சினிமா

நெருப்பைத்தேடி

நெருப்பை பெண்கள் அளவிற்கு ஆண்கள் நுட்பமாக அறிந்திருக்கவில்லை, ஆணிற்கு நெருப்பு என்பது வியப்பான ஒரு பொருள், அல்லது வெறும்பயன்பாட்டு பொருள் .யாகத்தின் போது கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் முன்னமர்ந்து மந்திரஉச்சாடனம் பொங்கி வழிய ஆண் நெருப்பை ஆராதனை செய்கிறான், பெண்களோ நெருப்பை ஸ்நேகப்பூர்வமாகப் பார்க்கிறார்கள், பலவேளைகளில் நெருப்போடு பேசுகிறார்கள், சமையலுக்கு கை கொடுக்கச்சொல்லி கூப்பிடுகிறார்கள், நெருப்பு வராமல் புகை மட்டுமே எழும்போது திட்டுகிறார்கள்.  விளக்கில் எரியும் நெருப்பிற்கும் அடுப்பில் எரியும் நெருப்பிற்கும் உள்ள பேதம் அவர்களுக்கு நன்றாகத் …

நெருப்பைத்தேடி Read More »

டின்டின்

Tintin and I என்ற பிரெஞ்சு டாகுமெண்டரிப் படத்தை பார்த்தேன், Anders Høgsbro Østergaard  இயக்கியது, சமீபமாக டின்டின் திரைப்படம் வெளியாகி பரபரப்பாகப் பேசப்படும் சூழலில் டின்டினை வரைந்த பெல்ஜிய ஒவியரான ஹெர்ஜி பற்றிய இந்த ஆவணப்படத்தை இணையத்தில் தேடிவாங்கினேன். எனது பள்ளிநாட்களில் டின்டின் காமிக்ஸின் ரசிகனாக இருந்தேன், அந்த நாட்களில் டின்டின் வாங்குவதற்காக மதுரைக்குப் போய்வர வேண்டும், அதுவும் எளிதாக கிடைத்துவிடாது, பலநேரம் வாடகை நூலகம் ஒன்றில் இருந்து தேடிஎடுத்து  வாசித்திருக்கிறேன், டின்டின் என்ற சிறுவனைப் பிடித்ததிற்கு …

டின்டின் Read More »

மகத்தான மந்திரிகுமாரி

தமிழ்சினிமாவில் கதாநாயகன் என்ற புனிதபிம்பத்தை முற்றிலும் மாற்றிய இரண்டு திரைப்படங்கள் மந்திரிகுமாரி, மற்றும் ரத்தக்கண்ணீர். இரண்டையும் பத்து முறைகளுக்கு மேலாகப் பார்த்திருப்பேன். மந்திரிகுமாரி 1950ல் வெளியானது. ரத்தக்கண்ணீர் 1954 ம் ஆண்டு வெளியாகி உள்ளது. இரண்டின் கதாநாயர்களும் தன்னுடைய விருப்பதின் பாதையில் தன்னை உருவாக்கி கொண்டவர்கள். மந்திரி குமாரியில் வரும் பார்த்திபன் கொலை, கொள்ளைகளை விரும்பிச் செய்கிறான். கொலை தனது கலை என்று உரத்து சொல்கிறான். ரத்தகண்ணீரில் வரும் மோகன் வெளிநாட்டில் படித்து திரும்பிவந்து குடும்பம் சமூகம் …

மகத்தான மந்திரிகுமாரி Read More »

இது அமெரிக்க சினிமா இல்லை

இன்டர்நேஷனல் தமிழ் பிலிம் அகாதமி மற்றும் செவன்த்சேனல் கம்யூனிகேஷன்ஸ் இணைந்து நடத்தும் சென்னை உலகத்திரைப்படவிழா நிகழ்வின் துவக்கவிழாவில் கலந்து கொண்டேன், நான் முன்னிலை வகிக்க, இயக்குனர் வசந்தபாலன் படவிழாவைத் துவங்கி வைத்தார். தயாரிப்பாளர் செவன்த் சேனல் நாராயணன் உலகசினிமாவின் தேர்ந்த ரசிகர்,   அவர் தனது சொந்த முயற்சியில் ஆண்டுதோறும் சென்னையில் உலகத் திரைப்படவிழாவினை நடத்துகிறார், மாணவர்களும், உதவி இயக்குனர்களும், சினிமா ரசிகர்களும் பயன்பெற வேண்டும் என்பதே தனது முக்கியமான நோக்கம் என்கிறார் நாராயணன், இந்தத் திரைப்பட விழா …

இது அமெரிக்க சினிமா இல்லை Read More »

மச்சான்

2008ம் ஆண்டு வெளியான மச்சான் (Machan) என்ற சிங்களத் திரைப்படம் ஒன்றினை சமீபத்தில் பார்த்தேன், சென்னை திரைப்பட விழா, திருவனந்தபுரம் திரைப்பட விழா இரண்டிலும் இப்படம் மிகுந்த வரவேற்பு பெற்றது என்று ஒரு நண்பர் சொல்லி படத்தைக் காணும்படியாக தந்திருந்தார், மச்சான் திரைப்படத்தின் தயாரிப்பாளர் Death on a full Moon Day போன்ற சிறந்த சிங்களப் படங்களை இயக்கிய பிரசன்ன விதநாயகே, படத்தின் இயக்குனர் இத்தாலியை சேர்ந்த உபர்ட்டோ பசோலினி, படத்தயாரிப்பில் ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு …

