சினிமா

லெபனான்

சமீபத்தில் பார்த்த இஸ்ரேலியத்திரைப்படம் லெபனான், முழுப்படமும் ஒரு பீரங்கி வண்டிக்குள்ளாகவே எடுக்கப்பட்டிருப்பது இதன் முதற்சிறப்பு, பீரங்கிவண்டியை ஒரு வலிமையான போர்கருவியாக மட்டுமே அறிந்து வைத்திருந்த நமது பொதுப்புத்தியை இப்படம் கேள்விக்குள்ளாக்குகிறது, யுத்த முனையில் பீரங்கிகள் கடந்து போவதையும் அவை இலக்குகளைத் தாக்கி அழிப்பதையும் பல படங்களில் பார்த்திருக்கிறோம்,  ஆனால் பீரங்கி வண்டி என்பது ஒரு தனியுலகம், அந்த வாகனத்தினுள் நாலு போர்வீரர்கள் பகலிரவாகத் தங்கியிருக்கிறார்கள், இலக்கைக் குறிவைத்துத் தாக்க ஒருவர், வண்டியை இயக்க மற்றவர், யாரைத் தாக்குவது …

லெபனான் Read More »

அழகே அழகு

சில திரையிசைப் பாடல்கள் கேட்ட முதல்நாளில் இருந்து இன்று வரை அதன் ஈர்ப்பை அப்படியே வைத்திருக்கின்றன, அதில் ஒன்று ராஜபார்வை படத்தில் இடம் பெற்ற ஜேசுதாஸ் பாடியுள்ள அழகே அழகு தேவதை பாடல் கவியரசர்  கண்ணதாசன் எழுதிய இப்பாடல் பாதாதி கேசம் பெண்ணை வர்ணிக்கும் மரபில் உருவானது, பாடலை ரசித்து அழகாக எழுதியிருக்கிறார் கவியரசர், எளிமையும், வியப்பும் ஒருங்கே கொண்ட பாடலது, கண்ணை மூடிக் கொண்டுவிட்டால் மனதில் ஒரு பெண்உருவம் தோன்றி பாடல் கேட்பவரை தன்வசமாக்குகிறது, ராஜபார்வை …

அழகே அழகு Read More »

கம்பளிபூச்சியின் மனைவி

நான்காவது முறையாக நேற்றிரவு CATERPILLAR என்ற ஜப்பானிய படத்தைப் பார்த்தேன், சமீபத்தில் ஒரு திரைப்படம் என்னை இவ்வளவு உலுக்கியதில்லை, சென்னை திரைப்பட விழாவில் இடம்பெற்ற முக்கியமான படம் என்று சொல்லி ஒரு நண்பர் அதன் டிவிடியை தந்திருந்தார், கடந்த ஒரு மாத காலத்தில் இதை நான்காவது முறையாகப் பார்த்துவிட்டேன் 1930களில் நடைபெற்ற ஜப்பான் சீன யுத்தத்தில் கலந்து கொண்ட குரோகவா என்ற ஜப்பானிய ராணுவ வீரன் பெண்களைத் தாக்கி வன்புணர்ச்சி செய்து கொல்கிறான், ரத்தவெறி அவனைப் பிடித்தாட்டுகிறது, …

கம்பளிபூச்சியின் மனைவி Read More »

என்றுமிருக்கும் சலேரி

மிலாஸ் போர்மனின் அமேடியஸ் திரைப்படம் எனக்கு மிகவும் விருப்பமானது, 1984ல் வெளியான இப்படத்தை இருபத்தைந்து தடவைக்கும் மேலாகப் பார்த்திருக்கிறேன், உலக சினிமாவில் இது ஒரு இசைக்காவியம்,  எட்டு ஆஸ்கார் விருதுகள் உள்ளிட்ட நாற்பது விருதுகளைப் பெற்ற படமிது, இசைமேதை மொசார்ட்டின் வாழ்வினை விவரிக்கும் இப்படம், திரைக்கதை எழுத விரும்புகின்றவர்களுக்கு ஒரு ஆதாரப்பாடம் என்றே சொல்வேன், ஒரு இசை ஆளுமையைப் பற்றிய படத்தை பீட்டர் ஷெபர்ஸ் இது போன்ற திரைக்கதை வடிவத்தில் எழுதியிருப்பது அவரது தனித்திறனையே காட்டுகிறது,  மொசார்ட்டின் …

என்றுமிருக்கும் சலேரி Read More »

பயம் வெறும் கற்பனையில்லை

அகிரா குரசேவா படங்களில் அதிகம் பேசப்படாத படம்,  1955ல் வெளியான I Live In Fear , இதே படம் Record of a Living Being என்ற தலைப்பிலும் வெளியாகி உள்ளது,  அணுஆயுத வீச்சால் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகியில் பல லட்சம் மக்கள் அழிவிற்கு உள்ளானார்கள், யுத்தம் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பின்னும் அணுஆயுதங்கள் குறித்த பயம் ஜப்பானின் எளிய மனிதர்கள் மனதிலிருந்து மறையவேயில்லை என்பதை மிக வலிமையாக, உண்மையாக குரசேவா இப்படத்தில் சொல்லியிருக்கிறார், செவன் சாமுராயின் …

