இசையறியும் ஒட்டகம்.
சமீபத்தில் நான் பார்த்த திரைப்படங்களில் மிக சிறந்தது என்று இதையே குறிப்பிடுவேன். The Story of the Weeping Camel ஒரு ஆவணப்படம். இதைஇயக்கியிருப்பவர் Byambasuren Davaa என்ற இளம் திரைப்படக்கல்லூரி மாணவி. மங்கோலியாவின் கோபி பாலைவனத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் நடைபெறும் சிறிய சம்பவமே இந்த ஆவணப்படத்தின் அடித்தளம். கடுமையான வெக்கையும் கடுமையான குளிரும் கொண்ட கோபி பாலைவனத்தில் மங்கோலிய நாடோடி இனமக்கள் வசிக்கிறார்கள். அவர்களது பிரதான தொழில் ரோமத்திற்கான ஆடு வளர்ப்பது மற்றும் ரோமங்களைப் பின்னி …