மச்சான் Read More »

பறவைக்கோணம் 2

சொன்னது நீ தானா. ஊடகக்கலை பயிலும் மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்விற்காகச் சென்றிருந்தேன், விவாதம் ஹிட்ச்காக்  திரைப்படங்களைப் பற்றித் திரும்பியது, ஏன் தமிழில் சஸ்பென்ஸ் திரில்லர் வகை திரைப்படங்கள் அதிகம் வருவதில்லை என்று விவாதிக்கத் துவங்கிய போது, ஒரு மாணவர் தமிழில் உங்களுக்குப் பிடித்தமான திரில்லர் இயக்குனர் யார் என்று கேட்டார், எஸ் பாலச்சந்தர் என்று சொன்னேன், மாணவர்கள் உடனே கே.பாலச்சந்தரை நினைவில் கொண்டு அவர் என்ன திரில்லர் படங்கள் எடுத்திருக்கிறார் என்று மறுகேள்வி கேட்டார்கள், அந்த …

பறவைக்கோணம் 2 Read More »

மறுக்கப்படும் பிரார்த்தனைகள்

அமெரிக்காவில் வாழும் சீனர்களைப்பற்றி நிறைய நல்ல திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன, ஒருவகையில் அமெரிக்க சினிமாவின் தனி வகைமையாகவே இந்தத் திரைப்படங்கள் அங்கீகரிக்கப்பட்டுவிட்டன, சமீபத்தில் வயானே வாங் Wayne Wang இயக்கிய A Thousand Years of Good Prayers என்ற திரைப்படத்தைப் பார்த்தேன், கலங்க வைக்கும் உணர்ச்சிப்பூர்வமான திரைப்படமிது, படம் மெதுவாகவே துவங்குகிறது, காட்சிபடுத்தும் முறையும் கதாபாத்திரங்களின் உணர்ச்சி வெளிப்பாடும் ஜப்பானிய திரைமேதை யசுஜிரோ ஒசுவின் திரைப்படம் ஒன்றைக் காண்பதைப் போல உணரச்செய்தது, அதனாலே அந்தப் படம் மீது …

மறுக்கப்படும் பிரார்த்தனைகள் Read More »

அது தான் சாப்ளின்

சினிமாவில் மௌனம் என்பதே முற்றிலும் புறக்கணிக்கபட்ட ஒன்றாகிவரும் சூழலில் மொத்தப் படத்தையும் உரையாடல்களின் உதவியில்லாமலே ரசிக்க முடியும் என்ற மௌனப்படக்காலம்  இன்றைய சினிமாப் பார்வையாளனுக்கு வியப்பூட்டும் புதிர், அதிலும் நகைச்சுவை என்றாலே வாய்ஒயாமல் பேசிக் கொண்டேயிருப்பது என்ற சமகாலச் சூழலில் சாப்ளினை நினைவூட்டவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளை மறுபடி நினைவுறுத்துவதும் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது, சாப்ளின் நடித்த முதல் திரைப்படம் மேக்கிங் எ லிவிங், மௌனப்படமான இதை கீஸ்டோன் ஸ்டுடியோதான் தயாரித்தது.  அப்போது சாப்ளினுக்கு இருபத்திமூன்று …

அது தான் சாப்ளின் Read More »

ரோஷாமானில் மழை பெய்து கொண்டிருக்கிறது

அகிரா குரசோவாவின் ரோஷாமானை மறுபடியும் நேற்றிரவில் பார்த்தேன், திரைப்பட விழாக்களில், பயிலரங்குகளில், தனிக்காட்சிகளில் என அந்தப்படத்தை இருபதுக்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன், இன்றும் அதன் வசீகரம் குறையாமலே இருக்கிறது. இந்த முறை படம் பார்த்தது முற்றிலும் மாறுபட்ட அனுபவம் தருவதாக இருந்தது, காட்சிகள், கதை சொல்லும்முறை யாவும் கடந்து போய் படத்தின் ஆதாரத்தொனியாக உள்ள அறத்தைப் பற்றியே மனம் ஆராய்ந்து கொண்டிருந்தது, ஒருவகையில் அது அகிரா குரசோவாவின் திரைப்படங்களில் எது முதன்மையாகக் கவனம் கொள்ளப்படுகிறது என்பதை அடையாளம் …

ரோஷாமானில் மழை பெய்து கொண்டிருக்கிறது Read More »

ஜோன் வலியோடு பேசுகிறாள்

சினிமாவின் அழியாத பிம்பங்களாகச் சில முகங்களே நினைவில் தங்கியிருக்கின்றன, அப்படியான ஒரு முகம் மரியா பல்கெனடியுடையது,(Maria Falconetti) அவள் நடித்த The Passion of Joan of Arc சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம், அதை இயக்கியவர் டேனிஷ் இயக்குனர் கார்ல் டிரையர்,(Carl Th. Dreyer) மௌனப்படமான  ஜோன் ஆப் ஆர்க்கில் ஜோனாக பல்கெனடி நடித்திருக்கிறார், சினிமா எவ்வளவு வலிமையான காட்சி ஊடகம் என்பதை அறிந்து கொள்ள இந்த ஒரு படமே சாட்சி, உரையாடலின்றி காட்சிகளின் …

ஜோன் வலியோடு பேசுகிறாள் Read More »