பயம் வெறும் கற்பனையில்லை Read More »

உளவாளிகளின் உலகம்

நேற்று சென்னையில் உள்ள அரசு திரைப்படக் கல்லூரியில் Tinker Tailor Soldier Spy என்ற பிரிட்டீஷ் திரில்லர் படம் திரையிடப்பட்டது, அத்திரைப்படம் பற்றி நான் ஒரு விரிவுரை நிகழ்த்தினேன், ப்யூஜி பிலிம்ஸ் நிறுவனம் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது என்னோடு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு படத்தின் ஒளிப்பதிவு மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்துப் பேசினார், முன்னதாக மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்த ஏழு நிமிஷக் குறும்படம் ஒன்று ஒளிபரப்பபட்டது, சர்க்கஸ் என்ற பிரிட்டீஷ் …

உளவாளிகளின் உலகம் Read More »

யுத்த மலர்கள்

இதுவரை சீனாவில் தயாரிக்கபட்ட திரைப்படங்களில் மிக அதிகமான பொருட்செலவாக  100 மில்லியன் முதலீட்டில் உருவாக்கபட்டுள்ள  ஷாங் யுமுவின் (Zhang Yimou ) புதியபடமான The Flowers of  War  யைப் பார்த்தேன், ஷாங் யுமு சீனாவின் முக்கிய இயக்குனர், இவரது Raise the Red Lantern.The Story of Qiu Ju, To Live, Not One Less,The Road Home,  Riding Alone for Thousands of Miles போன்ற முந்தைய படங்களை மிகவும் விரும்பிப் பார்த்திருக்கிறேன் …

யுத்த மலர்கள் Read More »

ஒளிரும் மௌனம்

மௌனப்படமாக முற்றிலும் கறுப்புவெள்ளையில் உருவாக்கபட்ட The Artist படத்தை நேற்றிரவு பார்த்தேன், மிகுந்த மனஎழுச்சியை உருவாக்கிய அற்புதமான திரைப்படமது, உலகெங்கும் டைட்டானிக் திரைப்படம் வெளியான போது உருவான உற்சாக அலையை மீண்டும் ஒரு முறை இப்படம் உருவாக்கியிருக்கிறது மௌனப்பட யுகம், கறுப்பு வெள்ளையுகம், இரண்டுமே மறைந்து போய் சினிமா வண்ணத்திலும் தொழில்நுட்ப வசதியில் அதிக பட்ச  சாத்தியங்களை உருவாக்கிவரும் இன்றைய சூழலில், மீண்டும் முழுமையாக ஒரு கறுப்புவெள்ளைப் படத்தை உருவாக்கி பார்வையாளர்களை கட்டிப்போட்டு பிரமிக்க வைத்திருப்பதே இதன் …

ஒளிரும் மௌனம் Read More »

சிரிப்பு விருந்து

பீட்டர் செல்லர்ஸின் The Party என்ற படத்தினை நீண்டநாட்களுக்குப் பிறகு மறுபடியும் நேற்றிரவு பார்த்தேன், பீட்டர் செல்லர்ஸ் எனக்கு விருப்பமான நகைச்சுவை நடிகர், அவரை வூடி ஆலனோடு ஒப்பிடலாம், ஆனால் வூடி ஆலனிடம் உள்ள அறிவார்ந்த நகைச்சுவை இவரிடம் கிடையாது, சாப்ளினோடு ஒப்பிட்டால் சாப்ளினின் உடல்மொழி இவருக்கு வராது, இது ஒரு தனிவகை, மலையாள சினிமாவில் இடம் பெறும் நகைச்சுவைக் காட்சிகளை ரசித்தவர்களுக்கு அந்த வகை காமெடியின் ஆதர்ச நாயகன் பீட்டர் செல்லர்ஸ் என்று புரியும், ஒரு …

சிரிப்பு விருந்து Read More »

தங்க வேட்டை

அமெரிக்க எழுத்தாளரான ஜாக் லண்டனின் (Jack London) ஒயிட் பேங்க் நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கபட்ட ஹாலிவுட் படத்தை நேற்றுப் பார்த்தேன் ஜாக் லண்டனின் கானகத்தின் குரல் (The Call of the Wild) என்ற நாவல் மிகவும் பிரபலமானது, அந்த நாவலின் தொடர்ச்சியைப் போல அமைந்துள்ளது ஒயிட் பேங் கானகத்தின் குரல் நாவலில் பழக்கபடுத்தப்பட்ட நாயின் உள்ளே மறைந்திருக்கும் உக்கிரமான மனநிலையை, இயல்பான மூர்க்கத்திற்குத்  திரும்ப முற்படும் ஆசையை எழுதிய ஜாக் லண்டன், அதற்கு நேர்எதிரான …

தங்க வேட்டை Read More »