீழ்ச்சி ஒரு சிறுநகரை எப்படிப் பாதிக்கிறது என்பதையே களமாகக் கொண்டிருக்கிறது, சாண்டா விட்டோரியா வட இத்தாலியில் உள்ள சிறிய ஊர். ஒயின் தயாரிப்புக்குப் புகழ்பெற்றது. அங்கே சிறியதொரு ஒயின் விற்பனையகம் நடத்துகிறாள் …

பொம்போலினியின் சிரிப்பு Read More »

இசையின் வழி

கண்டிப்பான ஆசிரியர்களே மிகச்சிறந்த மாணவர்களை உருவாக்க கூடியவர்கள் என்பார்கள். அதிலும் இசை கற்றுக் கொள்ளும் போது சரியான குரு கிடைத்து விட்டவர்கள் பாக்கியசாலிகள். உலகப்புகழ் பெற்ற இசை மேதையான பீத்தோவனைச் சிறுவயதில் அவரது தந்தை ஒரு நாளைக்குப் பலமணிநேரம் தொடர்ச்சியாக ப்யானோ மற்றும் வயலின் வாசிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவாராம். கால் கடுக்க நின்றபடி வயலின் வாசிக்கும் போது வலி பொறுக்க முடியாமல் பீத்தோவன் அழுதால் பிரம்படி விழும். காரணம் பீத்தோவனை இளம்வயதிலே மேதையாக முன்னிறுத்த வேண்டும் என்ற …

இசையின் வழி Read More »

செகாவ் திரைப்படங்கள்

The Lady with the Dog https://youtu.be/7Jq0C9JV7W4 Three Days of Rain https://youtu.be/B-Mgb9KHQpE Romance with a double bass-1911 silent film https://youtu.be/CUAHAeQEH2c Romance with a Double Bass – colour https://youtu.be/2vGxAaneZwo THREE SISTERS by Anton Chekhov. https://youtu.be/GtTnUGF2XtU The Seagull – 1975 – Anton Chekhov https://youtu.be/qiPfPzt8azc A Joke – Short Film Adapted from Anton Chekhov https://youtu.be/JnKgUgpr288 Being: a movie based …

செகாவ் திரைப்படங்கள் Read More »