சினிமா

கடவுளின் செய்தி

இந்த உலகிற்கு கடவுள் அவ்வப்போது ஏதாவது செய்தி அனுப்பிக் கொண்டேயிருக்கிறார், அந்தச்  செய்தி, யார் வழியாக, எப்படி வருகிறது என்பதைக் கண்டு கொள்வது கடினமானது என்று ஆப்ரிக்க மக்கள் நம்புகிறார்கள் ஒரு பெண் சிங்கத்திற்கும் மான்குட்டிக்கும் இடையில் உருவான பாசத்தைப் பற்றிய  Heart of lioness என்ற அனிமல் பிளானெட்டின் ஆவணப்படத்தில் கென்யாவை சேர்ந்த ஒரு பழங்குடி மனிதன் பெண்சிங்கம் மான்குட்டியை தனது பிள்ளையைப் போல நேசிப்பது என்பது  கடவுள் இந்த உலகிற்குச் சொல்லி அனுப்பிய செய்தியே …

கடவுளின் செய்தி Read More »

கன்பூசியஸ்

சீனாவின் புகழ்பெற்ற தத்துவ ஞானியான கன்பூசியஸின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கபட்ட கன்பூசியஸ் என்ற திரைப்படத்தைப் பார்த்தேன் ஆழமற்ற, மேலோட்டமான திரைப்படம், கன்பூசியஸின் அரசியல் வாழ்க்கையைப் பிரதானப்படுத்தி அவரது ஞானத்தேடுதலை அதிகம் கண்டுகொள்ளாமல் நகர்ந்து போய்விட்டது திரைப்படம் சாக்ரடீஸ் போலவே கன்பூசியஸ் இளைஞர்களிடம் போதனை செய்திருக்கிறார், கல்விநிலையத்தை உருவாக்கி அங்கே சமகாலப் பிரச்சனைகள் குறித்த வாதபிரதிவாதங்களை நிகழ்த்தியிருக்கிறார், அதிகாரத்துடன் மோதி தனது கருத்துகளில் உறுதியாக நின்றிருக்கிறார். கன்பூசியஸ்க்குப் பன்முகங்களிருக்கின்றன, அவர் ஒரு தேர்ந்த அரசியல்வாதி, …

கன்பூசியஸ் Read More »

பூவண்ணம் போல நெஞ்சம்

அழியாத கோலங்கள் திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் பதின்வயதெனும் அடிவானத்தில் பறக்கத் துவங்கிவிடுகிறேன். நாம் ஒருபோதும் திரும்பிச் செல்ல முடியாத அந்த அடிவானம் மனதின் வெகு தொலைவில் இருப்பதை உணர்ந்தபோதும் நாமாகச் சென்று அங்கே இளைப்பாறுவதற்கு முடியாது. ஒரு மாயக்கம்பளம் நம்மை அங்கே அழைத்துக் கொண்டு போனால் மட்டுமே சாத்தியம். இப்படம் அப்படியான ஒரு மாயக் கம்பளம்போல நம்மை மீண்டும் விடலைப் பருவத்தின் கனவுலகிற்குள் கொண்டு போய்விடுகிறது. கலையின் தேவையே இது போன்று நாம் திரும்பிச் செல்ல …

பூவண்ணம் போல நெஞ்சம் Read More »

யுத்தகால ரயில்

ரயில் பயணத்தைக்  கதைக்களமாகக் கொண்டு நிறையப்படங்கள் வெளிவந்துள்ளன, அந்த வரிசையில் மிக முக்கியமானதொரு படம் John Frankenheimer இயக்கிய The Train, 1964ம் ஆண்டு வெளியான கறுப்பு வெள்ளைப் படமிது, இரண்டாவது உலக யுத்த காலத்தில் புகழ்பெற்ற ஒவியங்களைக் கடத்திச் செல்லும் ஜெர்மனிய ரயில் ஒன்றினை தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொள்ளபடும் தீவிர முயற்சிகளே படத்தின் கதைக்கரு, 133 நிமிஷங்கள் ஒடுகின்ற இப்படத்தில் ரயில் கிளம்பிய மறுநிமிசம் முதல், கடைசிக்காட்சி வரை நம்மால் அடுத்து என்ன நடக்குமென என்று …

யுத்தகால ரயில் Read More »

திறக்கப்படாத கதவு

The Door என்ற ஹங்கேரியத் திரைப்படம் ஒன்றினைப் பார்த்தேன்,  இஸ்த்வான் ஸாபோ (István Szabó)இயக்கியது, ஸாபோ ஹங்கேரியின் மிக முக்கியமான, மூத்த தலைமுறை இயக்குனர். இவரது திரைப்படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கின்றன, இவரது மெபிஸ்டோ திரைப்படம் சிறந்த அயல்மொழித் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதினைப் பெற்றுள்ளது, ஸாபோவின் திரைமொழி கவித்துவமானது, புறக்கணிப்பும் அதனால் உருவாகும் அவமானமும் தான் அவரது படங்களின் மையப்பொருள், அடக்கிவைக்கபட்ட மனஉணர்ச்சிகளின் கொந்தளிப்பையும், உறவுகளின் ஊசலாட்டத்தையும் ஸாபோ மிகவும் திறமையாகக் …

திறக்கப்படாத கதவு Read More »

