நினைவின் சிறகுகள்.
கவிஞர்களின் வாழ்வை முதன்மைப்படுத்தி உருவாக்கபட்ட இரண்டு படங்கள் எனக்கு எப்போதும் பிடித்தமானவை. ஒன்று நோபல்பரிசு பெற்ற கவிஞரான பாப்லோ நெருதாவின் தலைமறைவுகால வாழ்வில் அவருக்கும் ஒரு தபால்காரருக்குமான நட்பைச் சொல்லும் Il Postino என்ற இத்தாலியப்படம். Michael Radford இயக்கத்தில் 1994ம் ஆண்டு வெளியானது. படம் முழுவதும் கவித்துவமான உரையாடல்கள். இசையும் ஒளிப்பதிவும் நடிப்பும் அற்புதமாக அமைந்த படம். ஒரு கவிஞன் எப்படி உருவாகிறான் என்பதற்கு இந்தப் படம் ஒரு சாட்சி. மற்றொரு படம் Darioush Mehrjui …