நடமாடும் அங்காடி

The grocer’s son என்ற பிரெஞ்சுபடத்தை நேற்றிரவு பார்த்தேன், நீண்டநாட்களுக்குப் பிறகு புத்துணர்வு ஊட்டும் படம் ஒன்றினைக் கண்ட சந்தோஷம் மனதில் நிரம்பியது, பலசரக்கு கடைக்காரனின் மகன் என்ற தலைப்பே கதையைச் சொல்லிவிடுகிறது, எளிமையான கதை, அதை படமாக்கியுள்ள விதம் கவித்துவமாக உள்ளது, குறிப்பாக தெற்குபிரான்சின் பசுமையான கிராமப்புறச் சாலைகள், சின்னஞ்சிறிய கிராமங்கள், பண்ணை வீடுகள் என படம் நம்மை இன்னொரு உலகிற்கே அழைத்துப் போகிறது .படத்தின் இயக்குனர் Eric Guirado புகழ்பெற்ற இளம் ஆவணப்பட இயக்குனர், …

நடமாடும் அங்காடி Read More »

காந்தி வழிகாட்டுகிறார்

2009 ஆண்டு வெளியான ஹிந்திப்படம் Road to Sangam , வழக்கமான பொழுது போக்குப்படங்களுக்கு இடையில் இதன் வருகை கவனிக்கப்படாமலே போய்விட்டது, காந்தி குறித்து இந்தியாவில் எடுக்கபட்ட திரைப்படங்களில் முக்கியமான படமிது இந்தப்படம் மூன்று தளங்களில் செயல்படுகிறது, ஒன்று, காந்தி குறித்து இன்றைய தலைமுறையினரிடம் உள்ள வெறுப்பை, அதன் பின்னுள்ள அரசியலை, அறியாமையைக் கவனப்படுத்துகிறது, இரண்டாவது இஸ்லாமிய சமூகம் மகாத்மா காந்தியை எவ்வாறு மதிப்பிடுகிறது என்பதை யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறது, மூன்றாவது, மதக்கலவரங்கள் உருவாகின்ற சூழலில் காந்தியின் முக்கியத்துவம் …

காந்தி வழிகாட்டுகிறார் Read More »

ஹிட்லரின் பலூன்

தி கிரேட் டிக்டேடர் படத்தில் ஹிட்லராக நடித்துள்ள சாப்ளின், காற்று அடைத்த பலூனாக உள்ள உலக உருண்டை ஒன்றை வைத்துக் கொண்டு விளையாடும் காட்சியிருக்கிறது, இரண்டரை நிமிஷக்காட்சியது, இதற்கு நிகராக பகடி செய்யும் காட்சி இதுவரை எடுக்கப்படவில்லை தனிமையில் இருக்கவிரும்புவதாகச் சொல்லி ஹிட்லர் திரைச்சீலை ஒன்றிலிருந்து சரிந்து இறங்குகிறான், அறையில் உள்ள உலக உருண்டையின் அருகில் சென்று வியப்போடு, அதிசயமான பொருளைக் காண்பது போலப் பார்க்கிறான், ஆசையாகத் தொடுகிறான், இடது கையில் எடுத்துப் பறக்கவிடுகிறான், பறந்து வரும் உலகை …

ஹிட்லரின் பலூன் Read More »

மண்டேலாவின் நாட்கள்

நெல்சன் மண்டேலா ராபின் தீவுச் சிறைச்சாலையில் இருந்த போது அவருக்கும் சிறையின் தணிக்கை அதிகாரியாக இருந்த ஜேம்ஸ் கிரிகோரி என்ற வெள்ளைகாரருக்குமான நட்பை மையமாகக் கொண்டு உருவாக்கபட்ட Goodbye Bafana என்ற படத்தைப் பார்த்தேன், வழக்கமான ஹாலிவுட் படங்களில் ஒன்று தான் இதுவும் என்பது  போலத் துவங்கி மெல்லப் படம் என்னை முழுமையாக உள் இழுத்துக் கொண்டது நெல்சன் மண்டேலா பற்றி இரண்டு படங்களை முன்பாக பார்த்திருக்கிறேன்  ஒன்று மண்டேலா என்ற டாகுமெண்டரி, மற்றொன்று மார்கன் ப்ரீமென் …

மண்டேலாவின் நாட்கள் Read More »

சிட்னி சாப்ளின்

சாப்ளினைத் தெரிந்த பலருக்கும் அவரது சகோதரன் சிட்னி சாப்ளினைத் தெரியாது, ஒரு நிழலைப்போல சாப்ளின் கூடவே இருந்து அவரது வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் சிட்னி, சாப்ளினுக்குக் கிடைத்த  திரைப்பட வாய்ப்புகள், மற்றும் அவரது பொருளாதார வளர்ச்சி யாவும் சிட்னி உருவாக்கிக் கொடுத்ததே, சார்லி சாப்ளினை விட நான்கு வயது மூத்தவர் சிட்னி, அவரது அப்பா யார் எனத்தெரியவில்லை, அம்மா ஹானா தனது பதினாறாவது வயதில் ஹவாக்ஸ் என்ற இளைஞரோடு பழகித்  திருமணம் செய்து கொள்ளாமலே அவரைப் …

சிட்னி சாப்ளின் Read More »